ஜூலை 1ல் இருந்து ரூ.3000 வரை அதிகம் கொடுக்கணும்.. ஏன்.. ஹீரோ மோட்டோகார்ப் சொல்வதென்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி இருசக்கரவாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், அதன் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலையை 3,000 ரூபாய் வரையில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது வாகனங்களின் மாடலை பொறுத்து மாறுபடும் என்றும் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

டாப் 100ல் டெல்லி, பெங்களூரு, மும்பை.. என்ன விஷயம்.. ஏன்? டாப் 100ல் டெல்லி, பெங்களூரு, மும்பை.. என்ன விஷயம்.. ஏன்?

செலவினங்கள் அதிகரிப்பு

செலவினங்கள் அதிகரிப்பு

ஏற்கனவே எரிபொருட்கள் விலையானது அதிகரித்து வரும் நிலையில் அந்த செலவினங்களும் அதிகரித்துள்ளன. இன்சூரன்ஸ் பிரீமிய கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இதற்கிடையில் தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் மூலதன பொருட்கள் விலையும் தாறுமாறான ஏற்றத்தினை கண்டுள்ளன. இதனால் வாகன உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவினங்களும் அதிகரித்துள்ளன.

வேறு வழியில்லை

வேறு வழியில்லை

இதற்கிடையில் வாகன உற்பத்தியாளர்கள் விலையை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படி விலையினை அதிகரிக்காவிட்டால், அது ஹீரோவின் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இந்த நிலையில் செலவினை கட்டுப்படுத்தவும், வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ளவும், வேறு வழியில்லாமல் ஹீரோ மோட்டோரோகார்ப் விலை அதிகரிப்பினை கையில் எடுத்திருக்கலாம்.

எதற்கு எவ்வளவு விலை அதிகரிப்பு?

எதற்கு எவ்வளவு விலை அதிகரிப்பு?

இந்த விலை அதிகரிப்பானது 3,000 ரூபாய் வரையில் இருக்கலாம் என்றாலும், எந்த வாகனத்திற்கு எவ்வளவு என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த இரு சக்கர வாகன நிறுவனம் மட்டும் அல்ல, பல வாகன நிறுவனங்களும் விலை அதிகரிப்பினை கையில் எடுத்துள்ளன. இது உள்ளீட்டு செலவு அதிகரித்துள்ள நிலையில், இந்த அதிகரிப்பானது வந்துள்ளது.

மாருதி சுசுகியும் விலை அதிகரிப்பு

மாருதி சுசுகியும் விலை அதிகரிப்பு

ஹீரோ மோட்டோகார்ப் மட்டும் விலையினை அதிகரிக்கவில்லை. ஏப்ரலில் நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி உள்ளீட்டு செலவு அதிகரித்துள்ள நிலையில் செலவினை ஈடுகட்ட, விலையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஜனவரி 2021 முதல் மார்ச் 2022ல் இடையில் வாகனங்கள் விலைகளை சுமார் 8.8% அதிகரித்துள்ளது.

இன்றைய பங்கு விலை?

இன்றைய பங்கு விலை?

இன்று ஹீரோ மோட்டோகார்ப் பங்கு விலையானது என் எஸ் இ-யில் 5.93% அதிகரித்து, 2674.10 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது, 5.96% அதிகரித்து, 2674.10 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hero Motocorp to raise 2 wheeler's prices by up to Rs.3000 from july 1, 2022

Hero MotoCorp, India's leading two-wheeler maker, has increased the price of its motorcycles and scooters to Rs 3,000. It has also announced that it will come into effect from July 1.
Story first published: Thursday, June 23, 2022, 18:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X