லட்சக்கணக்கில் அதிகரிக்கும் ஊதியம்.. அடிக்கடி வேலையை மாற்றும் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்கள் கவலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக ஐடி துறை என்றாலே அதிக சம்பளம் என்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதிக சம்பளமே கொடுத்தாலும், ஊழியர்கள் அடிக்கடி தங்களது வேலையை மாற்றுகிறார்கள்.

மேலும் ஊழியர்கள் தற்போதெல்லாம் பங்குகளை விரும்புவதில்லை. பணத்தினை தான் விரும்புகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல ஐடி பொறியாளர்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் அவர்களை தக்கவைத்துக் கொள்வது என்பது கடினமாக உள்ளது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் இத்துறையில் சம்பளம் அதிகம். அதோடு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

பங்கு வேண்டாம் பணம் தான் வேண்டும்

பங்கு வேண்டாம் பணம் தான் வேண்டும்

முந்தைய காலத்தில் எல்லாம் ஐடி பொறியாளர்களை தக்கவைத்துக் கொள்ள, பொறியாளார்கள் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு ESOPs திட்டம் மூலம் நீண்டகாலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளப்படுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஊழியர்கள் பங்குகளை விரும்புவதில்லை. மாறாக பணத்தினை தான் விரும்புகின்றனர். அதோடு பெரும்பாலும் குறுகிய காலத்தில் சம்பள அதிகரிப்பினை எதிர்பார்க்கின்றனர்.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

அதோடு தற்போதைய சம்பள விகிதம் குறித்த ஒரு விவாதத்தில், ஜீனியர் மற்றும் நடுத்தர அளவிலான பொறியாளர்களை பணியமர்த்துவதும், தக்க வைத்துக் கொள்வதும் கடினம். ஜீனியர் மட்டத்தில் ESOPsகளை யாரும் விரும்பவில்லை. அவர்களுக்கு பணம் தான் தேவை. இது குறித்து ஒரு ஊழியர்கள் மட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஒரு ஸ்கீரின் சாட் இந்தியா டுடேவில் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு வருடத்திற்கு 15 லட்சம் ரூபாயில் இருந்து, 22 லட்சம் ரூபாயாக சமீபத்தில் ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. ஆனால் அவர் தற்போது வருடத்திற்கு 40 லட்சம் சம்பளம் கிடைத்தால், அந்த நிறுவனத்தினை விட்டு வெளியேறுவதை பற்றி யோசிக்கலாம் என கூறியுள்ளார்.

அதிக தேவை உள்ளது

அதிக தேவை உள்ளது

இதே மற்றொரு ஊழியர் தனக்கு சமீபத்தில் தான் மூன்று மடங்கு சம்பள உயர்வு கிடைத்ததாகவும், அதாவது வருடத்திற்கு 12 லட்சம் ரூபாயில் இருந்து, 36 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது மற்ற துறையினருடன் ஒப்பிடும்போது அதிக சம்பளம் என்று கருதப்பட்டாலும், சிறந்த திறமை உடைய ஐடி பொறியாளார்களுக்கு எப்போதுமே தேவை உள்ளது.

 பொறியாளார்களுக்கு சர்வதேச அளவில் தேவை உண்டு

பொறியாளார்களுக்கு சர்வதேச அளவில் தேவை உண்டு

நல்ல திறமை வாய்ந்த ஐடி பொறியாளர்களுக்கு இந்தியாவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவில் தேவை அதிகம் உண்டு. எனினும் மற்றொரு தரப்பில் ஐடி ஊழியர்களுக்கு சம்பளம் என்பது சராசரியாக ஆண்டுக்கு 6,92,585 லட்சம் ரூபாயாக உள்ளது. இதுவும் அவர் பணிபுரியும் நிறுவனம் மற்றும் அவரின் அனுபவத்தை பொறுத்து மாறுபடும். ஆக மேற்கூறிய விகிதம் என்பது மிக அதிகம். பெரும்பாலான ஐடி ஊழியர்களின் சம்பளம் என்பது குறைவாகவே இருக்கும். மேற்கூறிய ஊழியர்களின் சம்பளம் என்பது அவர்களின் அனுபவத்தினை பொறுத்து இருக்கும்.

சராசரி சம்பளம்

சராசரி சம்பளம்

டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் அவர்களது பொறியாளர்களின் சராசரி சம்பளம் என்பது, 5,00,000 ரூபாய் என்று இணையத்தில் குறிப்பிட்டுள்ளது. இதே எரிக்சன் ஆப் இந்தியாவில் சராசரி பொறியாளர்களின் சம்பளம் என்பது ஆண்டுக்கு 5,62,041 ரூபாயாகவும். சிஸ்கோ இந்தியாவினை பொறுத்தவரையில் 68 ஊழியர்களின் சராசரி சம்பளம் 11,40,017 ரூபாய் எனவும் கூறியுள்ளன.

வாய்ப்புகள் உள்ளது?

வாய்ப்புகள் உள்ளது?

ஆக மொத்தத்தில் இந்த கட்டுரையின் மூலம் நாம் அறிவது, நல்ல திறமையுள்ள ஊழியர்களுக்கு தேவை என்பது எப்போதும் இருந்து கொண்டே உள்ளது. ஆக காலத்திற்கு ஏற்ப நாம் நமது டிஜிட்டல் அறிவுகளை மேம்படுத்துவது என்பது நமக்கு நல்ல வாய்ப்புகளை கொடுக்கும். ஏனெனில் ஐடி துறையில் எப்போதும் வாய்ப்புகள் என்பது இருந்து கொண்டே தான் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How much Indian IT engineers earn? Industry expert tweet salaries are too high?

How much Indian IT engineers earn? Industry expert tweet salaries are too high?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X