ஹெல்த்கேர் துறைக்கு ரூ.9,924 கோடி..கல்வித்துறைக்கு ரூ.16,377 கோடி.. தூள் கிளப்பிய டெல்லி பட்ஜெட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: டெல்லியின் பட்ஜெட் 2021 அறிக்கையை இன்று அதன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்துள்ளார்.

 

இந்த பட்ஜெட்டில் 69,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் 500 high-mast Tricolours நகரம் முழுவதும் அமைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

அனைத்து அரசு வசதிகளிலும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அம்பேத்கர் & பகத்சிங் நிகழ்வுகள்

அம்பேத்கர் & பகத்சிங் நிகழ்வுகள்

தேசபக்தி கொண்டாட்டங்களின் போது அனுசரிக்கப்படும் டாக்டர் பிஆர் அம்பேத்கரின் வாழ்க்கை குறித்த திட்டங்களுக்கு 10 கோடி ரூஒபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பகத்சிங்கின் வாழ்க்கை குறித்த நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு

சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு

அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு 9,934 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது இது மொத்த செலவினத்தில் ஹெல்த்கேர் துறைக்கு 14% சதவீதமாகும். கொரோனா தடுப்பூசி அனைத்து அரசு தரப்புகளிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்காக 50 கோடி ரூபாய் டெல்லி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

விர்சுவல் மாடல் பள்ளிகள் திறக்கப்படும்
 

விர்சுவல் மாடல் பள்ளிகள் திறக்கப்படும்

அதோடு எந்த நேர கற்றலையும், எந்த நேரத்திலும் கற்பிப்பதை ஊக்குவிக்கும் யோசனையுடன் விர்சுவல் மாடல் பள்ளிகள் திறக்கப்படும். எங்கள் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தெரியாத ஆசிரியர்கள் இருந்தனர். நாங்கள் அவர்களூக்கு பயிற்சி அளித்தோம். இதற்கிடையில் தான் அவர்கள் ஒரு வருடம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தினர் என்று சிசேடியா கூறியுள்ளார்.

நகர அபிவிருத்திக்காக ஒதுக்கீடு

நகர அபிவிருத்திக்காக ஒதுக்கீடு

இதே நகர அபிவிருத்திக்காக டெல்லி அரசு 5,328 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளது. மேலும் டெல்லியில் ஒலிம்பிக்கை நடத்துவேதே கனவு என்றும் கூறியுள்ளார். நாட்டின் திறமைகளை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு பல்கலைக்கழகலத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. அரசாங்கம் எடுத்துள்ள முற்போக்கான நடவடிக்கைகளில் ஒன்று மின்னணு வாகன கொள்கை.

மின்சார வாகனங்கள்

மின்சார வாகனங்கள்

இந்த கொள்கைக்கு முன்பு டெல்லியில் 0.2% மின் வாகனங்கள் இருந்தன. ஆனால் அரசின் நடவடிக்கைக்கு பிறகு 2.2% ஆக அதிகரித்துள்ளது. இந்த கொள்கைக்கு பிறகு 7000 புதிய மின்சார வாகனங்கள் வெளியிடப்பட்டன. குறிப்பாக டெல்லியில் 1,300 மின் பேருந்துகளை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

கலை, கலாச்சாரம் & சுற்றுலா

கலை, கலாச்சாரம் & சுற்றுலா

கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறைக்காக 521 கோடி ரூபாயினை அரசு ஒதுக்கீடு செய்யவுள்ளது. டெல்லியின் பாரம்பரியத்தினை மேம்படுத்த இரண்டு திட்டங்கள் தொடங்கப்படும். சுற்றுலா இடங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மின்சார துறைக்கு எவ்வளவு?

மின்சார துறைக்கு எவ்வளவு?

மின்சார துறைக்கு 3,227 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது. டெல்லியில் 90% குடும்பங்கள் மின் மானியங்களைப் பெறுகின்றன. அவை விவசாயிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என பலருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன என்றும் சிசோடியா தனது பட்ஜெட் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Highlights of delhi budget 2021 – 22: check details

Budget 2021 – 22 updates.. Highlights of delhi budget 2021 – 22: check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X