சார்லஸ்-க்கு என்னவெல்லாம் கிடைக்கும்..? மொனார்சி முதல் கிரவுன் எஸ்டேட் வரை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டன் நாட்டின் ராணி எலிசபெத் உடல்நல குறைவால் 96 வயதில் காலமானார். இவரது மரணம் பிரிட்டன் நாட்டைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டன் நாட்டின் 3வது பெண் பிரதமராக Liz Truss பதவியேற்றிய 2 நாளில் ராணி எலிசபெத் மறைவு என்பது பிரிட்டன் அரசுக்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்துள்ளது.

பிரிட்டன் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரிட்டன் அரசு குடும்ப நிறுவனம், சொத்துக்கள், அரண்மனைகள் தற்போது இவர் கையில் வர உள்ளது.

சரக்கு ஆர்டர் செய்தது தப்பா.. ரூ.4 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பல்..!!சரக்கு ஆர்டர் செய்தது தப்பா.. ரூ.4 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பல்..!!

Royal நிறுவனம்..!

Royal நிறுவனம்..!

சுமார் 28 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுலவனம் தான் இந்த Royal Firm இந்த நிறுவனத்தை Monarchy PLC என்று வெளியுலகில் அறியப்படுகிறது. இந்த நிறுவத்தை Windsor அமைப்பு மற்றும் சில முக்கிய அரசு குடும்ப உறுப்பினர்கள் இயக்கி வருகின்றனர்.

Monarchy நிறுவனம் உலகளவில் தனது வர்த்தகத்தைச் செய்து வரும் நிலையில், பிரிட்டன் பொருளாதாரத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மல்லியன் கணக்கில் வருவாயை அளித்து வருகிறது.

 

முக்கிய உறுப்பினர்கள்

முக்கிய உறுப்பினர்கள்

இந்த Royal Firm இந்த நிறுவனத்தில் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, கார்ன்வால் டச்சஸ்; இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட், கேம்பிரிட்ஜ் டச்சஸ்; இளவரசி அன்னே, ராணியின் மகள் மற்றும் இளவரசர் எட்வர்ட், ராணியின் இளைய மகன் மற்றும் அவரது மனைவி சோஃபி, கவுண்டஸ் ஆஃப் வெசெக்ஸ் ஆகியோர் உள்ளனர்.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

Monarchy நிறுவனம் சுமார் 28 பில்லியன் டாலர் அளவிலான ரியல் எஸ்டேட் சொத்துக்களை வைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் படி இந்த ரியல் எஸ்டேட் சொத்துக்களின் மதிப்பு

கிரவுன் எஸ்டேட்: 19.5 பில்லியன் டாலர்
பக்கிங்ஹாம் அரண்மனை: 4.9 பில்லியன் டாலர்
தி டச்சி ஆஃப் கார்ன்வால்: 1.3 பில்லியன் டாலர்
தி டச்சி ஆஃப் லான்காஸ்டர்: 748 மில்லியன் டாலர்
கென்சிங்டன் அரண்மனை: 630 மில்லியன் டாலர்
ஸ்காட்லாந்தின் கிரவுன் எஸ்டேட்:592 மில்லியன் டாலர்

 

அரசு குடும்பம்

அரசு குடும்பம்

அரசு குடும்பம் தனிப்பட்ட முறையில் இந்தச் சொத்துகள் மற்றும் வணிகத்தில் இருந்து லாபம் ஈட்டவில்லை என்றாலும், பிரிட்டன் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே இதன் நோக்கம். இதற்காக Monarchy நிறுவனம் இலவச ஊடக விளம்பரம் மற்றும் ராயல் வாரண்ட்களைப் பெறுகிறது.

கிரவுன் எஸ்டேட்

கிரவுன் எஸ்டேட்

கிரவுன் எஸ்டேட் என்பது பிரிட்டிஷ் அரசு குடும்பத்திற்கது சொந்தமான நிலங்கள் மற்றும் உடைமைகளின் தொகுப்பாகும், இது ராணி இரண்டாம் எலிசபெத் வசம் இருந்தது தற்போது அவரின் மறைவிற்குப் பின்பு தற்போது மன்னர் சார்லஸ்-க்கு வர உள்ளது.

கிரவுன் எஸ்டேட் 2021-2022 நிதியாண்டில் 312.7 மில்லியன் டாலர் நிகர லாபத்தை அறிவித்தது, முந்தைய ஆண்டை விட 43 மில்லியன் டாலர் அதிகமாகும்.

 

Sovereign Grant தொகை

Sovereign Grant தொகை

அரசு குடும்பத்திற்குக் கிடைக்கும் Sovereign Grant தொகை இந்த Monarchy நிறுவனம் மற்றும் கிரவுன் எஸ்டேட் அமைப்பின் லாபத்தில் இருந்து தான் பிரிட்டன் அரசு வழங்குகிறது. முதலில் இந்தத் தொகை 15% ஆக இருந்தது ஆனால் 2017-2018 ல் பக்கிங்ஹாம் அரண்மனை மறுசீரமைப்பு பணிகளுக்காக 25% ஆக உயர்த்தப்பட்டது.

ராணியின் தனிச் சொத்துக்கள்

ராணியின் தனிச் சொத்துக்கள்

14வது நூற்றாண்டு முதல் Privy Purse இயங்கி வருகிறது, இதில் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மட்டும் அல்லாமல் வருவாய் ஈட்டும் சில வர்த்தகமும் உள்ளது. இதில் இருந்து தான் Duchy of Lancaster, எலிசபெத் ராணி குடும்பத்திற்குப் பணம் செலத்துகிறது.

மார்ச் 2022 இன் இறுதியில், டச்சி ஆஃப் லான்காஸ்டர் $652.8 மில்லியன் நிகரச் சொத்துக்களை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, இது $24 மில்லியன் நிகர உபரியை வழங்கியது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Britain royal family's business empire works? Royal Firm, Crown Estate, Privy Purse

How Britain royal family's business empire works? Royal Firm, Crown Estate, Privy Purse மன்னர் சார்லஸ்-க்கு என்னவெல்லாம் கிடைக்கும்..? மொனார்சி முதல் கிரவுன் எஸ்டேட் வரை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X