ஹிந்துஜா குடும்பத்தை பற்றிய முக்கிய தகவல்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹிந்துஜா குழுமம். இந்த பெயரை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்படி இல்லை என்றால் அசோக் லேலண்ட் கம்பெனியின் பெயரையாவது கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்த அசோக் லேலண்ட், ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்தது தான்.

 

அந்த ஹிந்துஜா குடும்பத்தைப் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். முதலில் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி முதலில் பார்த்துவிடுவோம்.

பர்மானந்த தீப்சந்த் ஹிந்துஜா 1919-ம் ஆண்டு, ஈரானில் தன் சர்வதேச கம்பெனியைத் தொடங்குகிறார். 1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிப் படையின் அழுத்தத்தால் ஐரோப்பிய நாட்டுக்கு மாற்றப்பட்டது என்கிறது விக்கிபீடியா.

4 பிள்ளைகள்

4 பிள்ளைகள்

இந்த பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜாவின் மகன்கள் தான் தற்போது ஹிந்துஜா குழுமத்தை நிர்வகிக்கும் நான்கு பேர்.
1. எஸ் பி ஹிந்துஜா என்றழைக்கப்படும் ஸ்ரீசந்த் பர்மானந்த் ஹிந்துஜா.
2. கோபிசந்த் பர்மானந்த் ஹிந்துஜா
3. பிரகாஷ் பர்மானந்த் ஹிந்துஜா
4. அசோக் பர்மானந்த் ஹிந்துஜா

எஸ் பி ஹிந்துஜா

எஸ் பி ஹிந்துஜா

லண்டனில் வசிக்கும் மூத்த அண்ணன் எஸ் பி ஹிந்துஜா ஒட்டு மொத்தமாக ஹிந்துஜா குழுமத்தின் தலைவராக பதவியில் இருக்கிறார். அதோடு ஹிந்துஜா பேங்க் ஆஃப் சுவிட்சர்லாந்து வங்கியின் தலைவராகவும், ஹிந்துஜா பவுண்டேஷனின் தலைவராகவும் பதவியில் இருக்கிறார் என்கிறது ஹிந்துஜா குழுமத்தின் வலைதளம். ஹிந்துஜா குழுமத்தை பல்வேறு வியாபாரங்களில் களம் இறங்க முக்கிய காரணமாக இருந்தவர் இவர்.

கோபிசந்த் ஹிந்துஜா
 

கோபிசந்த் ஹிந்துஜா

இரண்டாவது அண்ணன் கோபிசந்த் பர்மானந்த் ஹிந்துஜா, ஹிந்துஜா குழுமத்தின் துணைத் தலைவராக பதவியில் இருக்கிறார். இவரை சுருக்கமாக ஜிபி (GP) என்று அழைப்பார்களாம். இவரும் லண்டனில் தான் வசிக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் ஹிந்துஜா ஆட்டோமோடிவ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறாராம். ஹிந்துஜா குழுமத்தை பல்வேறு வியாபாரங்களை நோக்கி நகர்த்தியதில் இவருக்கும் மிக முக்கிய பங்கு உண்டாம்.

பி பி ஹிந்துஜா

பி பி ஹிந்துஜா

பிரகாஷ் ஹிந்துஜா, தற்போது மொனாகோ நாட்டில் வாழ்ந்து கொண்டே, ஹிந்துஜா குழுமத்தின் ஐரோப்பிய செயல்பாடுகளை நிர்வகித்துக் கொண்டு இருக்கிறாராம். கல்லூரியில் படித்து முடித்த பின், குடும்ப வியாபாரத்தில் குதித்து இருக்கிறார். இவரை நண்பர்கள் பிபி என்று அழைப்பார்கள் என்கிறது ஹிந்துஜா வலைதளம்.

கடைக் குட்டி தம்பி

கடைக் குட்டி தம்பி

அசோக் ஹிந்துஜா தான், இந்தியாவில் ஹிந்துஜா குழுமத்தின் வியாபாரங்களை நிர்வகித்துக் கொண்டு கொண்டு இருக்கிறார். ஹிந்துஜா இந்தியா கம்பெனிகளுக்கு இவர் தான் தலைவர். ஹிந்துஜா குழுமம், 1980-களில் இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து, அசோக் ஹிந்துஜா தான் அதை நிர்வகித்து வருகிறாராம்.

ஹிந்துஜா குழுமம் வியாபாரம் செய்யும் துறைகள்

ஹிந்துஜா குழுமம் வியாபாரம் செய்யும் துறைகள்

ஹிந்துஜா குழுமம், ஆட்டோமொபைல், நிதி சேவைகள், ஐடி, கச்சா எண்ணெய் & கேஸ், மீடியா, டெலிகாம், மருத்துவம் என பல துறைகளில் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் நிர்வகிக்கும் கம்பெனிகள் பட்டியல் கொஞ்சம் பெரிது தான், இருப்பினும் முக்கியமான சில கம்பெனிகள் பெயரைக் கீழே பட்டியலிடுகிறோம்.

ஹிந்துஜா குழும கம்பெனிகள் பட்டியல்

ஹிந்துஜா குழும கம்பெனிகள் பட்டியல்

Ashok Leyland, Hinduja Healthcare, Hinduja Foundries, Hinduja Bank (Switzerland),
IndusInd Bank, Hinduja Leyland Finance, Hinduja Global Solutions (IT), Hinduja Tech,
Gulf Oil, Hinduja National Power Corporation, Ashok Leyland Wind Energy, IndusInd Media and Communications, IDL Specialty Chemicals, Hinduja Realty Ventures என பல கம்பெனிகளை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். கூடவே KPB Hinduja College of Commerce என்கிற பெயரில் ஒரு கல்லூரியும் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hinduja group key family members and their company details

Hinduja group has been managed by four key people. We have given the four key peoples details and their some important company details in this article in Tamil.
Story first published: Wednesday, June 24, 2020, 14:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X