இறந்த பின்னரும் சம்பளம் வரவேண்டுமா? இந்த டேர்ம் இன்சூரன்ஸை தேர்வு செய்யுங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவர் இறந்த பின்னரும் அவருடைய குடும்பத்திற்கு மாதம் மாதம் அவர் வாங்கும் சம்பளத்திற்கு இணையான தொகை கிடைக்க வேண்டும் என்றால் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

நாம் உயிருடன் இருக்கும்போது நமது அன்புக்குரியவர்களை சரியாக கவனித்துக் கொள்வோம். ஆனால் நாம் உயிரிழந்த பிறகு நமது குடும்பத்தில் உள்ளவர்கள் எந்தவித பொருளாதார சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டுமானால் இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான பாதுகாப்பு பாலிசி என்று கூறப்படும் இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பற்றி தற்போது பார்ப்போம்.

சம்பள பாதுகாப்பு காப்பீடு

சம்பள பாதுகாப்பு காப்பீடு

பெரும்பாலான ஆயுள் காப்பீட்டாளர்கள் இப்போது வழங்கும் புதிய அம்சம் தான் சம்பள பாதுகாப்பு காப்பீடு. இது ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். இது பொதுவாக வழக்கமான வருமானம் உள்ளவர்கள், தங்கள் விருப்பத்தை பொருத்து, மொத்த தொகையுடன் சேர்த்து பெறும் வருமான பாதுகாப்பு காப்பீடு என்று அழைக்கப்படுகிறது.

முதிர்வு பலன் கிடையாது

முதிர்வு பலன் கிடையாது

இந்தக் காப்பீட்டை வாங்க விரும்பும் எவரும், இது எந்த முதிர்வுப் பலன்களும் இல்லாத டேர்ம் பாலிசி என்பதை மனதில் கொள்ள வேண்டும். பாலிசிதாரருக்கு மரணம் ஏற்பட்டால் அவரால் செய்யப்பட்ட நாமினி பலனை பெறுவார். நீங்கள் சம்பள பாதுகாப்பு டேர்ம் பாலிசியை எடுத்திருந்தால் உங்கள் மறைவுக்குப் பிறகு உங்கள் குடும்ப உறுப்பினருக்கு நீங்கள் விரும்பும் மாதாந்திர வருமானத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இது உங்கள் தற்போதைய மாதாந்திர வருமானத்தை விட குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம்.

 பிரிமியம் செலுத்தும் காலம்

பிரிமியம் செலுத்தும் காலம்

நீங்கள் பாலிசி மற்றும் பிரீமியம் செலுத்தும் காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, 30 வயதில் உள்ள புகைபிடிக்காதவர்கள் 15 ஆண்டுகாலம் பிரீமியம் செலுத்தும் காலமாக தேர்வு செய்து கொள்ளலாம்.

மாத வருமானம்

மாத வருமானம்

பாலிசிதாரரின் மாத வருமானத்தின் சதவீத அதிகரிப்பு காப்பீட்டாளரால் தீர்மானிக்கப்படும். எடுத்துக்காட்டாக, காப்பீட்டாளர் தனது வருவாயில் 6 சதவீத வருடாந்திர கூட்டு அதிகரிப்பை வழங்கலாம், அதாவது ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும், மாதத் தொகை முந்தைய ஆண்டின் மாத வருமானத்தில் 106 சதவீதமாக இருக்கும்.

உதாரணம்

உதாரணம்

உதாரணமாக நீங்கள் 50,000 மாத வருமானத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பாலிசியின் இரண்டாம் ஆண்டில், இந்த மாத வருமானம் ரூ. 53,000 ஆகவும், அதன் பிறகு அடுத்த ஆண்டு ரூ. 56,180 ஆகவும் அதிகரிக்கும். ஒருவேளை ​​பாலிசிதாரர் ஐந்தாவது பாலிசி ஆண்டின் தொடக்கத்தில் இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். பாலிசிதாரரின் நாமினி இறப்புப் பலன்களான ரூ.7.6 லட்சத்தையும், அதிகரித்த மாத வருமானம் ரூ.63,124ஐயும் பெறுவார். காப்பீட்டாளரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பாலிசியின் மீதமுள்ள காலத்திற்கான மாத வருமானத்தை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பெறுவார்கள்.

டேர்ம் பிளான்

டேர்ம் பிளான்

இந்த டேர்ம் இன்சூரன்ஸ் குறித்து ப்ரோபஸ் இன்சூரன்ஸ் ப்ரோக்கரின் இயக்குனர் ராகேஷ் கோயல் கூறுகையில், 'இது ஒரு டேர்ம் பிளான் என்பதை பாலிசிதாரர்கள் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவர்களின் துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால் சம்பள பாதுகாப்பு காப்பீடு அவர்களின் குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்கிறது. இத்தகைய திட்டங்கள் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழக்கமான வருமானம் செலுத்தும் விருப்பத்தையும் மொத்தத் தொகையையும் வழங்குகின்றன. குடும்ப உறுப்பினர்கள் மாத வருமானம் பெறுவதை இது உறுதி செய்யும்' என்று கூறியுள்ளார்.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

இருப்பினும், அத்தகைய பாலிசிகளைத் தேர்ந்தெடுக்கும்போது விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும், ஏனெனில் காப்பீட்டாளர்கள் சம்பளக் காப்பீடு என்ற பெயரில் ஆயுள் காப்பீட்டு பாலிசி உள்பட பிற வகைகளை தருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பாலிசியை எடுக்கும் முன் ஒரு நிதி ஆலோசகரிடம் கலந்து ஆலோசித்து அதன்பின் பாலிசி எடுப்பது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How salary protection insurance can help you?

How salary protection insurance can help you?| இறந்த பின்னரும் சம்பளம் வரவேண்டுமா? இந்த டேர்ம் இன்சூரன்ஸை தேர்வு செய்யுங்கள்!
Story first published: Saturday, July 9, 2022, 7:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X