இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்களின் வர்த்தகம் 2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021ல் மிகவும் குறைவான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் நுகர்வோர் சந்தை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்ட ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ஸ்மார்ட்வொர்க் செய்யத் துவங்கியுள்ளது.
2700 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. இரத்தகளறியான சந்தை.. முதலீட்டாளர்கள் கண்ணீர்!

நுகர்வோர் சந்தை
நுகர்வோர் சந்தை மந்தமாக இருக்கும் வேளையில் புதிய பொருட்களை அறிமுகம் செய்து வர்த்தகத்தை அதிகரித்து, சந்தை ஆதிக்கத்தை நிலை நாட்டுவதை விடவும், சக போட்டி நிறுவனம் அல்லது தத்தம் நிறுவனம் இல்லாத துறையில் இருக்கும் நிறுவனத்தைக் கைப்பற்றுவது ஈசியான வழி. இதை தான் தற்போது ஹிந்துஸ்தான் யூனிலீவர் செய்கிறது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர்
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் இந்தியா முழுவதும் மசாலா பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான MDH எனப்படும் மஹாஷியன் டி ஹட்டி நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்ற முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.

MDH நிறுவனம்
இந்தக் கைப்பற்றல் திட்டத்தில் MDH நிறுவனம் சுமார் 10,000 முதல் 15000 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் ஐடிசி நிறுவனம் கொல்கத்தாவின் சன்ரைஸ் புட்ஸ் நிறுவனத்தைச் சுமார் 2,150 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தரம்பால் குலாட்டி மறைவு
MDH நிறுவனத்தின் நிறுவனரான தரம்பால் குலாட்டி மறைவிற்குப் பின்பு இந்நிறுவனத்தை விற்பனை செய்யப் பல நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தியது, ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் மறுப்புத் தெரிவித்தது. இதன் மூலம் தற்போது ஐடிசி-க்குப் போட்டியாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் வந்துள்ளதால் கட்டாயம் MDH இந்த வாய்ப்பை கைவிடாது.

1191 கோடி ரூபாய் வருமானம்
MDH நிறுவனம் சுமார் 60க்கும் அதிகமான மசாலா பொருட்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறது. இந்தியா முழுவதும் 1000த்திற்கும் அதிகமான மொத்த விற்பனையாளர்கள், 1 லட்சத்திற்கும் அதிகமாக ரீடைல் விற்பனையாளர் உடன் வருடத்திற்குச் சுமார் 1191 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை ஈட்டும் வர்த்தகத்தை வைத்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் வருகை
2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மசாலா பொருட்கள் விற்பனை வர்த்தகம் சுமார் 50000 கோடி ரூபாய் அளவிற்கு உயர்வும், இது கிட்டதட்ட தற்போதைய அளவை காட்டிலும் 2 மடங்கு அதிகம். இந்த வளர்ச்சி பாதையில் MDH நிறுவனத்தின் மூலம் ஹிந்துஸ்தான் யூனிலீவர் இத்துறையில் இறங்குவது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.