கொரோனா போரில், தன் மக்களைக் காப்பாற்ற ஹாங்காங் நாடும், தன் கஜானாவில் இருந்து சுமார் 137.5 பில்லியன் ஹாங்காங் டாலரை இன்று அறிவித்து இருக்கிறது.
இது இந்திய மதிப்பில் சுமாராக 1.20 லட்சம் கோடி ரூபாய் வருகிறது.
இந்த பணத்தைக் கொண்டு தங்களால் முடிந்த வரை கொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க களம் இறங்கி இருக்கிறது ஹாங்காங்.
சம்பளம் கட்
ஹாங்காங் நாட்டின் தலைவர் கேரி லாம் (Carrie Lam) ஒரு ஆண்டு காலத்துக்கு, தன் சம்பளத்தில் 10 சதவிகிதத்தைக் குறைத்துக் கொள்ள இருக்கிறாராம். அதோடு ஹாங்காங் தலைவர் அறிவித்து இருக்கும் 137.5 பில்லியன் ஹாங்காங் டாலர் திட்டத்தில் சுமாராக 80 பில்லியன் ஹாங்காங் டாலர், சம்பள திட்டத்துக்குத் தான் போகப் போகிறதாம்.
சம்பளம்
இந்த கொரோனா பாதிப்பினால் வழக்கம் போல, மக்களால் வேலைக்கு போய் சம்பாதிக்க முடியவில்லை. எனவே, அரசு, தொழிலாளர்களுக்கு 6 மாதங்களுக்கு 50 % சம்பளத்தை மானியாக கொடுக்க இருக்கிறார்களாம். அதிகபட்சமாக மாதத்துக்கு 9,000 ஹாங்காங் டாலரை (சுமார் 81,000 இந்திய ரூபாய்) இந்த சம்பள மானியமாக கொடுக்க இருக்கிறார்களாம்.
வேண்டு கோள்
ஒரு பகுதி சம்பளத்தை அரசு கொடுக்க இருப்பதாக அறிவித்த பின்னர், கம்பெனிகள் மற்றும் முதலாளிகளிடம், தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க வேண்டாம் எனவும் அரசு வலியுறுத்தி இருக்கிறார்களாம். ஏற்கனவே அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஹாங்காங் தகித்துக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் பற்றாக்குறை
இப்படி ஹாங்காங் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க, பணத்தை அள்ளி இரைப்பதால், ஹாங்காங் நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறை சுமாராக 139.1 பில்லியன் ஹாங்காங் டாலரில் இருந்து 276.6 பில்லியன் ஹாங்காங் டாலராக அதிகரிக்குமாம். இது ஹாங்காங் நாட்டின் மொத்த ஜிடிபியில் 9.5 சதவிகிதமாம்.
ஹாங்காங்கில் கொரோனா
சமீபத்தைய கணக்குப் படி ஹாங்காங்கில் சுமார் 960 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது, 4 பேர் மரணித்து இருக்கிறார்கள். எனவே வரும் ஏப்ரல் 24 வரை சமூக விலகலை அழுத்தமாக வலியுறுத்தும் விதத்தில்... பார்கள், பப்கள் மற்றும் பொது மக்கள் கூடுவதற்கு தடை விதித்து இருக்கிறது ஹாங்காங் அரசு.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications