சென்ற இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று கரணமாக அதிகளவில் மருத்துவ காப்பீடுகள் மூலம் உரிமை கோருவது அதிகரித்துள்ளதால், நடப்பு நிதியாண்டு முதல் மருத்துவ காப்பீடு கட்டணங்கள் உயரும் என காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பல மருத்துவ கப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கனவே பிரீமியம் கட்டணங்களை உயர்த்தியுள்ளதால் பணவீக்கம், கொரொனா என என்னென்ன காரணங்களுக்காக எல்லாம் பிரீமியம் விலை உயர்த்தப்பட்டுள்ளது என விளக்கமாகப் பார்ப்போம்.

கொரோனா
2020-2021 நிதியாண்டில் மருத்துவ கப்பீட்டை பயன்படுத்தியவர்களில் 6 சதவீதத்தினர் கொரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தியுள்ளனர். இதுவே 2021-2022 நிதியாண்டில் 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 4வது அலை வந்தால் அதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும்.
எனவே மருத்துவ காப்பீடு பிரீமியம் கட்டணத்தை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

மருத்துவ கட்டணங்கள் உயர்வு
மருத்துவமனை கட்டணங்கள் உயர்வு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பரிசோதனை கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் மருத்துவச் செலவுகளுக்கான பணவீக்கமும் அதிகரித்துள்ளது.

மருத்துவ காப்பீடு பிரீமியம் உயர்வு
கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ காப்பீடு பிரீமியம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கொரோனாவுக்கு பிறகு கூடுதல் பரிசோதனைகள் மருத்துவமனைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கொரோனா காலங்களில் அதிக நபர்கள் கொரோனா பரிசோதனைக்காக உரிமை கோரியுள்ளனர். எனவே 14 சதவீதம் வரை பிரீமியம் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக மனிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேமளி ஹெல்த் ஆப்டிமா மருத்துவ காப்பீடு திட்டங்களின் பிரீமியம் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளதாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராய் கூறியுள்ளார்.

இந்தியாவில் உச்சம் தொட்ட மருத்துவ பணவீக்கம்
ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் அதிகபட்சமாக மருத்துவ பணவீக்கம் 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் 12 சதவீதத்துடன் சீனா உள்ளது. இந்தோனேசியாவில் 10 சதவீதமும், வியட்நாமில் 10 சதவீதமும், பிபிப்பைன்ஸில் 9 சதவீதமும் மருத்துவ பணவீக்கமும் அதிகரித்துள்ளது.

மருத்துவ காப்பீடு
மருத்துவ காப்பீடு திட்டங்கள் சந்தையில், குறைந்தது 2 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் உள்ளன. மருத்துவ காப்பிடு திட்டங்களை வாங்கிய பிறகு அதை அந்த வருடம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால், அடுத்த வருடம் அதை அப்படியே புதுப்பிக்கும் அந்த தொகை கூடுதலாக அதிகரிக்கும்.