IT ஊழியர்களுக்கு இது ஒரு பேட் நியூஸ் தான்.. ஆனால் திறனை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புண்டு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: கொரோனாவினால் இன்று சரிவினைக் காணாத துறையே இல்லை என்று கூறலாம். அந்தளவுக்கு உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று கொண்டு இருக்கிறது இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் கொடிய அரக்கன்.

இதனால் உலகளவில் பல துறைகளிலும் பணி நீக்கம், சம்பள குறைப்பு என பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன நிறுவனங்கள்.

இதன் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய சேவை துறையினை சேர்ந்த ஐடி துறையில், பலத்த அடி விழுந்துள்ளது எனலாம்.

அடடே இது செம்ம நியூஸ்.. ஆகஸ்ட் வரை பிஎஃப் பணத்தை அரசே செலுத்தும்..!அடடே இது செம்ம நியூஸ்.. ஆகஸ்ட் வரை பிஎஃப் பணத்தை அரசே செலுத்தும்..!

அதிரடியான நடவடிக்கை

அதிரடியான நடவடிக்கை

இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுக்க உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பல பணி நீக்கம், சம்பள குறைப்பு, புதிய பணியமர்த்தல் நிறுத்தி வைப்பு, ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்தத்தினை நீட்டிக்காமை இப்படி பல நிறுவனங்கள் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

செயல் திறன் அடிப்படையில் பணி நீக்கங்கள்

செயல் திறன் அடிப்படையில் பணி நீக்கங்கள்

இந்த நிலையில் தற்போது ஐடி துறையில் தங்களது செயல்திறன் அடிப்படையில் பணி நீக்கங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது உலகளவிலும் சரி, இந்தியாவிலும் சரி இருந்து வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அதிரடியான நடவடிக்கையானது எப்போதும் உள்ளது தான் என்றாலும், இந்த நெருக்கடியான நேரத்தில் வந்துள்ளது ஊழியர்கள் மத்தியில் பெரும் அழுத்தத்தினை உருவாக்கியுள்ளது.

பணி நீக்கத்திற்கு இது தான் காரணம்
 

பணி நீக்கத்திற்கு இது தான் காரணம்

ஏனெனில் கொரோனாவின் காரணமாக புதிய திட்டங்கள் குறைவு, ஒப்பந்தங்கள் மீண்டும் புதுப்பிக்க இயலாமல் உள்ளது. ஐடி துறையின் தேவை குறைவு போன்ற பல நிலையற்ற வர்த்தக சூழல் காரணமாக பணி நீக்கம் செய்து வருகின்றன. இதனால் ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

படிப்படியாக குறைப்பு

படிப்படியாக குறைப்பு

சர்வதேச அளவிலான ஐடி நிறுவனங்கள் ஆட்டோமேஷன் மற்றும் தொடர்புடைய வணிகங்களில் இறங்குவதால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தங்களது ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைத்துள்ளன. இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனங்களுக்கு கொரோனாவினால் புதிய சவால்கள் உருவாகியுள்ளதால், மேற்கொண்டு இந்த நடவடிக்கையானது துரிதப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎம் பணி நீக்கமா?

ஐபிஎம் பணி நீக்கமா?

ஐபிஎம் நிறுவனம், தனது வணிகத்தினை மறுவடிவமைப்பதால், உலகளவில் 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. 3,50,000 மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஐபிஎம்மின் உலகளாவிய எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினை இந்தியா கொண்டுள்ளதால், இதனால் சில நூறு இந்தியர்களும் பாதிக்கப்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

காக்ணிசன்ட் பணி நீக்கம் நடவடிக்கை

காக்ணிசன்ட் பணி நீக்கம் நடவடிக்கை

இதே நாஷ்டாக்கில் பட்டியலிடப்பட்ட காக்ணிசன்ட் நிறுவனம், சமீபத்தில் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்தியா காக்ணிசன்ட் மிகப்பெரிய பணியாளர் மையமாக உள்ள நிலையில், இதனால் அதிகம் பாதிக்கப்பட்டதும் இந்திய ஊழியர்களே. காக்ணிசன்ட்டில் 2,90,000 ஊழியர்கள் உள்ள நிலையில், அதில் 2 லட்சத்திற்கும் மேற்ட்டவர்கள் இந்தியர்கள் ஆவர்.

செயல்பாட்டின் அடிப்படையில் பணி நீக்கம் இருக்கலாம்

செயல்பாட்டின் அடிப்படையில் பணி நீக்கம் இருக்கலாம்

ஐடி நிறுவனங்கள் அதன் பெஞ்ச் ஊழியர்களை பில் இல்லாத ஊழியர்களாக கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றனர். புதிய திட்டங்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். காக்ணிசண்டின் செய்தித் தொடர்பாளர் ஊழியர்களின் செயல்பாட்டினை அடிப்படையாக கொண்டு பணி நீக்கம் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

பெஞ்ச் ஊழியர்கள் பாதிப்பு

பெஞ்ச் ஊழியர்கள் பாதிப்பு

காக்ணிசன்ட் உள்பட அனைத்து ஐடி நிறுவனங்களிலும் செயல்திறன் அடிப்படையில் வெளியேற்றம் உள்ளது தான். இது ஒரு சாதாரண செயல்முறையாகும் என்றும் கூறியுள்ளார். பெஞ்ச் ஊழியர்கள் தவிர்க்க முடியாத பட்சத்தில் முதலில் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் ஆய்வாலர்கள் கூறுகின்றனர். இந்த பணி நீக்கங்கள் வெளிப்படையானவை.

இவர்களுக்கு தான் முதல் அடி

இவர்களுக்கு தான் முதல் அடி

அதிலும் தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் புதிய ஒப்பந்தங்கள் வருவது கடினம் என்பதால், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வணிக மாதிரிகள் பெரும் அழுத்ததிற்கு உள்ளாகின்றன. எனவே பில் செய்ய முடியாத பெஞ்ச் ஊழியர்கள் முதலில் பாதிக்கப்படுவார்கள் என்று Greyhound Research நிறுவனத்தின் சிஇஓ சஞ்சித் வீர் கோஜியா கூறியுள்ளார்.

Accenture-ம் பணி நீக்கம்

Accenture-ம் பணி நீக்கம்

ஐடி துறையின் மற்றொரு முன்னணி நிறுவனமான Accenture இங்கிலாந்தில் 900 வேலைகளை குறைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஐடி தேவை குறைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதில் சந்தோசமான செய்தி என்னவெனில், இந்திய ஐடி நிறுவனங்களான, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனனங்கள் பணி நீக்கங்களை மேற்கொள்ளவில்லை.

திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்

திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்

ஆனால் செயல்திறன் அடிப்படையிலான வெளியேற்றம் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் துறை சம்பந்தமான நல்ல டிஜிட்டல் திறன், தற்போது மேன்மையடைந்துள்ள ஊழியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், திறன் அற்ற ஊழியர்களுக்கு இது நிச்சயம் மோசமான செய்தியாகவே இருக்கும். ஆக நாம் நமது திறனை காலத்திற்கு தகுந்தவாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Here some bad news for IT employees, that’s IT companies may continue lay off to performance basis

Lay off.. Experts said the layoffs are likely to be performance-based exits in IT sector..
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X