இந்திய வங்கிகள் மற்றும் ராணுவ நெட்வொர்க்குகளுக்கு ஆபத்து! வாய் திறந்த நெட்வொர்க் நிறுவனம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் எந்த அளவுக்கு மோசமாக அடி வாங்கிக் கொண்டு இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.

ஆனால் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்கள் கூட அடி வாங்குகிறது என்றால் நம்புவீர்களா..?

நம்பித் தான் ஆக வேண்டும். அந்த நிறுவனத்தின் விவரங்கள் என்ன..? யாருக்கு எல்லாம் அந்த வெளிநாட்டு நிறுவனம் தன் டெலிகாம் சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது, என்ன பிரச்சனை என விரிவாகப் பார்ப்போம்.

அடிப்படை விவரங்கள்

அடிப்படை விவரங்கள்

ஹியூக்ஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் (Hughes Network Systems) தான் அமெரிக்க அந்த நிறுவனத்தின் பெயர். எக்கோ ஸ்டார் கார்ப் (Echostar Corp) என்கிற குழும நிறுவனத்தில் இதுவும் ஒன்று. இது ஒரு செயற்கைக் கோள் அகன்ற அலைவரிசை சேவை வழங்கும் நிறுவனம். (Satellite Broadband service provider). இப்போது இந்த நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகையினைச் செலுத்த முடியாமல், தவித்துக் கொண்டு இருக்கிறது.

யாருக்கு சேவை

யாருக்கு சேவை

இந்த ஹியூக்ஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் (Hughes Network Systems), இந்தியாவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள், இந்திய ராணுவம், இந்திய ரயில்வே, இந்திய கப்பல் படை.. போன்ற பல பெரிய பெரிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கே சேவை வழங்கிக் கொண்டு இருக்கிறதாம்.

முக்கிய டீல்

முக்கிய டீல்

கடந்த டிசம்பர் 2018 கால கட்டத்தில், இந்திய கப்பல் படைக்குத் தேவையான உயர் தர செயற்கைக் கோள் அகன்ற அலைவரிசை சிஸ்டத்தை (High performance Satellite Broadband System) வழங்க தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என்ன பிரச்சனை..? என்று கேட்கிறீர்களா.

அரசு Vs நிறுவனம்

அரசு Vs நிறுவனம்

கடந்த அட்கோபர் 2019-ல் உச்ச நீதிமன்றம், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் சுமார் 92,000 கோடி ரூபாயைச் செலுத்தச் சொன்னது நினைவில் இருக்கலாம். அதே போல ஹியூக்ஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் (Hughes Network Systems) நிறுவனமும், அரசின் டெலிகாம் துறைக்கு 600 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறதாம்.

பதில் கடிதம்

பதில் கடிதம்

ஹியூக்ஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் (Hughes Network Systems) நிறுவனம் சார்பில், கடந்த பிப்ரவரி 20, 2020 அன்று மத்திய டெலிகாம் துறைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதில், "அரசு டெலிகாம் துறை பெரிய தொகையைக் கேட்கிறது. எங்களால் 600 கோடி ரூபாயை எப்படிப் பார்த்தாலும் செலுத்த முடியாது. சொல்லப்போனால் இது எங்கள் கம்பெனியை திவாலாக்கி விடும்" எனச் சொல்லி இருக்கிறார்கள்.

பாதிக்கப்படும்

பாதிக்கப்படும்

ஒருவேளை, ஹியூக்ஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் (Hughes Network Systems) நிறுவனம் திவால் ஆனால், சுமார் 70,000 வங்கி சேவை இடங்கள், இந்திய கப்பல் படை, இந்திய ராணுவம், இந்திய ரயில்வே என பல நிறுவனங்களுக்குத் மிக மிக அத்தியாவசியா தேவையான சாட்டிலைட் நெட்வொர்க்குகள் கிடைக்காமல் போகலாமாம்.

பாதிக்கப்படும்

பாதிக்கப்படும்

ஒருவேளை, ஹியூக்ஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் (Hughes Network Systems) நிறுவனம் திவால் ஆனால், சுமார் 70,000 வங்கி சேவை இடங்கள், இந்திய கப்பல் படை, இந்திய ராணுவம், இந்திய ரயில்வே என பல நிறுவனங்களுக்குத் மிக மிக அத்தியாவசியா தேவையான சாட்டிலைட் நெட்வொர்க்குகள் கிடைக்காமல் போகலாமாம்.

கம்பெனி தரப்பு

கம்பெனி தரப்பு

சுமார் 10 வருடங்களுக்கு முந்தைய கட்டண பாக்கியை, அரசு டெலிகாம் துறை தவறாக கணக்கிட்டு இருக்கிறார்கள். அது வட்டி மற்றும் அபராதங்கள் எல்லாம் சேர்த்து தற்போது 600 கோடி ரூபாயாக வந்து நிற்பதாகச் சொல்லி இருக்கிறது ஹியூக்ஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் (Hughes Network Systems) நிறுவனம்.

டேட்டா தான் எல்லாமே

டேட்டா தான் எல்லாமே

இந்தியாவே தற்போது டேட்டா இல்லாமல் வாழ முடியாத நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால், அதே டெலிகாம் துறை நிறுவனங்கள் ராஜா போல சம்பாதிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை நடத்தவே சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதை அரசு தான் கவனத்தில் எடுத்துக் கொண்டு எதையாவது செய்ய வேண்டும். செய்வார்கள் என நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hughes Network Systems may face shutdown due to unpaid telecom dues

The US based Hughes Network Systems may face shutdown due to its unpaid telecom dues, It may freeze thousands of banks, Indian army, Indian Navy like most critical network services.
Story first published: Monday, February 24, 2020, 15:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X