Horlicks குடும்பத்தை வளைத்த ஹிந்துஸ்தான் யுனிலிவர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் ஊட்டச் சத்து பானங்கள் சந்தையில் ஹார்லிக்ஸ் பானத்துக்கு என்று ஒரு தனி இடம் உண்டு.

 

ஸ்டாடிஸ்டா (Statista) வலைதளத்தின் தரவுகள் படி, இந்தியாவின் ஊட்டச் சத்து பான சந்தையில் சுமார் 45 சதவிகித சந்தையை ஹார்லிக்ஸ் பிடித்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.

நோயாளிகளைப் பார்க்கச் செல்வது தொடங்கி நல்ல காரியங்களுக்குச் சென்று பார்ப்பது வரை எல்லாவற்றுக்கும் ஹார்லிக்ஸ் பாட்டிலை நாமே கொண்டு சென்று கொடுத்து இருப்போம்

ஹெச் யூ எல்

ஹெச் யூ எல்

இத்தனை நாள் வரை ஹார்லிக்ஸ், க்ளாக்ஸோ ஸ்மித் க்ளின் (Glaxo Smith Kline Consumer Healthcare) என்கிற நிறுவனத்துக்கு சொந்தமானதாக இருந்தது. இனி ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்துக்கு சொந்தமாக இருக்கப் போகிறது. ஆம். ஹார்லிக்ஸ் குடும்பத்தையே விலை கொடுத்து வாங்கிவிட்டது ஹிந்துஸ்தான் யுனிலிவர் கம்பெனி.

அதென்ன ஹார்லிக்ஸ் குடும்பம்

அதென்ன ஹார்லிக்ஸ் குடும்பம்

ஹார்லிக்ஸ் என்பது வெறும் ஒரு பிராண்டோ அல்லது ஒரு பொருளோ அல்ல.
1. ஹார்லிக்ஸ்
2. ஹார்லிக்ஸ் கார்டியா+
3. ஹார்லிக்ஸ் க்ரோத்+
4. லைட் ஹார்லிக்ஸ்
5. ஹார்லிக்ஸ் ப்ரோட்டீன்+
6. ஜூனியர் ஹார்லிக்ஸ்
7. மதர்ஸ் ஹார்லிக்ஸ்
8. வுமென்ஸ் ஹார்லிக்ஸ்..
என பல ஹார்லிக்ஸ் பொருட்கள் & பிராண்டுகள் இருக்கின்றன. அதனால் தான் ஹார்லிக்ஸ் குடும்பத்தையே ஹிந்துஸ்தான் யுனிலிவர் வளைத்து விட்டதாகச் சொல்லி இருக்கிறோம்.

என்ன விலை
 

என்ன விலை

இந்த ஹார்லிக்ஸ் குடும்பத்தை வளைக்க க்ளாக்ஸோ ஸ்மித் க்ளின் நிறுவனத்துக்கு சுமாராக 375.6 மில்லியன் யூரோ பணத்தை செலவழித்து இருக்கிறது நம் ஹிந்துஸ்தான் யுனிலிவர். இந்திய மதிப்பில் சுமார் 3,045 கோடி ரூபாயை அள்ளி இரைத்து இருக்கிறார்கள். அதோடு க்ளாக்ஸோ ஸ்மித் க்ளின் கன்ஸ்யூமர் ஹெல்த் கேர் நிறுவனத்தை மொத்தமாக ஹிந்துஸ்தான் யுனிலிவர் உடன் இணைத்து இருக்கிறார்கள். இந்த மெர்ஜர் டீலின் மதிப்பு 31,700 கோடியாம்.

பெரிய டீல்

பெரிய டீல்

இந்தியாவின் உணவு வியாபார துறையில், ஹிந்துஸ்தான் யுனிலிவர், சுமார் 3,000 கோடி ரூபாய் விலை கொடுத்து ஹார்லிக்ஸ் குடும்பத்தை வளைத்து இருப்பதை பெரிய டீல்களில் ஒன்றாகப் பார்க்கிறது சந்தை. கிட்டத் தட்ட இந்த டீலுக்குத் தேவையான எல்லா அனுமதிகளும் கிடைத்துவிட்டதாம். இனி ஹார்லிக்ஸை தைரியமாக ஹிந்துஸ்தான் யுனிலிவரின் பொருளாகச் சொல்லலாம்.

பங்கு

பங்கு

இந்திய பங்குச் சந்தைகளில் எப்படி ஹிந்துஸ்தான் யுனிலிவர் வர்த்தகமாகிறதோ, அதே போல, GlaxoSmithKline Consumer Healthcare Ltd நிறுவன பங்குகளும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகின்றன. எனவே, 1 க்ளாக்ஸோ ஸ்மித்க்ளின் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளருக்கு 4.39 ஹிந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் கொடுக்க இருக்கிறார்களாம்.

மத்த பிராண்ட்கள்

மத்த பிராண்ட்கள்

இந்த ஹார்லிக்ஸ் பிராண்டை வாங்கும் போது, உடன் சச்சின் கையெழுத்து போட்ட கிரிக்கெட் பேட்களை எல்லாம் இலவசமாகக் கொடுத்த பூஸ்ட் (Boost) பிராண்டையும் உடன் வாங்கி இருக்கிறார்களாம். அது போக மால்டோவா (Maltova), விவா (Viva) போன்ற பிராண்ட்களும் இனி ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் கீழ் தான் வருமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: hindustan unilever
English summary

Hindustan Unilever bought all Horlicks brands from GSK consumer healthcare

The Hindustan Unilever limited company bought all the Horlicks brands from GlaxoSmithKline consumer healthcare for around Rs 3,045 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X