இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. இன்னும் அடுத்து நடைபெற உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு?
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால், ஹோம் லோன், வாகன கடன் உள்ளிட்ட கடன் திட்டங்களின் வட்டி விகிதம் எல்லாம் உயரும். எனவே புதிதாக ஹோம் லோன் வாங்க உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே ஹோம் லோன் வாங்கியவர்கள் வட்டி விகிதத்தைக் குறைத்து கடனை அடைப்பது எப்படி என இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

கடன் கால அளவை குறைத்தல்
வீட்டுக் கடன் 10 ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வரை தவணையில் கிடைக்கிறது. அதிக தவணையில் ஹோம் லோன் வாங்கியவர்கள் அதனை 10 அல்லது 15 ஆண்டுகளாகக் குறைக்கலாம். இப்படிக் குறைக்கும் போது கூடுதலாகத் தவணை தொகை செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு கால அளவை குறைக்கலாம்.

முன்கூட்டியே செலுத்துதல்
கடன் தொகையைச் செலுத்துவதற்கான பணம் உங்களிடம் இருந்தால் முன்கூட்டியே அதை செலுத்தி கடனை அடைக்கலாம். ஹோம் லோன் வாங்கும் போது வங்கிகள் அவ்வப்போது முன் கூட்டியே கூடுதல் கடன் தொகையைச் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். முன்கூட்டியே மொத்த கடனையும் அடைக்கும் போது அதற்கு சில சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.

வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்த்தல்
ஹோம் லோன், வாகன கடன் என எது வாங்கினாலும் எந்த வங்கியில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

பேலன்ஸ் டிரான்ஸ்பர்
நீங்கள் கடன் வாங்கிய வங்கியில் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது என்றால் அதை பேலன்ஸ் டிரான்ஸ்பர் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.

டவுன் பேமெண்டாக அதிகமாகச் செலுத்துங்கள்
பல வங்கி நிறுவனங்கள் வாங்கும் சொத்தின் 75 முதல் 90 சதவீத மதிப்புக்குக் கடன் வழங்குவார்கள். உங்களிடம் டவுன் பேமெண்டாக செலுத்த அதிக தொகை இருக்கும் போது கடன் வாங்கும் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.

கூடுதல் ஈஎம்ஐ செலுத்துதல்
உங்கள் சம்பளம் அதிகரிக்கும் போது, உங்களிடம் கூடுதல் தொகை சேமிப்பாகக் கிடைத்தால் உங்கள் ஈஎம்ஐ தொகையை உயர்த்தி கட்டலாம். ஆண்டுக்கு ஒரு முறை வங்கிகள் இதற்கு அனுமதி அளிக்கின்றன.

கிரெடிட் ஸ்கோர்
வங்கிகள் உங்கள் சிபிள் கிரெடிட் ஸ்கோரை வைத்துத்தான் வட்டி விகிதத்தை முடிவு செய்வார்கள். உங்களது கிரெடிட் ஸ்கோர் 800-க்கும் அதிகமாக இருக்கும் போது அதற்கு ஏற்றவாறு கடன் நிறுவனங்களிடம் வட்டி விகிதத்தைக் குறைத்து வாங்க முடியும்.