நானெல்லாம் அமெரிக்காவுக்கே போயிருக்க மாட்டேன்.. Adobe சிஇஓ சாந்தனு.. கலகல பேச்சு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் பல முன்னணி நிறுவனங்களின் சிஇஓவாக இன்று பல இந்தியர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கெல்லாம் நம்பிக்கை என்ற விதையை போட்ட பல இந்தியர்களில் Adobe சிஇஓ சாந்தனு நாராயண்-ம் ஒருவர்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த முக்கியமான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சாந்தனு நாராயண் ஒட்டுமொத்த டெக் ஊழியர்களின் மனநிலையை மாற்றியுள்ளார் என்றால் மிகையில்லை.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சாந்தனு நாராயண் நானெல்லாம் அமெரிக்காவுக்கே போயிருக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்கள் தேடித்தேடி இந்தியர்களுக்கு சிஇஓ பதவி கொடுக்க என்ன காரணம்..?அமெரிக்க நிறுவனங்கள் தேடித்தேடி இந்தியர்களுக்கு சிஇஓ பதவி கொடுக்க என்ன காரணம்..?

டெக் ஊழியர்கள்

டெக் ஊழியர்கள்

இந்திய டெக் ஊழியர்களில் 90 சதவீதம் பேர் அமெரிக்கக் கனவுடன் வாழ்ந்து வரும் வேளையில் Adobe நிறுவனத்தின் சிஇஓ சாந்தனு நாராயண் ஹைதராபாத் இப்போது இருப்பது போல் நான் பணியாற்றும் காலத்தில் இருந்திருந்தால் கட்டாயம் அமெகரிக்காவிற்குச் சென்றிருக்க மாட்டேன் என்று பேசியுள்ளார்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் TiE Global Summit கூட்டத்தின் துவங்க விழாவில் அடோப் சிஇஓ சாந்தனு நாராயண் கலந்துக்கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய அவர் ஹைதராபாத் நகரத்தின் தற்போதைய வர்த்தகச் சூற்றுசூழல் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் தெலுங்கானா தொழில்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் மற்றும் செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன் முயற்சிகளைப் பாராட்டினார்.

சாந்தனு நாராயண்

சாந்தனு நாராயண்

இந்தக் காலகட்டத்தில் ஹைதராபாத் நகரில் நான் வளர்ந்திருந்தால் கட்டாயம் அமெரிக்காவிற்கு வேலைக்காகச் சென்றிருக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் நகரத்திலும், இந்தியாவிலும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது.

தொழிலதிபர்கள்

தொழிலதிபர்கள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழிலதிபர்கள் தொடர்ந்து மேம்பட்டு வருவதை கண் முன்னே பார்க்க முடிகிறது. எல்லோரும் அவர்களுடைய கனவுகளை மெய்ப்பட முயற்சி செய்யுங்கள், புதிய தொழில்நுட்பத்தில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

மனவாடு எப்படி இருக்க வேண்டும்

மனவாடு எப்படி இருக்க வேண்டும்

இதேபோல் மனவாடு (தெலுங்கில் நம்மாளுங்க) எதற்குமே நோ எனச் சொல்லாமல் தொடர்ந்து கனவுகளை நினைவாக்க முயற்சி செய்ய வேண்டும் எனத் தொழிலதிபர்களுக்கு அறிவுரை கூறினார்.

யார் இந்தச் சாந்தனு நாராயண்..?

யார் இந்தச் சாந்தனு நாராயண்..?

கூகுள் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா போன்ற பலருக்கு முன்பாக அடோப் நிறுவனத்தின் சிஇஓவாக 2007ல் பதவியேற்றார். இவர் உருவாக்கிய சப்ஸ்கிரிப்ஷன் மாடல் அடோப் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பல மடங்கு வளர்ச்சி அடைய செய்தது.

அடோப் சிஇஓ

அடோப் சிஇஓ

2007ல் அடோப் சிஇஓ-வாகப் பதவியேற்ற சாந்தனு நாராயண் 2008 ஆம் ஆண்டில் தனது நிர்வாகம் செய்த பல முக்கியமான மாற்றங்களும், எடுத்த புதிய முயற்சிகளின் மூலம் சிறப்பான வருமானத்தைப் பதிவு செய்தது. ஆனால் அடுத்த வருடமே 2009ல் ரியல் எஸ்டேட் பபுள் வெடித்துச் சர்வதேச சந்தையில் நிதி நெருக்கடி உருவானது.

ரெசிஷன்

ரெசிஷன்

இதனால் அடோப் நிறுவனத்தின் வருவாய் 25 சதவீதம் சரிந்து வெறும் 6 பில்லியன் டாலராகக் குறைந்தது. இந்தத் தடுமாற்றத்தில் பல அனுபவ பாடங்களைக் கற்ற சாந்தனு நாராயண் அடோப் நிறுவனத்தின் மென்பொருள் சேவை அனைத்திற்கும் சப்ஸ்கிரிப்ஷன் மாடலை கொண்டு வந்தார்.

200 பில்லியன் டாலர்

200 பில்லியன் டாலர்

இது பெரிய அளவில் பலன் அளித்த நிலையில் வெறும் 6 பில்லியன் டாலர் வருவாயில் இருந்து தற்போது 200 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

வெற்றி, தோல்வி

வெற்றி, தோல்வி

ஹைதராபாத்தில் TiE Global Summit கூட்டத்தில் தனது வெற்றி பாதையை முழுக்க விவரித்து விட்டு என்னுடைய ஐடியா வெற்றிபெற்றதால் நான் இதை வெற்றி கதையாகச் சொல்கிறேன். நான் தோல்வி அடைந்திருந்தால் என்னுடைய பதவியில் உட்காரும் அடுத்தத் தலைவர் என்னுடைய தவறுகளைப் பட்டியலிட்டு இருப்பார் எனவும் சிரித்துக்கொண்ட புதிய மற்றும் இளம் தொழிலதிபர்களுக்கு அறிவுரை கூறினார்.

ஊழியர்கள் பணிநீக்கம்.. கோடிகளில் சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள்.. என்னடா நடக்குது..?! ஊழியர்கள் பணிநீக்கம்.. கோடிகளில் சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள்.. என்னடா நடக்குது..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

I never have left Hyderabad; Adobe CEO Shantanu Narayen advice to manavadu

I never have left Hyderabad; Adobe CEO Shantanu Narayen advice to manavadu
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X