ஹெச்சிஎல்லின் பலே திட்டம்.. ஆஸ்திரேலியாவின் DWS நிறுவனத்தினை வாங்க திட்டம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம், ஆஸ்திரேலியாவின் DWS லிமிடெட் நிறுவனத்தினை வாங்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தனது டிஜிட்டல் சேவையினை விரிவுபடுத்தும் பொருட்டு, ஆஸ்திரேலியாவின் DWS லிமிடெட் நிறுவனத்தினை 115.8 மில்லியன் டாலருக்கு வாங்க உள்ளதாக ஹெச்சிஎல் நிறுவனம் அறிவித்துள்ளது.

 DWS குழுமம்

DWS குழுமம்

DWS குழுமம் 2020ம் நிதியாண்டின் முடிவில் 122.9 மில்லியன் டாலர் வருவாயினை பதிவு செய்துள்ளது. இது மெல்போர்ன், சிட்னி, அடிலெய்ட், பிரிஸ்பேன் மற்றும் கான்பெர்ரா உள்ளிட்ட இடங்களில், 700க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கொண்டு இயங்கி வருகின்றது. இது டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன், அப்பிளிகேஷன் டெவலப்மென்ட் மற்றும் டிஜிட்டல் சேவை மற்றும் புரோகிராமிங், புராஜக்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல சேவைகளையும் வழங்கி வருகின்றது.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

ஹெச்சிஎல் டெக்னாலஜியின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் நிர்வாக துணைத் தலைவரும், மேலாளருமான மைக்கேல் ஹார்டன் இது குறித்து கூறுகையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஹெச்சிஎல்லின் இந்த விரிவாக்கத்திற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் இந்த ஒருங்கிணைந்த இந்த வளர்ச்சி, எங்களின் டிஜிட்டல் வளர்ச்சியினை இன்னும் ஊக்கப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

டிசம்பருக்கும் கையகப்படுத்தல் முடிவடையலாம்

டிசம்பருக்கும் கையகப்படுத்தல் முடிவடையலாம்

ஹெச்சிஎல் இந்த பிராந்தியத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முதலீடு செய்து வருகிறது. இது டிஜிட்டல் வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது என்றும் ஹார்டன் தெரிவித்துள்ளார். தற்போது கான்பெர்ரா, சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் மற்றும் பெர்த் உள்ளிட்ட நகரங்களில் 1,600 ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலை டி.டபள்யூ.எஸ் குழுமத்துடனான இந்த ஒப்பந்தம் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஹார்டன் கூறியுள்ளார்.

டி.டபள்யூ.எஸ் குழுமம் என்ன சொல்கிறது?

டி.டபள்யூ.எஸ் குழுமம் என்ன சொல்கிறது?

இதே டி.டபள்யூ.எஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான டேனி வாலிஸ் கூறுகையில், டி.டபள்யூ.எஸ் குழுமம், ஹெச்சிஎல்லுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கையகப்படுத்தல் அனைத்து பங்கு தாரர்களுக்கும், ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், வர்த்தக பங்காளிகளுக்கும், ஒரு நல்ல லாபத்தினை கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HCL plans to acquires Australian IT firm DWS ltd for 115.8 million dollars

HCL technologies plans to acquire Australian IT firm DWS ltd for 115.8 million dollars, this transaction may complete December 2020.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X