இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சரிவை மீட்க ரிசரவ் வங்கி அதிகளவிலா வட்டியை குறைத்துள்ள நிலையில், வங்கிகளும் வராக்கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு வரவும், அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அனைத்து கடன்களுக்கும் அதிகளவிலான வட்டியைக் குறைத்து வருகிறது.
இதற்கு ஏற்றார்போல் கொரோனாவால் வர்த்தகத்தை இழந்து நிற்கும் ரியல் எஸ்டேட் துறை விற்பனை ஆகாமல் இருக்கும் வீடுகளைத் தள்ளுபடி, ஆஃபர் எனப் பல பெயர்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
இதன் எதிரொலியாக இந்தியாவில் ஹோம் லோன் பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் யார் குறைவான வட்டியில் வீட்டுக் கடனை வழங்குகிறார்கள் என்பதில் மிகப்பெரிய அளவிலான போட்டியே உருவாகியுள்ளது.
சம்பள உயர்வு கொடுக்க 'நாங்க' ரெடி.. 2021ல் அட்டகாசம்..!

வங்கிகள்
பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்த அடுத்தச் சில நாட்களிலேயே வட்டியை குறைத்த நிலையில், தனியார் வங்கிகள் தற்போது அதிகளவிலான வட்டியை குறைக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக ரிசர்வ் வங்கியின் கடந்த இரு மாத கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்காத நிலையில் வட்டியை தொடர்ந்து குறைத்து வருகிறது.

கோட்டாக் மஹிந்திரா வங்கி
பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் அக்டோபர் மாத பாதியிலேயே வீட்டுக்கடனுக்கான வட்டியை அதிகளவில் குறைத்துள்ள நிலையில், கோட்டாக் மஹிந்திரா வங்கி ஓரே மாதத்தில் இரண்டு முறை வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது.
தற்போது வங்கிகள் 6.8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரையிலான வட்டியில் எளிதாக அனைத்துத் தரப்பு மக்களுக்கு வீட்டு கடன் வழங்கி வருகிறது.

பாதுகாப்பான வர்த்தகம்
தற்போது இந்திய பொருளாதாரமும், வங்கியின் சூழ்நிலையை வைத்துப் பார்க்கும் போதும் வங்கிகளுக்குப் பாதுகாப்பான வர்த்தக வாய்ப்பு என்றால் அது வீட்டு கசன் தான்.
மக்கள் தற்போது பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் சொந்த வீடு வாங்கும் கனவு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதே நேரத்தில் பில்டர்களின் தள்ளுபடி, குறைவான பத்திர செலவு, குறைந்த வட்டி விகிதம் இருக்கும் நிலையில் மக்கள் அதிகளவில் வீட்டுக் கடன் வாங்கிச் சொந்த வீடு வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இரண்டு இலக்க வளர்ச்சி
இந்த லாக்டவுன் காலத்தில் வங்கித் துறை வர்த்தகத்தில் இரண்டு இலக்க வளர்ச்சி கொண்ட ஓரே துறை வீட்டுக் கடன் சேவை பிரிவு என்பதால் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் போட்டிப் போட்டு வட்டியைக் குறைத்து வருகிறது.

வங்கி மற்றும் வட்டி விகிதங்கள்
நாட்டின் முன்னணி வங்கிகளின் குறைந்தபட்ச வீட்டு கடன் வட்டி விகிதம்
- கோட்டாக் மஹிந்திரா வங்கி - 6.75 சதவீதம்
- பாங்க் ஆப் பரோடா - 6.85 சதவீதம்
- ஐசிஐசிஐ வங்கி - 6.9 சதவீதம்
- ஹெச்டிஎப்சி - 6.9 சதவீதம்
- எஸ்பிஐ - 6.9 சதவீதம் (யூனோ ஆப் மூலம்
- கடனுக்கு விண்ணப்பத்தால் மட்டுமே இந்த வட்டி)
- யூனியன் வங்கி - 6.95 சதவீதம்