17 வருடமாக தொடரும் பஞ்சாயத்து: பிஜேபி Vs காங்கிரஸ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இதன் விலை பெரிய அளவில் குறைந்த நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதன் மற்றும் வியாழக்கிழமை விலை உயர்வின் மூலம் டெல்லி உட்பட நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது.

சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. 6 நாட்களுக்கு பிறகு சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு.. வாங்கலாமா..? சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. 6 நாட்களுக்கு பிறகு சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு.. வாங்கலாமா..?

இந்தியாவில் கடந்த 17 வருடமாகப் பெட்ரோல் விலை உயர்வு குறித்து ஆளும் கட்சிக்கு எதிராக எதிர் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் கடந்த 7 வருடத்தில் நடந்தது இதற்கு முன்பு நடந்தது இல்லை என்பது தான் தற்போது முக்கியமான பிரச்சனை..!!

மோடி அரசு

மோடி அரசு

மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 7 வருடத்தில் இந்தியாவில் பெட்ரோல் விலை 40 சதவீதம் உயர்ந்து 71.41 ரூபாயில் இருந்து 100.21 ரூபாய்க்கு உயர்ந்து உள்ளது. இதேபோல் டீசல் விலை 56 சதவீதம் அதிகரித்து 57.28 ரூபாயில் இருந்து 89.53 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சி

காங்கிரஸ் ஆட்சி

இதுவே கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த முதல் 7 வருடத்தில் பெட்ரோல் விலை 77 சதவீதம் உயர்ந்து 36 ரூபாயில் இருந்து 63 ரூபாய்க்கும், டீசல் விலை 66 சதவீதம் அதிகரித்து 23 ரூபாயில் இருந்து 38 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

ஆனால் கச்சா எண்ணெய் விலை தலைகீழாக உள்ளது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 34.16 டாலரில் இருந்து 110 டாலர் வரையில் உயர்ந்தது.

கச்சா எண்ணெய் விலை 222% உயர்வு

கச்சா எண்ணெய் விலை 222% உயர்வு

இது கிட்டதட்ட 222 சதவீதம் உயர்வு, ஆனால் இந்தக் காலகட்டத்தில் பெட்ரோல் விலை உயர்ந்தது 77 சதவீதம் மட்டுமே என்பது கவனிக்க வேண்டியது அவசியம். கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக அனைத்துப் பெட்ரோலியம் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

மோடியின் 7 வருட ஆட்சி

மோடியின் 7 வருட ஆட்சி

ஆனால் இதுவே மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 7 வருடத்தில் அதாவது 2014 முதல் கச்சா எண்ணெய் விலை 109 டாலரில் இருந்து 78.85 டாலர் அளவிற்கு (ஜூன் 2021 சராசரி விலை) குறைந்துள்ளது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் பெட்ரோல் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதிக வரி வருமானம்

அதிக வரி வருமானம்

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அதீத வரி விதிப்பின் வாயிலாக மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியே வைத்து அதிகளவிலான வருமானத்தைப் பார்த்து வருகிறது.

வரி மற்றும் டீலர் கமிஷன்

வரி மற்றும் டீலர் கமிஷன்

2014க்கு முன் ஒரு லிட்டருக்கு வரி மற்றும் டீலர் கமிஷன் வாயிலாகக் காங்கிரஸ் அரசு 26.6 ரூபாய் மட்டுமே வசூலித்த நிலையில் தற்போது 59.5 ரூபாய் வரியாக வசூலிக்கிறது மோடி தலைமையிலான பிஜேபி அரசு.

எண்ணெய் பத்திரங்கள்

எண்ணெய் பத்திரங்கள்

அதிகளவில் வரி விதிக்கப்படக் காரணம் காங்கிரஸ் ஆட்சியில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட எண்ணெய் பத்திரங்கள் தான் என்று பிஜேபி குற்றம்சாட்டி வருகிறது. இது கடந்த 2 வருடத்திற்கும் அதிகமான காலத்திற்குக் கூறப்பட்டு வருகிறது.

மக்களின் சுமை

மக்களின் சுமை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது விலை உயர்த்துவதைக் கட்டுப்படுத்த மக்களுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்தியில் இருக்கும் சுமையைக் குறைப்பதற்காகவும், அரசின் நிதிநிலையைச் சீர்படுத்தவும் இந்தப் பத்திரங்கள் கொடுக்கப்பட்டது. இது பொருளாதாரத்தில் அடிப்படையான விஷயம் எனக் காங்கிரஸ் கூறுகிறது.

பெட்ரோல், டீசல் விற்பனை

பெட்ரோல், டீசல் விற்பனை

அதேவேளையில் காங்கிரஸ் ஆட்சியில் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட எண்ணெய் பத்திரங்களின் மதிப்பு 1.3 லட்சம் கோடி தான், ஆனால் 2021ஆம் நிதியாண்டில் முதல் 10 மாதம் மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மத்திய அரசு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வரி வருமானத்தைப் பெற்றுள்ளதாக முன்னாள் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

வரி வருமானம்

வரி வருமானம்

மேலும் 2014 முதல் 2021ஆம் நிதியாண்டில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் அரசுக்கான வரி வருமானம் சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் எண்ணெய் பத்திரங்கள் மூலம் அரசின் சுமை தோராயமாக 2 மடங்கு மட்டுமே அதிகரிக்கக் கூடும்.

காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் கேள்வி

எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட 1.3 லட்சம் கோடி மதிப்பிலான எண்ணெய் பத்திரங்களுக்குப் போதுமான நிதியைத் திரட்டப்பட்ட பின்னரும் எதற்காக அதிக வரி விதிக்கப்பட்டு வருகிறது எனக் காங்கிரஸ் தரப்பில் தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: crude oil petrol price
English summary

How BJP and UPA taxed petrol in last 17 years: Big Political debate of history

How BJP and UPA taxed petrol in last 17 years: Big Political debate of history
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X