HCL ரோஷினி நாடார் கொடுத்த சூப்பர் அப்டேட்.. ஊழியர்கள் செம ஹேப்பி.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் உலகம் மிக வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் பணவீக்கமும் வேகமாக உயர்ந்து வருகின்றது. ஆனால் அந்தளவுக்கு சம்பளம் உயர்ந்து வருகின்றதா? எனில் நிச்சயம் இல்லை.

ஆக நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் ஊழியர்கள் கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டிய நிலைக்கு மத்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே , தனக்கு கிடைக்கும் பகுதி நேரத்தில் மற்றொரு நிறுவனத்தில் பணி புரிவது அல்லது கூடுதல் வருமானத்திற்காக வேலை செய்வதை பார்த்திருக்கலாம். இதனை மூன்லைட்டிங் என்று கூறுவார்கள்.

HCL ஷிவ் நாடார்-ஐ விஞ்சிய கெளதம் அதானி.. நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா..?HCL ஷிவ் நாடார்-ஐ விஞ்சிய கெளதம் அதானி.. நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா..?

ஐடி நிறுவனங்கள் எதிர்ப்பு

ஐடி நிறுவனங்கள் எதிர்ப்பு

இந்த மூன்லைட்டிங் காரணமாக சமீபத்திய மாதங்களுக்கு முன்பு ஐடி துறையில் பெரும் சர்ச்சையே வெடித்தது. விப்ரோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையாக எதிர்ப்பினை தெரிவித்தன. குறிப்பாக மூன்லைட்டிங் காரணமாக பல ஊழியர்களை பணி நீக்கமே செய்தது.

ரோஷினி நாடார் கருத்து

ரோஷினி நாடார் கருத்து

தற்போதைக்கு மூன்லைட்டிங் குறித்து ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, மூன்லைட்டிங் என்பது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என பிசினஸ் டுடேவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. நாங்கள் இதனை மிக கடினமாக பார்க்கிறோம். ஆனால் எங்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லை.

 

எங்களிடம் செயல்திறன் பதிவுள்ளது

எங்களிடம் செயல்திறன் பதிவுள்ளது

எங்கள் ஊழியர்களில் ஏறக்குறைய 70% பேர் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இருந்து (வீட்டில் இருந்து) பணி புரிகின்றனர். எங்களிடம் செயல் திறன் குறித்தான பதிவுகள் உள்ளன. உற்பத்தி திறன் பற்றிய பதிவுகள் உள்ளன. ஆக மூன்லைட்டிங் என்பது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என ரோஷினி நாடார் தெரிவித்துள்ளார்.

அதிக செலவால் பாதிப்பு

அதிக செலவால் பாதிப்பு

நாங்கள் தான் முதல் முதலாக விர்சுவல் மாடல் பணியினை ஏற்றுக் கொண்டோம். இந்தியா முழுவதும் 32 - 35 நகரங்களில் இருந்து 1000 ஊழியர்கள் பணி புரிகின்றனர். ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்ப அழைத்த போது அவர்கள் அதிகளவிலான செலவுகளால் பாதிக்கப்படுவதாக நாங்கள் உணர்ந்தோம். குறிப்பாக பெரும் நகரங்களில் செலவுகள் மிக அதிகம். தற்போது ஊழியர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. ஆக நீங்கள் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

பிரச்சனையே இது தான்

பிரச்சனையே இது தான்

மூன்லைட்டிங் என்பது ரகசியமாக இரண்டாவது வேலை பார்ப்பது. ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து விட்டு, இரண்டாவது நிறுவனத்தில் ஒப்பந்த்தினை மீறி செயல்படுவது தான் பிரச்சனையே. இது தான் இங்கு வாதமாகவும் உள்ளது. ஆக நிறுவனத்திடம் வெளிப்படையாக இருக்க வேண்டும். நிறுவனத்துடன் போட்டியிடும் நிறுவனத்தில் நீங்கள் இரண்டாவது வேலை செய்யும்போது, அது நிறுவனத்திற்கு எதிரான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுவதாக ரிஷாத் பிரேம்ஜி ஒரு அறிக்கையில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

ரெசசன்

ரெசசன்

ரெசசன் குறித்து பேசுகையில் இது கவலையளிப்பதாகவும், பணியிழப்பு குறித்த கவலையையும் எழுப்பினார். ரெசசன் சில துறைகளில் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எனினும் அனைத்து துறைகளிலும் இருக்காது. டிசம்பர் மாதத்தில் நிலைமை கொஞ்சம் மோசமாகத் தான் இருந்தது. அதனை மூன்றாவது காலாண்டு முடிவுகளில் உணர முடிந்தது. எனினும் நாங்கள் நன்றாக செய்துள்ளோம். நாங்கள் உலகளவில் பல நிறுவனங்கள் டிஜிட்டல் மாற்றம், கிளவுட் சேவை மாற்றம் என்பது இருப்பதை நான் காண்கிறேன். மந்த நிலை பற்றிய அச்சம் உள்ளது. ஆனால் அது எவ்வளவு பெரியதாக இருக்கும் என்ற அச்சம் அதிகம் உள்ளது என கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HCL tech: Roshni nadar malhotra says moonlighting is not an big issue

HCL tech: Roshni nadar malhotra says moonlighting is not an big issue
Story first published: Thursday, January 19, 2023, 21:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X