தமிழ்நாட்டில் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், சட்டீஸ்கர் ராய்பூர் மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எதிர்பார்க்கப்பட்டது போல் தேர்தலுக்குப் பின்பு கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

இதுமட்டும் அல்லாமல் மக்களுக்குத் தடுப்பு மருந்து அளிக்கும் பணிகளை வேகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டது மட்டும் அல்லாமல் 45 வயதிற்கு அதிகமானோர் அடுத்த 2 வாரத்திற்குத் தடுப்பு மருந்தைப் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளையில் அதிகப் பாதிப்பு நிறைந்துள்ள பகுதிகளில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கவும் பணிகளை அரசு மேற்கொண்டு உள்ளது மட்டும் அல்லாமல் அதிகமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக முடக்கப்பட்டுத் தீவர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா 2வது அலை பரவலைக் கட்டுப்படுத்த தற்போது புதிதாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கு என்னென்ன பாதிப்பு என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

 வெளிநாட்டில் வேலை மற்றும் படிப்பு

வெளிநாட்டில் வேலை மற்றும் படிப்பு

மத்திய - உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்க வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்திற் தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இது தொடரும். இதனால் குறிப்பிட்ட நாடுகளுக்கு வேலைக்காகவும், உயர் படிப்புகளுக்காகவும் செல்ல காத்திருக்கும் பலருக்கும் இது முக்கியப் பாதிப்பாக அமைய உள்ளது.

 சில்லறை விற்பனையாளர்களுக்குப் பாதிப்பு

சில்லறை விற்பனையாளர்களுக்குப் பாதிப்பு

ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கோயம்பேடு மற்றும் இதர மாவட்டத்தில் இருக்கும் மொத்த காய்கறி விற்பனை சந்தையில் செயல்படும் சில்லறை விற்பனையாளர் வர்த்தகம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிகளவிலான வியாபாரிகள் பாதிக்கப்படக் கூடும். இதனால் இவர்களது வர்த்தகம் மற்றும் வருவாய் அதிகளவில் பாதிக்கப்படும்.

 தொழிற்சாலை, தனியார் நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு
 

தொழிற்சாலை, தனியார் நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு

2020ல் கொரோனா பரவலைத் தடுக்கத் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளை மூடியது போல் செய்யாமல் இந்த முறை ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரையும் வெப்ப நிலை (Thermal scanning) பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் (Hand sanitizer), முகக் கவசம் ஆகியவற்றைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இதை உறுதி செய்த பின்பே தினமும் வர்த்தகத்தைத் துவங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது அரசு.

 முகக் கவசம் கட்டாயம்

முகக் கவசம் கட்டாயம்

மேலும் பொது இடத்திலும், வாகனங்களில் பயணம் செய்யும் போது முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

 உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புப் பாதிப்பு

உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புப் பாதிப்பு

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் கட்டுப்பாடுகள் உடன் பணிகளைச் செய்தாலும் சந்தையில் தேவைகள் குறையும் காரணத்தால் வர்த்தகம் குறையும். இதனால் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பும் குறையும் நிலை உள்ளது.

 பேருந்து பயணத்தில் கட்டுப்பாடு

பேருந்து பயணத்தில் கட்டுப்பாடு

மேலும் மாவட்டங்கள் இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலைக் குறைக்கவும், தொற்று பரவுவதைத் தடுக்கவும் பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இது தினசரி பயணம் மேற்கொள்பவர்களுக்குப் பெரும் பிரச்சனையாக இருக்கும்.

 வெளிமாநில பயணங்கள்

வெளிமாநில பயணங்கள்

இதேபோல் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலத்திற்கு அதாவது புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகம் செல்லும் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

காய்கறி கடைகள், பல சரக்குக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் , அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் இரவு 11 மணி வரை மட்டுமே இவை செயல்பட அனுமதிக்கப்படும். இதே நடைமுறை உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கும் பொருந்தும்.

 வர்த்தகம் பாதிப்பு.. மக்கள் பாவம்..

வர்த்தகம் பாதிப்பு.. மக்கள் பாவம்..

முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகளில் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு மெல்ல மெல்ல உயர்ந்து வரும் சிறு மற்றும் குறு வியாபாரிகள், வர்த்தகங்கள், நிறுவனங்களுக்குத் தற்போது விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் நேரடியாகப் பாதிக்காவிட்டாலும், மக்களின் வருகையும், மக்கள் மத்தியிலான தேவையும் அவசியமும் குறைந்து விடும் இதனால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

 திருமணம், திருவிழா, இறுதி ஊர்வலம் கட்டுப்பாடு

திருமணம், திருவிழா, இறுதி ஊர்வலம் கட்டுப்பாடு

நோய் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் - சார்ந்த கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடை விதிக்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கும், இறுதி ஊர்வலத்தில் 50 பேருக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது வர்த்தகச் சந்தையைப் பெரிய அளவில் பாதிக்கும் என்றால் மிகையில்லை,

 டாக்ஸி, ஆட்டோ கட்டுப்பாடு

டாக்ஸி, ஆட்டோ கட்டுப்பாடு

மேலும் டாக்ஸிகளில் ஒட்டுநர் அல்லாமல் அதிகப்படியாக 3 பேருக்கும், ஆட்டோக்களில் 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களைத் தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How new Tamilnadu lockdown rules impact peoples daily life

How new Tamilnadu lockdown rules impact peoples daily life
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X