கனமழை, வெள்ளம் எதுவும் பிரச்சனையில்லை.. சென்னையை அதிகம் விரும்பும் மக்கள்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையானது ஓயத் தொடங்கிய நிலையில், 2021ல் டாப் 7 நகரங்களில் வீடு விற்பனையானது 71% அதிகரித்து, 2,36,530 வீடுகளாக அதிகரித்துள்ளது.

வீடு விற்பனையானது முன்பை விட அதிகரித்திருந்தாலும், கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டவில்லை.

இது குறித்து அனராக் அறிக்கையின் படி, கொரோனாவுக்கு முன்பை விட 10% சரிவினைக் கண்டுள்ளது.

வீட்டுக் கடனுக்கு வட்டி சரிவு

வீட்டுக் கடனுக்கு வட்டி சரிவு

2019ல் 2,61,358 வீடுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், 2020ல் 1,38,350 வீடுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமானது முந்தைய மாதங்களில் வீட்டுக் கடனுக்கு வட்டி விகிதமானது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டிருந்தது. எனினும் தேவையானது முழுதும் மீண்டு வரவில்லை எனலாம்.

கட்டணம் குறைப்பு

கட்டணம் குறைப்பு

இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் மஹாராஷ்டிரா உள்ளிட சில மாநிலங்கள், ரியல் எஸ்டேட் துறையினை ஊக்குவிக்கும் விதமாக, ஸ்டாம்ப் டியூட்டி கட்டணத்தினை குறைத்துள்ளன. இதே சமயத்தில் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக பில்டர்களும் பல சலுகளை கொடுத்து வந்தனர். ஆனால் அவையேதும் கடைசி வரையில் சரியாக கைகொடுக்க வில்லை எனலாம்.

4வது காலாண்டில் மட்டும்

4வது காலாண்டில் மட்டும்

கடந்த ஆண்டில் 4வது காலாண்டில் மட்டும் விற்பனை 39% அதிகரித்து, வீடு விற்பனையானது களை கட்டியிருந்தது. இது விழாக்கால பருவம் மற்றும் சில சாதகமான காரணிகளுக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை & ஹைத்ராபாத்

மும்பை & ஹைத்ராபாத்

அனராக் அறிக்கையின் படி, கடந்த ஆண்டினை காட்டிலும் மும்பையில் 2021ல் வீடு விற்பனையானது 72% அதிகரித்து, 76,400 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 44,320 யூனிட்களாக இருந்தது.

ஹைத்ராபாத்தில் வீடு விற்பனையானது கிட்டதட்ட மூன்று மடங்கு அதிகரித்து, 25,410 யூனிட்களாக இருந்தது. இது கடந்த 2020ல் 8,560 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 டெல்லி & புனே

டெல்லி & புனே

டெல்லி என் சி ஆரில் விற்பனையானந்து 73% அதிகரித்து, 40,050 யூனிட்களாக அதிகரித்திருந்தது. இது முந்தைய 2020ம் ஆண்டில் 23,460 யூனிட்களாக இருந்தது.

இதே புனேவில் 53% அதிகரித்து, 35,980 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 24,910 யூனிட்களாக இருந்தது.

பெங்களூரு & சென்னை

பெங்களூரு & சென்னை

ஐடி நகரமான பெங்களூரில் வீடு விற்பனையானது 33% அதிகரித்து, 33,080 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 24,910 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே நம்மூர் சென்னையில் வீடு விற்பனையானது 86% அதிகரித்து, 12,530 யூனிட்களாக அதிகரித்திருந்தது. இதே 2020ல் 6,740 யூனிட்களாக இருந்தது.

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவில் விற்பனையானது 13,080 யூனிட்களாகவும், இது 2020ல் 7150 யூனிட்களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த 7 நகரங்களில் வீடு விற்பனையானது 85% அதிகரித்து, 2,36,700 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே 2020ல் 1,28,000 யூனிட்களாக இருந்தது.

டெல்லி என் சி ஆர்& புனே புதிய வீடுவிற்பனை

டெல்லி என் சி ஆர்& புனே புதிய வீடுவிற்பனை

டெல்லி என் சி ஆரில் புதிய வீடு விற்பனையானது 2021ல் 71% அதிகரித்து, 31,710 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 18,530 யூனிட்களாக இருந்தது.

இதே புனேவில் புதிய வீடு விற்பனையானது 2021ல் 67% அதிகரித்து, 39,870 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 21,420 யூனிட்களாக இருந்தது.

 

பெங்களூரு & கொல்கத்தா புதிய வீடுவிற்பனை

பெங்களூரு & கொல்கத்தா புதிய வீடுவிற்பனை

பெங்களூரு-வில் புதிய வீடு விற்பனையானது 2021ல் 43% அதிகரித்து, 30,650 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 21,420 யூனிட்களாக இருந்தது.

கொல்கத்தாவில் புதிய வீடு விற்பனையானது 2021ல் கிட்டதட்ட 4 மடங்கு அதிகரித்து, 13,750 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3530 யூனிட்களாக இருந்தது.

சிங்கார சென்னையில் என்ன நிலவரம்?

சிங்கார சென்னையில் என்ன நிலவரம்?

வந்தாரை வாழவைக்கும் சென்னையிலும் வீடு விற்பனையானது அதிகரித்துள்ளது. இது கனமழை, வெள்ளம் என இருந்தும் கூட, சென்னையில் வீடு விற்பனையை அவ்வளவாக பாதிக்கவில்லை எனலாம். ஆக மொத்தத்தில் மக்கள் சென்னையை விரும்புவது தெரிய வந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 35% அதிகரித்து, 12,370 யூனிட்களாகவும், இதே 2020ல் 9,170 யூனிட்களாகவும் இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Home sales in Chennai increased by 86% to 12,530 units

Home sales in Chennai increased by 86% to 12,530 units/கனமழை, வெள்ளம் எதுவும் பிரச்சனையில்லை.. சென்னையை அதிகம் விரும்பும் மக்கள்.. ஏன் தெரியுமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X