பொதுவாக ஐடி துறையினருக்கு இது ஒரு நல்ல காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த கொரோனாவுக்கு மத்தியில் பற்பல துறையினர் வேலையிழந்து தவித்து வந்த நிலையில், ஐடி துறையில் மட்டும் பணியமர்த்தல் என்பது தொடர்ந்து கொண்டுள்ளது.
இது ஐடி துறையினருக்கு மிக நல்லதொரு விஷயமே. அதோடு இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஐடி துறைக்கான, தேவைகள் அதிகரித்தது.
இதனால் ஐடி நிறுவனங்களுக்கு பற்பல புதிய திட்டங்கள் கிடைத்தன. இதன் காரணமாக அங்கு பணியமர்த்தலும் வழக்கம்போல இருந்தது. அதோடு சம்பள உயர்வு, பதவி உயர்வு என பலவும் வழக்கம்போல இருந்தன. இந்த நிலையில் தற்போதும் கூட அதே நிலையை தொடர்ந்து வருகின்றன. இது ஐடி ஊழியர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

டெக் மகேந்திரா கேம்பஸ் இண்டர்வியூ
இதற்கிடையில் சமீப காலமாக மீண்டும் ஐடி நிறுவனங்கள் தங்களது பணியமர்த்தலை தொடங்கியுள்ளன. கேம்பஸ் இண்டர்வியூக்களை தொடங்கியுள்ளன. குறிப்பாக நேற்று டெக் மகேந்திரா நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 5000 புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தது. இதற்காக கேம்பஸ் இண்டர்வியூக்களை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

ஹெச்சிஎல் பணியமர்த்த திட்டம்
இதற்கிடையில் இன்று ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 1000 ஊழியர்களை, அதன் நாக்பூரில் உள்ள MIHAN கேம்பஸில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணியமர்த்தலானது அடுத்த சில மாதங்களில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு இந்த வளாகத்தில் 2000 பேரினை கொண்டுள்ளது.

பயிற்சி & பணியமர்த்தல்
ஹெச்சிஎல் நிறுவனம் அங்கு உலகளாகவிய தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தினை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த மையத்தில் உள்ளூர் திறமையான தொழிலாளர்களை சேர்த்தல் மற்றும் பணியமர்த்தல், அவர்களுக்கு சரியான பயிற்சி கொடுத்து, ஒரு நிலையான கட்டமைப்பினை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்
இப்படி பணியமர்த்தப்படும் பணியாளர்களில் புதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் என பலரும் அடங்குவர். இந்த நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் மதுரை, லக்னோ மற்றும் நாக்பூர், விஜயவாடா உள்ளிட்ட மையங்களில் 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. அதோடு ஹெச்சிஎல்லில் தங்களது பணியினை தொடங்க ஆர்வமுள்ளவர்களை விண்ணப்பிக்கும் படியும் ஹெச்சிஎல் கூறியுள்ளது.