வாட்ஸ் அப் நிறுவனம் கொடுத்த சூப்பர் அப்டேட்.. பாதுகாப்பு தான்.. எப்படி வெரிபிகேஷன் செய்வது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போனும், வாட்ஸ் அப்பும் இல்லாத இளைஞர்களை பார்ப்பது அரிது எனலாம். ஏனெனில் அலுவலக வேலை முதல் கொண்டு நண்பர்களுடன் கலந்துரையாடுவது வரை வாட்ஸ் அப்பில் தான் நடக்கிறது.

 

ஏன் காலையில் எழுந்ததும் யார் என்ன ஸ்டேட்டஸ் வைக்கிறார்கள்? பிடித்தமானவர்களுக்கு குட் மார்னின் முதல் கொண்டு, இரவு தூங்கும்போது குட் நைட் சொல்லி தூங்கும் பலரும் உண்டு. இதற்கு இளைஞர்கள் மட்டும் அல்ல, வயதானவர்களும் இதில் மிகுந்த ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படி சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்ட வரும் இந்த வாட்ஸ் அப் செயலியில், பல சாதகங்கள் உள்ளது எனில், சில மோசடிகளும் நடக்கின்றன. ஆக அதனை தடுக்க வாட்ஸ் அப் அவ்வப்போது சில மாற்றங்களை அப்டேட் செய்து வருகின்றது.

வாட்ஸ் அப் முடக்கம்

வாட்ஸ் அப் முடக்கம்

அவ்வப்போது பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் அல்லது ஹேக் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது கணக்கு முழு இழப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் உங்களது வாட்ஸ் அப் கணக்கு முழுமையாக தடை செய்யப்படலாம். சமீபத்தில் ஹேக்கர்கள் மூலம் பல வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

பாதுகாப்புக்காக வெரிபிகேஷன்

பாதுகாப்புக்காக வெரிபிகேஷன்

இதனால் வாட்ஸ் அப் இது போன்ற நிலையை தடுப்பதற்காக, இரண்டு ஸ்டெப் வெரிபிகேஷன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் உங்களது வாட்ஸ் அப் பாதுகாப்பாக இருக்கலாம். இது உங்களது வாட்ஸ் அப்பில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும். இது உங்களது வாட்ஸ் அப்பினை நீங்கள் பதிவு செய்த பிறகு, இரு ஸ்டெப் வெரிபிகேஷன் செய்யப்படும் என கூறியுள்ளது.

எப்படி வெரி-பிகேஷன் செய்வது?
 

எப்படி வெரி-பிகேஷன் செய்வது?

அது சரி அதனை எப்படி அப்டேட் செய்வது வாருங்கள் பார்க்கலாம். உங்களது வாட்ஸ் அப்பில் settings-னை பார்க்கவும். அதில் Two step verification என்பதை கிளிக் செய்யவும். அதில் உங்களது 6 இலக்க நம்பரை பதிவு செய்ய கேட்கும். ஆக உங்களுக்கு உகந்த 6 இலக்க நம்பரை கொடுத்து கிளிக் செய்தால் அப்டேட் ஆகிக் கொள்ளும். அதன் பிறகு உங்களது மெயில் ஐடியினையும் கொடுத்து அப்டேட் செய்து கொள்ளவும். ஆனால் இந்த ஈமெயில் கொடுக்காமல் தவிர்க்கவும் ஆப்சன் உண்டு. ஆனால் அதனையும் கொடுத்து அப்டேட் செய்து கொண்டால் கூடுதல் பாதுகாப்பு என்கிறது நிறுவனம்.

பின் நம்பர் வேண்டும்

பின் நம்பர் வேண்டும்

இந்த பின் நம்பர் அப்டேட்டினை நீங்கள் அவ்வப்போது அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். இந்த Two step verification என்ற ஆப்சனிலேயே chage pin என்ற ஆப்சனும் உண்டு. அதே போல மெயில் ஐடியையும் மாற்றிக் கொள்ளும் ஆப்சன் உண்டு. ஆக நீங்கள் மாற்றிக் கொள்ள நினைத்தால் அதனையும் மாற்றிக் கொள்ளலாம். ஆக இதன் மூலம் நீங்கள் பாதுகாப்புடன் வாட்ஸ் அப்பினை பயன்படுத்த முடியும். உண்மையில் இது மிக நல்ல விஷயம் தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

how to activate 2 step verification in whats app? Check details

whats app updates.. how to activate 2 step verification in whats app? Check details
Story first published: Sunday, March 28, 2021, 13:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X