வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியோர் RBI அறிவிப்பால் பர்ஸ் ஓட்டையாகாமல் தப்பிப்பது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நாணய கொள்கை முடிவுகளில் மக்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 5 மாதத்தில் ஆர்பிஐ நாட்டின் பணவீக்கத்தையும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த 4 முறை வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த 3 வருடத்திற்கும் அதிகமாகக் குறைவான வட்டி விகித்தை அனுபவித்துக்கொண்டு இருக்கும் மக்களுக்கு இந்த வட்டி விகித உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது.

மே 4 ஆம் தேதி முதல் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது ஆர்பிஐ. இந்த நிலையில் கடன் வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்..?

நல்ல நல்ல வாய்ப்பினை எல்லாம் விட்டு விட்டோமோ.. இனி தங்கத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா? நல்ல நல்ல வாய்ப்பினை எல்லாம் விட்டு விட்டோமோ.. இனி தங்கத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

1.40 சதவீதம் வட்டி உயர்வு

1.40 சதவீதம் வட்டி உயர்வு

வெறும் 93 நாட்களில் ஆர்பிஐ சுமார் 1.40 சதவீதம் வரையில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது, இது ஆகஸ்ட் 5ஆம் தேதி வரையிலான நிலவரம். இன்றைய கூட்டத்தின் முடிவில் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்ட காரணத்தால் ரெப்போ விகிதம் 1.9 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

ப்ளோட்டிங் வட்டி

ப்ளோட்டிங் வட்டி

இந்தியாவில் தற்போது அனைத்து வங்கிகளும் பெரும்பாலான கடன்களை ப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் மட்டுமே அளிக்கும் காரணத்தால் இந்த வட்டி உயர்வை வங்கி நிர்வாகம் அமலாக்கம் செய்யும்போது கடன் வாங்கியவர்களின் வட்டி விகிதம் மற்றும் ஈஎம்ஐ தொகை உயரும்.

கடன்கள்
 

கடன்கள்

இதனால் குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன், வாகன கடன், கல்வி கடன், தங்க கடன், தனிநபர் கடன் போன்ற அனைத்து வங்கி கடன்களிலும் வட்டி விகிதம் உயர துவங்கும். மேலும் இன்றைய 0.50 சதவீத வட்டி விகிதம் இன்று முதல் அமலாக்கம் செய்யப்படுவதால் அடுத்தடுத்து வங்கிகள் வட்டி விகித உயர்வை அறிவிக்கத் துவங்கும்.

இதுவரையிலான உயர்வு

இதுவரையிலான உயர்வு

ஏப்ரல் 2022 முதல் அறிவிக்கப்பட்ட 1.40 சதவீத வட்டி விகித உயர்வில் ஹோம் லோன் வட்டி விகித்தில் 0.80 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது அறிவிக்கப்பட்ட அளவில் 50 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டு உள்ளது.

இனி நடக்கப்போவது

இனி நடக்கப்போவது

இதன் மூலம் இன்றைய அறிவிப்புக் காரணமாக ஹோம் லோன் வட்டி விகிதம் 25-30 அடிப்படை புள்ளிகள் வரை உயரலாம். இதுவே பர்சனல் லோன், கார் லோன்-க்கு 0.50 சதவீதம் வரையில் அதிகரிக்கும்.

பண்டிகை காலம்

பண்டிகை காலம்

அதேவேளையில் பண்டிகை காலம் வரும் காரணத்தால் வட்டி விகித உயர்வை வங்கிகள் ஒத்தி வைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, ஆனால் சில வங்கிகள் பண்டிகை காலத்திற்கு முன்பே வட்டி விகித உயர்வை அறிவிக்கத் தயாராகி வருகிறது. ஆனால் SBI, HDFC, ICICI போன்ற பெரு வங்கிகள் வட்டி விகிதத்தை அறிவித்தால் கட்டாயம் அனைத்து வங்கிகளும் வட்டியை உடனடியாக உயர்த்தும்.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

உங்களிடம் 8.5% வட்டியில் 20 வருட கால வீட்டுக் கடனில் ரூ.30 லட்சம் நிலுவையில் உங்கள் ஈஎம்ஐ தொகை தற்போது கணிக்கப்பட்ட 25-30 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் உயர்வு மூலம் 957 ரூபாய் அதிகரித்து 26,035 ரூாயிலிருந்து 26,992 ரூபாயாக ஆக உயரும்.

வாகன கடன்

வாகன கடன்

அதேபோன்று 7 வருட காலத்திற்கு ரூ.8 லட்சம் வாகனக் கடனுக்கு, வட்டி விகிதம் 11 சதவீதத்தில் இருந்து 11.5% ஆக உயர்ந்தால், ஈஎம்ஐ தொகை 211 ரூபாய் உயர்வும். இதன் மூலம் ஒரு மாத ஈஎம்ஐ தொகை ரூ.13,698-லிருந்து ரூ.13,909 ஆக இருக்கும்.

பர்சனல் லோன்

பர்சனல் லோன்

இந்தியாவில் பெரும் பகுதி மக்கள் பெற்றுள்ள பர்சனல் லோன் பிரிவில் 5 வருட கால அவகாசத்துடன் ரூ.5 லட்சம் தனிநபர் கடன் வைத்திருப்போருக்கு வட்டி விகிதம் 15% முதல் 15.5% வரை உயர வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் EMI தொகை 132 ரூபாய் அதிகரித்து ரூ.11,895ல் இருந்து ரூ.12,027 ஆக உயர்வும்.

இது தொடருமா..?

இது தொடருமா..?

இந்தியாவில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கான 6 சதவீதம் வரும் வரையிலும், ரூபாய் மதிப்பு சரிவின் வீழ்ச்சியைத் தடுக்கும் வரையிலும் இந்த வட்டி விகிதம் அதிகரிக்கும்.

என்ன செய்ய வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்.

தற்போதையை நிலையில் வங்கிகள் அதிகப்படியான வருமானத்திற்காக வட்டி விகிதத்தை உயர்த்துவதை நிறுத்தாது. ஆதலால் தற்போது கடன் வாங்கியவர்கள் ஈஎம்ஐ சுமையைக் குறைத்த பார்ட் பேமெண்ட் செய்வது உத்தமம்.

பர்ஸ் ஓட்டை

பர்ஸ் ஓட்டை

அதாவது கடனில் ஒரு சிறு பகுதியோ அல்லது பெரும் பகுதியையோ செலுத்திவிட்டால் ஈஎம்ஐ தொகை குறையும். இதனால் உங்கள் பர்ஸை ஓட்டை ஆக்காமல் பார்த்துக்கொள்ள முடியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi mpc ஆர்பிஐ loan bank
English summary

How to save money from RBI repo rate hike Impact; Easy guide for common people to benefit

How to save money from RBI repo rate 50 bps hike impact; Easy guide for common people to benefit from home loan, car loan, personal loan, education loans.
Story first published: Friday, September 30, 2022, 13:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X