கோவிட் தொற்று நிறைந்த 2 வருட காலம் மக்களைப் பல வகையில் பெரிய அளவில் மாற்றியுள்ளது, குறிப்பாக மாத சம்பளக்காரர்கள் அனைவரும் நிறுவனங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர் என்றால் மிகையில்லை.
ஆம் கொரோனா காலத்தில் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைத் தொடர வேண்டும் என்பதற்காக வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை அளித்து, கொரோனா தொற்று குறைந்தும் பல நிறுவனங்கள் அலுவலகச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை நீட்டியது.
ஆனால் மூன்லைட்டிங், Quite Qutiing போன்ற பிரச்சனை வந்த உடனே பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியது.
இங்குத் தான் பிரச்சனை துவங்கியது.

கொரோனா
கொரோனா காரணமாக 2-3 வருடம் வீட்டில் இருந்து பணியாற்றிய ஊழியர்கள் தங்களது வீட்டை பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு மாற்றினர், இதோடு நகரங்களைக் காட்டிலும் கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் செலவுகள் மிகவும் குறைவு என்பதால் தொடர்ந்து வொர்க் ப்ரம் ஹோம் கேட்டு மாத சம்பளக்காரர்கள் அலுவலும் செல்லாமல் இருந்தது.

ஹைப்ரிட் மாடல்
ஆனால் தற்போது நிலைமை, உலகம் முழுவதும் மாறியுள்ளதால் குறைந்தது ஹைப்ரிட் மாடல் கட்டாயம் தேவை என அனைத்து ஊழியர்களும் கேட்க துவங்கியுள்ளனர். இதற்கு என்ன காரணம்..? எதற்காக மாத சம்பளக்காரர்கள் ஹைப்ரிட் மாடல் அவசியம் எனக் கேட்கிறார்கள் என்பது குறித்து ஹெச்பி நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

ஹெச்பி நிறுவனம்
ஹெச்பி நிறுவனம், செய்த ஆய்வில் இந்திய ஊழியர்கள் அனைவரும் ஹைப்ரிட் வொர்க் மாடல் அதாவது பாதி நாள் வீட்டில் இருந்தும், பாதி நாள் அலுவலகம் சென்று பணியாற்றும் வசதி விரும்புவதாகக் கூறுகின்றனர். இந்த ஹைப்ரிட் மாடல் மூலம் ஊழியர்கள் அதிகமான நேரம் பணியாற்ற முடியும், அதேபோல் வொர்க் லைப் பேலென்ஸ் சிறப்பான முறையில் மேம்படுத்த முடியும் எனத் தெரிவிக்கின்றனர்.

ஊழியர்கள் தக்கவைக்க முடியும்
இதைத் தாண்டி ஹைப்ரிட் மாடல் அல்லது வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை அளிப்பதன் மூலம் ஊழியர்கள் வெளியேறுவதைத் தடுத்து தொடர்ந்து அதைப் பணியில் வைத்திருக்க உதவுகிறது என நிறுவனங்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.

1000 இந்திய ஊழியர்கள்
ஹெச்பி நிறுவனம் குளோபல் ஹைப்ரிட் வொர்க் மாடல் குறித்த இந்தச் சோதனையில் சுமார் 10000 பேர் பங்கு பெற்ற நிலையில், இந்தியாவில் 1000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பங்குபெற்றுள்ளனர், இதில் 18-50 வயதுடைய ஊழியர்கள் பங்க பெற்றுள்ளனர்.

வொர்க் வைப் பேலென்ஸ்
இந்திய ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் போது அதிகமான நேரம் பணியாற்றினாலும் வொர்க் வைப் பேலென்ஸ் கிடைப்பதாக உணர்கின்றனர். அதையும் தாண்டி பெரு நகரங்களில் போக்குவரத்து மற்றும் இதர செலவுகளைத் தவிர்க்க ஹைப்ரிட் மாடலை அதிகம் விரும்புகின்றனர்.

பெரு நகரங்கள்
மும்பை, டெல்லி, நொய்டா, பெங்களூர், சென்னை, ஹைதராபாத் நகரங்களில் தினமும் அலுவலகத்திற்குச் செல்ல சராசரியாகக் குறைந்தபட்சம் 45 நிமிடம் முதல் 1.30 மணிநேரம் செலவழிக்கின்றனர். இது காலை, மாலை எனக் கணக்கீட்டில் ஒரு நாளில் பெரும் பகுதி நேரம் சாலையில் செலவழிக்க வேண்டிய காரணத்தாலும் அலுவலகம் செல்ல ஊழியர்கள் தவிர்க்கின்றனர்.