விஸ்வரூபம் எடுக்கும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்.. உஷாரா இருங்க மக்களே..!

By என். சொக்கன்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ஈகாமர்ஸ், ஷாப்பிங் இணையதளங்கள் வெறும் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் தளமாக இல்லாமல் வாடிக்கையாளரிடம் இருந்து எப்படியாவது செலவு செய்ய வைக்க வேண்டும் எனப் பல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது.

 

இதில் முக்கியமான ஒன்ரு தான் செயற்கை நுண்ணறிவு.. ஈகாமர்ஸ், ஷாப்பிங் இணையதளங்களில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா..?!

சூழல் 1

சூழல் 1

உங்கள் மேசைமேல் ஒரு நாளிதழ் இருக்கிறது. இன்றைய செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம் என்று நீங்கள் அதை எடுத்துப் பிரிக்கிறீர்கள். அதில் ஆங்காங்கு சில விளம்பரங்கள் தெரிகின்றன. நீங்கள் 'அட' என்று ஈர்க்கப்பட்டு அந்த விளம்பரங்களில் ஒன்றைக் கவனிக்கிறீர்கள், மறுநாள் கடைக்குச் செல்லும்போது அந்தப் பொருளைத் தேடி வாங்குகிறீர்கள்.

சூழல் 2

சூழல் 2

அதே மேசைமேல் ஒரு கணினியும் இருக்கிறது, அல்லது, ஒரு செல்ஃபோன் இருக்கிறது. நீங்கள் அதில் நுழைந்து அதே நாளிதழின் இணையத் தளத்துக்குச் செல்கிறீர்கள், செய்திகளைப் படிக்கிறீர்கள். அந்தப் பக்கத்தில் ஆங்காங்கு சில விளம்பரங்கள் தெரிகின்றன. நீங்கள் 'அட' என்று ஈர்க்கப்பட்டு அந்த விளம்பரங்களில் ஒன்றைக் கிளிக் செய்கிறீர்கள், அங்குள்ள பொருளை வாங்குகிறீர்கள்.

வித்தியாசம் என்ன
 

வித்தியாசம் என்ன

இந்த இரண்டு சூழல்களும் ஒன்றுதான் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு மிக முக்கியமான வேறுபாடு இருக்கிறது: செயற்கை அறிவு (Artificial Intelligence) அல்லது இயந்திரக் கற்றல் (Machine Learning) தொழில்நுட்பம்தான் அது.

சிறுவனும், முதியவரும்

சிறுவனும், முதியவரும்

முதல் சூழலில் அந்தச் செய்தித்தாள் ஏற்கெனவே அச்சிடப்பட்டுவிட்டது, பல ஆயிரம் பிரதிகளாகப் பல ஆயிரம் வீடுகள், கடைகள், அலுவலகங்களுக்குச் சென்றுவிட்டது. அங்கு யார் அந்தச் செய்தித்தாளை எடுத்துப் பார்த்தாலும் அதே விளம்பரங்கள்தான் வரும். பத்து வயது சிறுவனும் அறுபது வயது முதியவரும் ஒரே விளம்பரங்களைத்தான் பார்ப்பார்கள். அதில் வரும் பொருட்கள் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. பிடித்தவர்கள் அவற்றை வாங்குவார்கள், பிடிக்காதவர்கள் வாங்கமாட்டார்கள், அவ்வளவுதான்.

டார்கெட் வாடிக்கையாளர்கள்

டார்கெட் வாடிக்கையாளர்கள்

ஆனால், இரண்டாவது சூழல் அப்படியில்லை. அந்தக் கணினி அல்லது செல்ஃபோனில் அந்த நாளிதழின் தளம் அச்சிடப்படவில்லை. அதை யார் எடுத்துப் பிரிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்குப் பிடிக்கக்கூடிய பொருட்களை அந்த இணையத்தளம் காண்பிக்கிறது. சில நேரங்களில் சில குறிப்பிட்ட விளம்பரங்களைத் திரும்பத் திரும்பக் காண்பித்துப் பிடிக்கச் செய்கிறது, வாங்கவைக்கிறது.

தேவையின் வித்தியாசம்

தேவையின் வித்தியாசம்

எடுத்துக்காட்டாக, ஒரு சிறுவன் அந்த இணையத்தளத்தில் செய்திகளைப் படிக்கும்போது ஒரு பொம்மையின் விளம்பரம் அங்குத் தோன்றலாம். அதே தளத்தை ஒரு முதியவர் பயன்படுத்தும்போது புனிதப் பயணம் செல்வதற்கான விளம்பரம் அங்குத் தோன்றலாம்.

ஆனால், யாருக்கு எது பிடிக்கும் என்று அந்த இணையத்தளத்துக்கு எப்படித் தெரியும்?

சிறுவனுக்குப் பொம்மை, முதியவருக்குப் புனிதப் பயணம் என்று இங்குச் சொல்லியிருப்பது ஒரு மிக எளிய எடுத்துக்காட்டுதான்.

 

தொழில்நுட்பத்தின் சக்தி

தொழில்நுட்பத்தின் சக்தி

இதுபோல் நம் அறிவுக்கு எட்டாத இன்னும் பலப்பல வழிகளில் கணினிகள் நம்மைப்பற்றிப் புரிந்துகொள்கின்றன, நம்முடைய செயல்பாடுகளை வைத்தே நம்மைப்பற்றித் தெரிந்துகொள்கின்றன, அல்லது, நம்மைப்போன்ற வயதுள்ள, சமூகப் பின்னணியுள்ள, ஆர்வமுள்ள மக்களுடைய விருப்பங்களை நம்மீது திணித்து நாம் அதற்கு மயங்குகிறோமா என்று ஆழம் பார்க்கின்றன.

துல்லியமான கணிப்பு

துல்லியமான கணிப்பு

இவை அனைத்தும் அந்தக் கணினியின் அறிவைப் படிப்படியாக உயர்த்துகின்றன. அதன்மூலம், நாம் எந்த மாதிரியான விளம்பரங்களைக் கிளிக் செய்யக்கூடும் என்று அவற்றால் ஓரளவு துல்லியமாகக் கண்டுபிடித்துவிட இயலுகிறது.

ஈகாமர்ஸ்

ஈகாமர்ஸ்

இது வெறும் விளம்பரங்களோடு நின்று விடுவதில்லை. ஈகாமர்ஸ் எனப்படும் மின்வணிகத் தளங்கள் செயற்கை அறிவை இன்னும் பல விஷயங்களுக்குப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக

ஒரு ஈகாமர்ஸ் தளத்தில் நீங்கள் எந்த நேரத்தில் எந்தப் பொருளை வாங்கக்கூடும், அது எந்த விலையில் இருந்தால் வாங்கக்கூடும், நீங்கள் அதை எந்த இடத்தில் பெறக்கூடும் (Deliver Location), அந்தப் பொருள் உங்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதா, நீங்கள் அதைத் திரும்ப அனுப்பும் வாய்ப்புகள் எவ்வளவு, நீங்கள் அந்தப் பொருளுக்கு எந்தக் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தக்கூடும், நீங்கள் அந்தக் கிரெடிட் கார்ட் பில்லை ஒழுங்காகச் செலுத்துவீர்களா, மாட்டீர்களா, வணிகத்தளம் எந்த வண்ணத்தில் இருந்தால் உங்களுக்குப் பிடிக்கும், அதன் பின்னணியில் எந்தப் படம் இருந்தால் நீங்கள் அங்குக் கூடுதல் நேரம் செலவிடுவீர்கள், பொத்தான்களின் (Button) வண்ணம், வடிவம், அளவு எப்படி இருக்கவேண்டும்... இப்படித் திரையிலும் அதற்குப் பின்னாலும் நூற்றுக்கணக்கான விஷயங்களைக் கணினிகள் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றன, அதன் அடிப்படையில் உங்களைக் கண்டிப்பாக வாங்கவைக்கக்கூடிய, உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கக்கூடிய ஓர் அனுபவத்தை வழங்குகின்றன.

 

 மனிதன் Vs மெஷின்

மனிதன் Vs மெஷின்

இவ்வளவு விஷயங்களையும் ஒரு தனி மனிதர் செய்தால் அவர் குழம்பிப்போய்ப் பாயைப் பிராண்ட ஆரம்பித்துவிடுவார். ஆனால், கணினிக்கு அந்தப் பிரச்சனையே இல்லை. உங்களைப் பற்றிய தகவல்களையும் உங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் அவை கூர்ந்து கவனிக்கின்றன, அவற்றை வைத்துப் பல விஷயங்களைக் கணக்கிடுகின்றன.

மெஷின் லேர்னிங்

மெஷின் லேர்னிங்

இந்தக் கணிப்புகள் அனைத்தும் சரியாக இருக்கும் என்று உத்தரவாதம் இல்லை. ஆனால், அதுவும் கணினிக்கு மகிழ்ச்சிதான். எது தவறான கணிப்போ அதைப் பயன்படுத்திப் பாடம் கற்றுக்கொள்கிறது, அடுத்தக் கணிப்பை இன்னும் துல்லியமாகச் செய்கிறது.

ஈகாமர்ஸ் தளங்கள்

ஈகாமர்ஸ் தளங்கள்

இன்றைய தேதிக்குச் சிறிய, நடுத்தர, பெரிய ஈகாமர்ஸ் தளங்கள் அனைத்திலும் இதுபோன்ற இயந்திரக் கற்றல் (மெஷின் லேர்னிங்) தொழில்நுட்பங்கள் பயனில் இருக்கின்றன. வாடிக்கையாளராகிய நமக்கு இதனால் என்ன நன்மை, அல்லது என்ன பாதிப்பு?

நன்மையா..? தீமையா..?

நன்மையா..? தீமையா..?

வணிகம் நன்கு நடக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அதில் எந்தத் தவறும் இல்லை. அதே நேரம், அது இரு தரப்பினருக்கும் பயன் தரவேண்டும். அதாவது, இயந்திரக் கற்றலின் மூலம் திட்டமிட்டு நம் பார்வைக்கு வைக்கப்படும் பொருட்களை அல்லது வசதிகளை நாம் தேவையில்லாமல் பயன்படுத்திவிடக்கூடாது. அதற்கு நம்முடைய நடவடிக்கைகளைச் சற்று கூர்ந்து கவனிக்க நாம் பழகவேண்டும்.

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

எந்தவொரு பங்கை வாங்குவதற்குமுன்பும் 'நான் இந்தப் பங்கை இந்த விலையில் வாங்க விரும்புகிறேன். ஏனென்றால்' என்று ஒரு தாளில் எழுதச் சொல்கிறார் புகழ் பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட். அந்த 'ஏனென்றால்'க்குப் பிறகு, அந்தப் பங்கை நாம் வாங்குகிற காரணத்தை எழுதவேண்டுமாம். ஒருவேளை காரணம் தெரியாவிட்டால் அந்தப் பங்கை வாங்கக்கூடாதாம்.

 செயற்கை அறிவு Vs இயற்கை அறிவு

செயற்கை அறிவு Vs இயற்கை அறிவு

கிட்டத்தட்ட அதேபோன்ற ஓர் உத்தி இங்கும் நமக்குப் பயன்படும். என்ன தான் செயற்கை அறிவின் மூலம் பொருட்கள் நம்மிடம் திணிக்கப்பட்டாலும், நம்முடைய இயற்கை அறிவைப் பயன்படுத்தி நாம் வேண்டியவற்றை மட்டும் பிரித்துக் காண வேண்டும்.

incognito mode நல்ல வழி

incognito mode நல்ல வழி

'ம்ஹூம், அதெல்லாம் கஷ்டம்' என்கிறவர்கள் தங்களுடைய கணினி, செல்பேசியில் உள்ள Private Mode அல்லது incognito modeஐ பயன்படுத்தலாம். இதன்மூலம் அந்த வணிகத்தளத்துக்கு உங்களைப் பற்றிப் பல விஷயங்கள் தெரிகிற வாய்ப்பு குறையும், அவர்களுடைய கணிப்புகளும் அவ்வளவு துல்லியமாக இருக்காது.

இதுவும் ஒரு பிரச்சனை தான்

இதுவும் ஒரு பிரச்சனை தான்

ஆனால், இந்த முறையை எல்லா இடங்களிலும் பயன்படுத்த இயலாது. சில தளங்கள் கண்டிப்பாக உங்களுடைய தகவல்களைக் கேட்கின்றன. அதாவது, நீங்கள் யார் என்று சொல்லி உள்நுழையச்சொல்கின்றன (Sign In).

மனத்துக்குப் பூட்டுப்

மனத்துக்குப் பூட்டுப்

ஒருவேளை உள்நுழையாவிட்டாலும் வேறு வழிகளில் உங்களைப் பின்தொடரும் நுட்பங்கள் இருக்கின்றன. சட்டப்படி அவை அனுமதிக்கப்பட்டுள்ளவை தான் என்பதால் அவற்றை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டுதான் இருப்பார்கள். அதனால், நம் மனத்துக்கு அல்லது கைகளுக்குப் பூட்டுப்போடும் வழிதான் தொலைநோக்கில் சிறந்தது.

நல்லதும் இருக்குப் பாஸ்

நல்லதும் இருக்குப் பாஸ்

இன்னொரு கோணம், செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் முற்றிலும் மோசமானது என்று சொல்வதற்கில்லை. பல தளங்கள் அதைச் சிறப்பாகப் பயன்படுத்தி வியக்கவைக்கும் வசதிகளை வழங்குகின்றன.

ஷாப்பிங்

ஷாப்பிங்

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு தளத்தில் நான்கைந்து புத்தகங்களை வாங்குகிறீர்கள் என்றால், அதை வைத்து அவர்களே உங்களுக்கு இன்னும் பல நல்ல நூல்கள், ஆசிரியர்களை அறிமுகப்படுத்துவார்கள்.

அதுபோன்ற வசதிகளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம், பதிலுக்கு அவர்கள் நம்மிடம் கேட்கும் தகவல் என்ன, அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைமட்டும் கவனித்துக்கொள்ளவேண்டும்.

 

தனியுரிமை பாதுகாப்பு

தனியுரிமை பாதுகாப்பு

செயற்கை அறிவு (Artificial Intelligence), இயந்திரக் கற்றல் (Machine Learning), வாடிக்கையாளர்களுடைய தனியுரிமையைப் பாதுகாப்பது என அனைத்தும் தொடக்க நிலையிலிருந்து முதிர்ச்சி நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

பேராசை பிடித்த தொழிலதிபர்கள்

பேராசை பிடித்த தொழிலதிபர்கள்

வருங்காலத்தில் இந்தத் துறை சரியான வழிகாட்டுதல்கள், விதிமுறைகளுடன் குழப்பமில்லாமல், தவறான திசை திருப்பல்கள் இல்லாமல் அனைவருக்கும் பயன்படுகிறவகையில் அமையும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் பேராசை பிடித்த பல தொழிலதிபர்களுக்குச் செயற்கை அறிவு (Artificial Intelligence), இயந்திரக் கற்றல் (Machine Learning) பெரும் கருவியாக மாறியுள்ளதைும் நாம் ஒப்புக்கொள் வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Artificial Intelligence works in ECommerce; how it make you spent more money

How Artificial Intelligence works in ECommerce; how it make you spent more money நீங்க ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரா..? நீங்கள் 'இதில்' ஏமாற்றப்பட்டு இருக்கலாம்..!!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X