7 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 47 % வீழ்ச்சியடையலாம்.. சென்னையில் எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 7 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை நடப்பு ஆண்டில் 47 சதவீதம் குறைந்து, 1.38 லட்சம் யூனிட்களாக குறைய வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இது கொரோனா தொற்று நோயின் காரணமாக தேவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அனராக் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இது நடப்பு ஆண்டில் புதிய வீடு விற்பனையானது ஏழு நகரங்களில் 46 சதவீதம் குறைந்து, 1.28 லட்சம் யூனிட்களாக குறைந்துள்ளது.

மூன்றாவது அமர்விலும் லோவர் சர்கியூட்.. லாபம் எல்லாம் போச்சே..!மூன்றாவது அமர்விலும் லோவர் சர்கியூட்.. லாபம் எல்லாம் போச்சே..!

முக்கிய நகரங்களில் சரிவு

முக்கிய நகரங்களில் சரிவு

அதில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத், மற்றும் புனே உள்ளிட்ட 7 நகரங்களில் நடப்பு ஆண்டில் விற்பனை, 47 சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த 7 நகரங்களிலும் சேர்த்து மொத்தம் 1.38 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதே கடந்த 2019ம் ஆண்டில் 2.61 லட்சம் வீடுகள் விற்பனையாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

புதிய வீடுகள் விற்பனை

புதிய வீடுகள் விற்பனை

இதே புதிய வீடுகள் விற்பனையானது 1.28 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதே கடந்த 2019ம் ஆண்டில் 2.37 லட்சம் வீடுகள் விற்பனையாகியுள்ளதும் தெரிய வந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு எதிராக பார்க்கும் போது நடப்பு ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் அக்டோபர் மற்றும் டிசம்பர் காலாண்டில் வலுவான மறுமலர்ச்சி அறிகுறிகள் உள்ளன என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

தேவை அதிகரித்து வருகின்றது
 

தேவை அதிகரித்து வருகின்றது

இது குறித்து தனது கருத்தினை தெரிவித்த அனுஜ் பூரி, கொரோனா காரணமாக நடப்பு ஆண்டு சற்று மோசமானதாக இருந்தது. எனினும் விரைவான எழுச்சியினையும் கண்டு வருகின்றது. அதிலும் 2020ம் ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் ரெசிடன்ஷியல் தேவை அதிகரித்து வருகின்றது.

எழுச்சி கண்டு வருகிறது

எழுச்சி கண்டு வருகிறது

இதற்கிடையில் தற்போதைய தேவை, நடைமுறையில் உள்ள குறைந்த வட்டி, வீட்டு கடன் வட்டி விகிதங்கள் மற்றும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரையறுக்கப்பட்ட stamp duty குறைப்பு, இது தவிர பல சலுகைகள் என பலவும் வீடு விற்பனையை இன்னும் துரிதப்படுத்துகின்றன. அதோடு பண்டிகை காலம் நெருங்குவதால் வீடுகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை நிலவரம்

மும்பை நிலவரம்

மும்பை மெட்ரோ நகரங்களில் அதிகபட்சம் விற்பனௌ 44,320 வீடுகளாக இருக்கலாம் என்றும், அதனை தொடர்ந்து பெங்களூரில் 24,910 ஆக இருக்கலாம். இதே எம்எம்ஆரில் நடப்பு ஆண்டில் 45% சரிந்து 44,320 வீடுகளாக குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் 80,870 வீடுகளாக இருந்தது.

பெங்களூர் எப்படி இருக்கும்?

பெங்களூர் எப்படி இருக்கும்?

பெங்களூரில் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 51 சதவீதம் சரிந்து, 24,910 யூனிட்களாகவும், இது முந்தைய ஆண்டில் 50,450 யூனிட்களாக இருந்தது. புனேவில் விற்பனை 42 சதவீதம் சரிந்து 23,460 யூனிட்களாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 46,920 யூனிட்களாக இருந்தது.

டெல்லி நிலவரம் என்ன?

டெல்லி நிலவரம் என்ன?

டெல்லி என்சிஆரில் விற்பனை 51 சதவீதம் சரிந்து, 23,210 யூனிட்களாகவும், இது முந்தைய ஆண்டில் 46,920 யூனிட்களாக இருந்தது. இதே சென்னையில் விற்பனை 6,740 யூனிட்களாக சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டில் 11,820 யூனிட்களாக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Housing sales may down 47% in 2020 across 7 top cities

Home sales updates.. Housing sales down 47% in 2020 across 7 top cities
Story first published: Monday, December 21, 2020, 20:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X