Budget 2021.. கல்வித் துறையினரின் எதிர்பார்ப்புகள்.. நிறைவேறுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரப்பரப்பான சூழலுக்கும் மத்தியில் நாளை மத்திய பட்ஜெட்டினை தாக்கல் செய்யவுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் ஏற்பட்ட தாக்கத்தால், இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியினை சந்தித்தது. இதன் காரணமாக பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்தனர். பல ஆயிரம் பேர் தங்களது வாழ்வாதரங்களை இழந்தனர்.

இப்படி பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் நாளை மத்திய பட்ஜெட் நடக்கவுள்ளது. பல சிக்கல்களுக்கும் மத்தியில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், குறிப்பாக பலமான நிதிப்பிரச்சனையில் அரசு உள்ளது. ஏனெனில் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கடந்த ஆண்டில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டினை போல இருக்குமா? என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

பலத்த எதிர்பார்ப்பு

பலத்த எதிர்பார்ப்பு

அதோடு கடந்த ஆண்டினை காட்டிலும் ஒவ்வொரு துறைக்கும் அதிகளவிலான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.ஏனெனில் கடந்த ஆண்டை காட்டிலும் சில துறைகள் தவிர, பெரும்பாலான துறைகள் சரிவினை சந்தித்துள்ளன. ஆக இதன் காரணமாக அவற்றிற்கு சற்றே உதவும் நிலையில் இந்த பட்ஜெட் இருக்க வேண்டும் என்பதே பல துறையினரின் எதிர்பார்ப்பும் உள்ளது.

கல்வித்துறையில் எதிர்பார்ப்பு

கல்வித்துறையில் எதிர்பார்ப்பு

அந்த வகையில் கல்வித் துறையிலும் சில எதிர்ப்பார்ப்புகள் நிலவி வருகின்றன. ஆக அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க விருக்கிறோம். இந்த கொரோனா பல துறைகளில் பல வகையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இது கல்வித் துறையிலும் எதிர்பாராத பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

ஆன்லைனில் கல்வி
 

ஆன்லைனில் கல்வி

குறிப்பாக கல்வி துறையில் பல ஆன்லைன் மாற்றங்களைக் கொடுத்துள்ளது, குறிப்பாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் விதங்களும் மாறியுள்ளன. இதனால் கொரோனாவே நாட்டை விட்டு சென்றாலும், பழைய நிலைக்கு திரும்புமா என்பதே கேள்விக்குறியாகவே உள்ளது. KPMG அறிக்கையின் படி, இந்திய கல்வித்துறையின் சந்தை மதிப்பு 1.96 பில்லியன் டாலர் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வித் துறையின் வளர்ச்சி

கல்வித் துறையின் வளர்ச்சி

இதே இந்த விகிதம் 2030ல் 10 டிரில்லியன் டாலராக இருக்கலாம் என்றும் அரசு கணிப்புகள் கூறுகின்றது. இந்தியாவில் ஆன்லைன் கல்வி முறை என்பது தடுத்து நிறுத்த முடியாதவை என்பதனையே இவை சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மிக ஆழமாக ஊடுருவிச் செல்லும் இதே நேரத்தில், தனித்துவமான தொழில்நுட்பம் என்பது, நாட்டின் கல்வித்துறையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான ஒரு கருவியாகும்.

தூண்டுகோலாக இருக்க வேண்டும்

தூண்டுகோலாக இருக்க வேண்டும்

ஆக இந்த பட்ஜெட்டில் தரமான கல்வித்துறைக்கு முக்கியமான தூண்டுகோலாக இருக்க வேண்டும். குறிப்பாக டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்க நிதியினை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக இந்த ஆன்லைன் கல்வி முறையை ஊக்குவிப்பதற்காக இணையம், உள்கட்டமைப்பு, டேட்டா உற்பத்தி, வரி சலுகை இருக்க வேண்டும். குறிப்பாக துல்லியமான இணைய வேகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இது அரசின் பொறுப்பு

இது அரசின் பொறுப்பு

மேலும் லேப்டாப், நோட்புக், ஸ்மார்ட்போன் போன்ற பொருளாதார இணைப்பு சாதனங்களை நாட்டின் மூலை முடுக்கெங்கும் கொண்டு செல்ல வேண்டும். இந்த இலக்கினை அடைவது அரசின் பொறுப்பாகும். டிஜிட்டல் கல்விக்கான உலகளாவிய மையம் மூலமாக மாணவர்களை எளிதாக அணுக முடியும். ஆக பட்ஜெட் 2021 ஆனது கல்வித் துறைக்கான உள்கட்டமைப்பு மற்றும் ஆன்லைன் கற்றலுக்கு முழு தொகுப்பினையும் அளிக்க வேண்டும்.

உகந்த துறையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்

உகந்த துறையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்

தற்போது ஆன்லைன் கல்வியை முறைப்படுத்துவது மிக அவசியமானதாகும். இது 2021 பட்ஜெட்டில் கல்வித் துறையானது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும். ஆக கல்வித்துறைக்கு இந்த பட்ஜெட்டில் உகந்த தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நாட்டின் எதிர்கால குடிமக்களை கருத்தில் கொண்டு அதிகம் கவலைப்படக் கூடிய ஒரு விஷயமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How budget 2021 can help the education sector?

Budget 2021 expectations.. How budget 2021 can help the education sector?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X