லட்சங்களை கொட்டி தரும் சானிடரி நாப்கின் பிசினஸ்.. தொடங்குவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படித்து முடித்த இளைஞர்கள் தற்போது வேலை தேடுவதை விட சொந்த தொழில் செய்வதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் எந்த தொழிலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதை ஆய்வு செய்து இன்றைய இளைஞர்கள் புத்திசாலித்தனமாக தொழிலை தொடங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் தொழில் தொடங்குவதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அது குறித்து தற்போது பார்ப்போம்.

நியூயார்க் அலுவலகத்தினையே மூடுகிறதா மெட்டா.. அந்தளவுக்கு நிலைமை மோசமா? நியூயார்க் அலுவலகத்தினையே மூடுகிறதா மெட்டா.. அந்தளவுக்கு நிலைமை மோசமா?

சானிடரி நாப்கின்

சானிடரி நாப்கின்

இந்தியாவில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்பவர்களின் கூற்றுப்படி இந்த தொழிலை தொடங்க ஒரு சிறிய இயந்திரம் மட்டுமே வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். இந்த இயந்திரம் ரூ 5 லட்சத்துக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆரம்பகட்டத்தில் செமி ஆட்டோமேட்டிக் மெஷின் வாங்கினால் போதும் என்றும் அதற்காக 5 முதல் 6 லட்ச ரூபாய் வரை செலவு செய்தால் இந்த தொழிலை ஆரம்பித்துவிடலாம் என்றும் கூறுகின்றனர்.

1 மணி நேரத்தில் 500 நாப்கின்கள்

1 மணி நேரத்தில் 500 நாப்கின்கள்

4 முதல் 5 அங்குல சானிடரி நாப்கின் பேப்பர்களை தயாரிக்கும் திறன் கொண்ட இந்த இயந்திரங்கள் 100 முதல் 500 நாப்கின்களை ஒரு மணி நேரத்தில் தயாரிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழிலை தொடங்கி ஓரளவு லாபம் பெற்ற பிறகு பெரிய அளவில் இந்த தொழிலை விரிவுபடுத்தலாம் என்றும் 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலான இயந்திரம் வாங்கினால் அந்த இயந்த்தினால் ஒரு மணி நேரத்தில் 2500 சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்யும் என்றும் அறிவுரை கூறப்படுகிறது.

படிப்படியாக விரிவுபடுத்துதல்
 

படிப்படியாக விரிவுபடுத்துதல்

முதலில் இந்த தொழிலை தொடங்குபவர்கள் சிறிய அளவில் தொடங்கி அதில் ஓரளவு வெற்றி பெற்று லாபம் கிடைத்த பின்னர் பெரிய அளவில் தொடங்கலாம் என்பதே தொழில் முனைவோருக்கு கூறும் ஆலோசனை ஆக உள்ளது. முதலில் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் கிலோ வரை சானிட்டரி நாப்கினை உற்பத்தி செய்யலாம் என்றும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக ஆண்டுக்கு 10 மில்லியன் வரை வர்த்தகம் செய்யலாம் என்றும் இந்த தொழிலை செய்யும் ஆர்வம் உடையவர்களுக்கு அறிவுரையாக கூறப்படுகிறது.

லாபம்

லாபம்

இந்த தொழிலில் அதிகபட்சமாக ஆண்டுக்கு 10 முதல் 12 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தொழிலை தொடங்குவதற்கு 5 முதல் 6 லட்சம் ரூபாய் பணம் தேவை என்றாலும் மூன்றரை லட்ச ரூபாய் நாம் திரட்டினால் அரசிடமிருந்து கடன் பெறலாம் என்றும் மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் இந்த தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்கள் இந்த தொழிலை தொடங்கினால் அதற்கு மானியம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to start Sanitary Napkin Business in India and earns lakhs of Rupees?

Today there are many people who want to start their own business. Many people are also starting their own business and earning a good profit.
Story first published: Tuesday, October 4, 2022, 18:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X