இந்திய பொருளாதாரமும், வர்த்தகமும் இந்தக் கொரோனா காலத்தில் எந்த அளவிற்குச் சரிவடைந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தாலும் பணக்காரர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பதை ஹூரன் நிறுவனத்தின் ஆய்வறிக்கை காட்டுகிறது.
உலகளவில் பணக்காரர்கள் மற்றும் ஆடம்பர சந்தை குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ஹூரன் இந்த முறை இந்திய பணக்காரர்கள் குறித்து ஆய்வு செய்து சூப்பரான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
உக்ரைன்-ஐ தொட்டால்.. பெட்ரோல் விலை 120, சன்பிளவர் ஆயில் விலை 200.. இந்திய மக்கள் பாவம்..!

ஹூரன் இந்தியா
ஹூரன் இந்தியா Wealth Report 2021 அறிக்கையின்படி, இந்தியாவில் மில்லியனர் குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 11% அதிகரித்து 4,58,000 குடும்பங்களாக அதிகரித்துள்ளது.

பணக்காரர்கள் எண்ணிக்கை
இந்த மில்லியனர் குடும்பங்களின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு 7 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். இந்தியாவில் மில்லியனர் குடும்பங்களின் எண்ணிக்கை அடுத்த 5 வருடத்தில் 30 சதவீதம் அதிகரித்து 2026-இல் 6,00,000 குடும்பங்களாக உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

3 முக்கிய நகரங்கள்
இந்நிலையில் இந்தியாவில் அதிக மில்லியனர்கள் இருக்கும் பகுதியாக மும்பை, டெல்லி, கொல்கத்தாவாக உள்ளது. 2021ஆம் ஆண்டின் கணக்கின் படி 20,300 மில்லியனர்கள் குடும்பங்களுடன் மும்பை இந்தியாவின் பணக்காரர்களின் தலைநகரமாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் 17,400 மில்லியனர்களும், கொல்கத்தாவில் 10,500 மில்லியனர் குடும்பங்களுடன் 2வது மற்றும் 3வது இடங்களைப் பிடித்துள்ளது.

மகிழ்ச்சி
ஹேப்பினஸ் இன்டெக்ஸ் அதாவது பணக்காரர்கள் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதைக் குறிக்கும் அளவீடு. இந்த ஆண்டுக் கணக்கெடுப்பில் 66% பேர் மட்டுமே பர்சனல் மற்றும் தொழில் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் இதன் அளவீடு 72 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டில் ஹேப்பினஸ் இன்டெக்ஸ் சரிந்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டுக் கல்வி
ஹூரன் நிறுவனம் செய்த ஆய்வில் இந்திய பணக்காரர்களில் 70 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளைக் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பத் தயாராக உள்ளனர். அதிலும் குறிப்பாக அமெரிக்கா (29%), பிரிட்டன் (19%), நியூசிலாந்து (12%) மற்றும் ஜெர்மனி (11%) ஆகிய நாடுகளுக்குப் பிள்ளைகளை அனுப்ப மிகவும் ஆர்வமாக இந்திய பணக்காரர்கள் உள்ளனர்.

பிடித்த கார் பிராண்ட்
இந்தப் பணக்காரர்கள் நான்கில் ஒரு பங்கு மூன்று ஆண்டுகளுக்குள் தங்கள் கார்களை மாற்றுகிறார்கள் என்றும் அவர்களுக்கு மிகவும் விருப்பமான சொகுசு கார் பிராண்டாக மெர்சிடிஸ் பென்ஸ், அதைத் தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ், ரேன்ஞ் ரோவர் ஆகியவை இருக்கிறது. லம்போர்கினி மிகவும் விரும்பப்படும் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் பிராண்ட் என இந்திய பணக்காரர்கள் கூறுகின்றனர்.

பிடித்த ஹோட்டல்
இந்திய பணக்காரர்கள் மத்தியில் மிகவும் பிடித்த ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி பிராண்டாகத் தாஜ் விளங்குகிறது. அதைத் தொடர்ந்து ஓபராய் மற்றும் லீலா விளங்குகிறது.

பிடித்த வாட்ச்
ஹூரன் நிறுவனத்தின் ஆய்வில் பங்குப்பெற்ற பல பணக்காரர்கள் விரும்பி சேகரிக்கும் பொருளாக வாட்ச் விளங்குகிறது. அந்த வகையில் இந்திய பணக்காரர்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் விருப்பமான பிராண்டாக ரோலக்ஸ் விளங்குகிறது. அதைத் தொடர்ந்து கார்டியர் (Cartier) மற்றும் ஆடெமர்ஸ் பிகுவெட் (Audemars Piguet).

நகை மற்றும் ஆடை
ஹூரன் நிறுவனத்தின் ஆய்வில் பங்குபெற்ற 350க்கும் அதிகமான இந்திய மில்லியனர்களில் அதிகம் பிடித்த நகை பிராண்டாகத் தனிஷ்க் விளங்குகிறது.
இதே போல் பேஷன் பிரிவில் லூயிஸ் உய்ட்டன் மிகவும் விரும்பும் ஆடம்பரப் பொருட்களின் பிராண்டாகும், அதைத் தொடர்ந்து குச்சி மற்றும் பர்பெர்ரி

பிரேவேட் ஜெட்
பணக்காரர்களைப் பணக்காரர்கள் எனக் காட்டும் முக்கியமான விஷயமாக விளங்குவது சொந்தமாக வைத்திருக்கும் பிரைவேட் ஜெட் தான். அந்த வகையில் இந்திய பணக்காரர்கள் மத்தியில் மிகவும் விரும்பும் பிரைவேட் ஜெட் பிராண்டாக விளங்குவது Gulfstream பிராண்டு தான், அதைத் தொடர்ந்து போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளது.