கோக கோலா கொடுத்த செம சான்ஸ்.. நிரந்தரமாக WFH.. கூடுதலாக பல சலுகைகளும்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனத்தின், இந்திய பங்கு தாரரான ஹிந்துஸ்தான் கோக கோலா நிறுவனம், அதன் சில ஊழியர்களுக்கு நிரந்தமாக வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான சலுகையை வழங்கியுள்ளது.

 

இந்தியாவின் எஃப்எம்சிஜி துறையில் முன்னணி நிறுவனமான, ஹிந்துஸ்தான் இப்படி ஒரு சலுகையினை வழங்கியிருப்பது வரவேற்கதக்க ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

கொரோனாவின் வருகைக்கு பின்னர், பல நிறுவனங்களிலும் இதுபோன்ற அதிரடியான மாற்றங்களை காண முடிகிறது.

வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்

வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்

கொரோனா காலத்தில் மட்டும் வீட்டில் இருந்து பணிப்புரிய கூறி வந்த நிறுவனங்கள், தற்போது நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணிபுரிய கூறிவரும் நிலையையும் பார்க்க முடிகிறது. இதனைத் தான் தற்போது இந்தியாவின் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் நிறுவனமும் அறிவித்துள்ளது. அதாவது விற்பனை, மற்றும் உடல் உழைப்பு தேவை அல்லாத ஊழியர்களைத் தான் தற்போது இந்த நிறுவனம் வீட்டில் இருந்து பணியாற்ற கூறியுள்ளது.

பண உதவியும் உண்டு

பண உதவியும் உண்டு

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. அதாவது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுமெனில் அவர்களுக்கு சில உபகரணங்களும் தேவை அல்லவா? அதனை வாங்கவும் பண உதவி கொடுத்து வருவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

அலுவலக தேவைக்கான உதவிகள்
 

அலுவலக தேவைக்கான உதவிகள்

இதன் முதல் கட்டமாக வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு அலுவலகத்தில் இருந்து பணிபுரியும் பணி சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட தகுதியான நாற்காலிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதோடு தடையற்ற இணைய வசதிற்கான செலவினங்களுக்கும், யுபிஎஸ் பவர் பேக் அப், ஹெட் போன்கள் மற்றும் விளக்குகள் என பல ஆதரவுகளையும் வழங்கி வருவதாகவும் பிசினஸ் டுடே செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 ஹெல்ப் லைன் வசதியும் உண்டு

ஹெல்ப் லைன் வசதியும் உண்டு

இதெல்லாவற்றிற்கும் மேலாக உடல் மற்றும் மன ரீதியிலான பிரச்சனைகளை சமாளிக்க நிறுவனம், 1 டூ 1 ஹெல்ப் லைன் என்ற அமைப்பினை ஏற்படுத்தியுள்ளதாம். இதன் மூலம் ஊழியர்களுக்கு டெலிமெடிசன் மற்றும் ஆரோக்கிய வசதிகளையும் வழங்கியுள்ளது. இதற்காக ஒருஆப்பினையும் கொண்டுள்ளது. மேலும் ஊழியர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் இன்சூரன்ஸ் திட்டங்களையும் கொண்டுள்ளது.

ஊழியர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும்

ஊழியர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும்

ஆக இதன் மூலம் ஊழியர்கள் எங்கிருந்தாலும், நிம்மதியாக இருப்பதை நிறுவனம் உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு நிறுவனத்திற்கும், பணியாளர்களுக்கும் அர்த்தமுள்ள தடையற்ற அனுபவத்தினை வழங்குவதே இதன் யோசனை என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hindustan coca cola offers permanent WFH to some employees

Hindustan coca cola offers permanent WFH to some employees, also offering monetary support to employees to enable this process.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X