NPS கணக்கில் நாமினியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

NPS என்ற தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது பணியாளர் மற்றும் பணியில் அமர்த்துபவர் ஆகிய இருவரும் சேர்ந்து பங்களிக்கும் சேமிப்பு திட்டமாகும். இது பணியாளர் ஓய்வு பெறும்போது மொத்தமாக ஒரு தொகை அவருக்கு வழங்கப்படும்.

இந்த சேமிப்பு திட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள் மற்றும் அனைத்து குடிமக்களும் சேர்ந்து கொள்ளலாம். இந்த நிலையில் இந்த கணக்கை வைத்திருப்பவர்கள் தங்களுடைய நாமினியையும் நியமனம் செய்து கொள்ளலாம் .

நாமினியை நியமனம் செய்த பின்னர் அந்த நாமினியை மாற்ற விரும்பினால் ஆன்லைன் மூலமே நாமினியை மாற்றிக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 NPS திட்டம்.. வரியை மிச்சப்படுத்தி சேமிக்க சிறந்த வழி.. யாரெல்லாம் இணையலாம்..! NPS திட்டம்.. வரியை மிச்சப்படுத்தி சேமிக்க சிறந்த வழி.. யாரெல்லாம் இணையலாம்..!

 NPS கணக்கு

NPS கணக்கு

தற்போது NPS கணக்கில் உள்ள பல விவரங்களை மாற்றுவதற்கு ஆன்லைனில் வசதிகள் வந்துவிட்டது. ஆன்லைனில் நாமினி நியமனம் செய்வது, நாமினியை மாற்றுவது உள்பட பல்வேறு பணிகளை செய்யலாம்.

நாமினி நியமனம்

நாமினி நியமனம்

ஒரு NPS கணக்கு தொடங்கப்பட்ட பின்னர் அந்த நபர் செய்யும் முதலீடுகளுக்கு அதிகபட்சமாக மூன்று நாமினியை நியமனம் செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட நாமினியை நியமனம் செய்யும்போது ஒவ்வொரு நாமினிக்கும் எத்தனை சதவீத பங்குகள் கொடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். அனைத்து நாமினிகளின் மொத்த பங்கு 100 சதவீதமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம்

கட்டணம்

NPS கணக்கு தொடங்கும் போது நாமினியை நியமனம் செய்தால் அதற்கு கட்டணம் இருக்காது. ஆனால் அதே நேரத்தில் நாம் நாமினியை மாற்ற விரும்பினால் அதற்கு ரூபாய் 20 கட்டணமாக பெறப்படும் என்பது குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் NPS கணக்கில் நாமினியை எப்படி சேர்ப்பது? அல்லது நாமினியை மாற்றுவது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.

நாமினியை ஆன்லைனில் மாற்றும் வழிமுறை

நாமினியை ஆன்லைனில் மாற்றும் வழிமுறை

1: முதலில் உங்கள் CRA NSDL கணக்கில் உள்நுழைய வேண்டும்

2: மெனுவிலிருந்து மாற்றங்கள்' என்பதை தேர்ந்தெடுக்கவும்

3: 'தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்கவும்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்

4: நாமினி விவரங்களை சேர்/புதுப்பித்தல் என்பதைக் கிளிக் செய்து, பாப் செய்தியில் 'உறுதிப்படுத்து' என்பதைக் கிளிக் செய்யவும்.

5: நாமினியின் விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டிய வகையை தேர்ந்தெடுக்கவும்.

6: பெயர், பிறந்த் தேதி மற்றும் பிற விவரங்கள் போன்ற நாமினி விவரங்களை பதிவு செய்யவும்

7: நாமினி விவரங்களைச் சேர்ப்பது அல்லது மாற்றுவதைப் பொறுத்து 'சேமி' அல்லது 'ரீசெட்' என்பதைக் கிளிக் செய்யவும்.

8: ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளை சேர்க்க விரும்பினால், 'சேர்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

9: நாமினி பெயர், பரிந்துரைக்கப்பட்டவருடனான உறவு, சதவீதப் பங்கு போன்ற விவரங்களை உள்ளிட்டு, 'சேமி' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

10: பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெற்ற ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

11: 'e-sign and download' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ஓடிபி எண்ணை பதிவு செய்த பின்னர் மாற்றங்களைச் சரிபார்க்க மின்-கையொப்பம் தேவைப்படும்.

12: ஆதார் அல்லது விர்ச்சுவல் ஐடி உள்ளிட்ட பிறகு 'e கையொப்ப சேவை வழங்குநரின் பக்கத்தில் மின்-கையொப்பமிட வேண்டும். அதன் பிறகு, UlDAl-ல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.

13: ஓடிபி சரிபார் என்பதை கிளிக் செய்வதன் மூலம் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.

 

எளிய வழிமுறை

எளிய வழிமுறை

மேற்கண்ட எளிய வழிமுறைகளில் NPS கணக்கில் வாரிசுதாரர்களை எளிதில் மாற்றி கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to add and change nominee in NPS account online

How to add and change nominee in NPS account online | NPS கணக்கில் நாமினியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X