டிஜிட்டல் ரூபாய் இப்படி தான் இருக்கும்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..? - வீடியோ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நாணய கொள்கை முடிவில் 5வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் வங்கியில் கடன் வாங்கியவர்களின் ஈஎம்ஐ தொகை அதிகரிக்க உள்ளது.

குறிப்பாக வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்குக் கடந்த 4 முறை வட்டி விகிதத்தை உயர்த்திய போது கடன் காலத்தை மட்டுமே அதிகரிக்கப்பட்ட நிலையில், இந்த முறை வட்டி உயர்வின் போது Buffer முடிந்த நிலையில் ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் இரு மாத நாணய கொள்கை முடிந்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த போது டிஜிட்டல் ரூபாய் குறித்து முக்கியமான விபரத்தைத் தெரிவித்தார்.

 இந்திய பெண் சுஷ்மிதா சுக்லா நியூயார்க் பெடரல் ரிசர்வ்-ன் முதல் சிஓஓ ஆனார்.. யார் இவர்..?! இந்திய பெண் சுஷ்மிதா சுக்லா நியூயார்க் பெடரல் ரிசர்வ்-ன் முதல் சிஓஓ ஆனார்.. யார் இவர்..?!

நாணய கொள்கை கூட்டம்

நாணய கொள்கை கூட்டம்

டிசம்பர் 7 ஆம் தேதி காலையில் முடிந்த இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் SDF விகிதம் 6 சதவீதமாகவும், வங்கி விகிதமான MSF 6.5 சதவீதமாக உயர்த்துவதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார்.

வட்டி விகித உயர்வு

வட்டி விகித உயர்வு

இந்த நிலையில் வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட பின்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் மக்களுக்கு டிஜிட்டல் ரூபாய் குறித்த முக்கியமான விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.

ஆர்பிஐ சோதனை

ஆர்பிஐ சோதனை

சமீபத்தில் ஆர்பிஐ சோதனைக்காக அறிமுகம் செய்த டிஜிட்டல் ரூபாய்-க்கும் யூபிஐக்கும் மத்தியில் அதிகப்படியான குழுப்பம் இருக்கும் நிலையில், இதைக் குறிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்பிஐ உள்ளதாகத் தெரிவித்தார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.

யூபிஐ விளக்கம்

யூபிஐ விளக்கம்

யூபிஐ என்பது ஒருவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மற்றொருவரின் வங்கி கணக்கிற்குச் செல்லும் ஒரு கட்டமைப்பு. அதாவது குமார் என்பவர் பிரகாஷ் என்பவருக்கு 10 ரூபாய் அளிக்க வேண்டும், குமார் QR code ஸ்கான் செய்து தனது வங்கி கணக்கில் இருக்கும் 10 ரூபாயை, பிரகாஷ் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும். இந்தச் செயல்முறையில் இரு பக்கமும், வங்கிகளின் தலையீடு இருக்கும் அதாவது வரவு, செலவுகளைக் கணக்கு வைக்கும்.

டிஜிட்டல் ரூபாய் விளக்கம்

டிஜிட்டல் ரூபாய் விளக்கம்

ஆனால் டிஜிட்டல் ரூபாய் என்பது வங்கிகள் தலையீடு இல்லாமல் ஒருவரின் வேலெட்-ல் இருந்து மற்றொரு வருவரின் வேலெட்-க்குச் செல்லும். இதில் வங்கிகளின் தலையீடு இருக்காது ஆனால் நிர்வாகம் செய்யும். அதாவது தற்போது நிஜமாகவே 10 ரூபாய் நோட்டை ஒருவரின் பர்ஸ்-ல் இருந்து எடுத்து மற்றொருவருக்கு அளித்தால், அதை அவர் தனது பர்ஸ்-ல் வைத்துக்கொள்வார்.

வித்தியாசம்

வித்தியாசம்

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் யூபிஐ - ஒரு வங்கி கணக்கிற்கும், மற்றொரு வங்கி கணக்கிற்குமான பரிமாற்றம். ஆனால் டிஜிட்டல் ரூபாய் என்பது வேலெட் - வேலெட் மத்தியிலான பணப் பரிமாற்றம். இதே போல் டிஜிட்டல் ரூபாய் பரிமாற்றத்தை வங்கிகள் செய்யாது, CBDC தான் செய்யும்.

வீடியோ

டிஜிட்டல் ரூபாய் எப்படி இருக்கும், அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். இதற்கா வீடியோ தான் இது.

டிஜிட்டல் ரூபாய் இப்படி தான் இருக்கும்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..? - வீடியோ
டிஜிட்டல் ரூபாய் இப்படி தான் இருக்கும்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..? - வீடியோ
டிஜிட்டல் ரூபாய் இப்படி தான் இருக்கும்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..? - வீடியோ
டிஜிட்டல் ரூபாய் இப்படி தான் இருக்கும்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..? - வீடியோ
டிஜிட்டல் ரூபாய் இப்படி தான் இருக்கும்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..? - வீடியோ
டிஜிட்டல் ரூபாய் இப்படி தான் இருக்கும்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..? - வீடியோ
டிஜிட்டல் ரூபாய் இப்படி தான் இருக்கும்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..? - வீடியோ
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How digital rupee looks; How to use video guide; Difference between UPI, Digital rupee

How digital rupee looks; How to use video guide; Difference between UPI, Digital rupee
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X