சர்வதேச ஐடி சந்தையில் முன்னோடியாக இகுக்கும் ஐபிஎம், கடந்த சில வருடங்களாகச் சரியான வர்த்தகம் மற்றும் வருமானம் இல்லாமல் மேசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஐபிஎம் நிறுவனத்தில் அதிகளவிலான ஊழியர்கள் எவ்விதமான அறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஐபிஎம் மீண்டும் லாபகரமான நிறுவனமாக உருவெடுக்கும் முயற்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா தலைமையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் முன்னணி வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனமாக விளங்கும் ஐபிஎம் இரண்டாகப் பிரிக்க முடிவு செய்துள்ளது.
ஐபிஎம் நிர்வாகத்தின் இந்த முடிவால் இந்நிறுவன ஊழியர்கள் மீண்டும் பணிநீக்கம் செய்யப்படுமோ என்ற அச்சத்திலும், அடுத்து நிறுவனத்தில் என்ன நடக்கும் என்பது குறித்தும் அச்சத்தில் உள்ளனர்.
Netflix, Amazon Prime, Disney Hotstar எல்லாமே இலவசம்! மோதி விளையாடும் ஜியோ!

அரவிந்த் கிருஷ்ணா
2020ன் துவக்கத்தில் ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஓ-வாகப் பொறுப்பேற்ற அரவிந்த் கிருஷ்ணா தலைமையிலான நிர்வாகம் ஐபிஎம் நிறுவனத்தை 2ஆகப் பிரிக்க முடிவு செய்துள்ளது. இப்புதிய மாற்றத்தின் காரணமாக இந்தியாவில் இருக்கும் ஐபிஎம் ஊழியர்களில் 3ல் ஒரு பங்கு அல்லது 4ல் ஒரு பங்கு ஊழியர்கள் புதிதாகப் பிரிக்கப்படும் நிறுவனத்திற்குச் செல்ல உள்ளனர் என அரவிந்த் கிருஷ்ணா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்த மாற்றத்தின் மூலம் இந்திய ஊழியர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய மாற்றும் வரும் எனத் தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.

புதிய நிறுவனம்
தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின் படி ஹைபிரிட் கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த வர்த்தகம், ஆராய்ச்சி, சேவை என அனைத்தும் ஐபிஎம் நிறுவனத்தின் கீழ் இருக்கப்போகிறது.
புதிதாக உருவாக்கப்பட உள்ள நிறுவனம் ஐடி இன்பரா சேவைகளை முழுமையாகக் கவனித்துக்கொள்ள உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

2020 இறுதி
2020 வருடத்தின் இறுதிக்குள் ஐபிஎம் நிறுவனமும் வர்த்தகமும் இரண்டாகப் பிரிக்கப்படும், ஆனால் இந்தப் பிரிவு முழுமை அடைந்து வர்த்தகம் சீராக அடுத்த ஒரு வருடம் தேவை எனவும் அவர் தெரிவித்தார்.
இதனால் இந்தியாவில் இருக்கும் ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படாமல் புதிய அல்லது பழைய நிறுவனத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

சந்தீப் பட்டேல்
அரவிந்த் கிருஷ்ணா தலைமையிலான நிர்வாகத்தின் இப்புதிய மாற்றத்தின் மூலம் தற்போதும் ஐபிஎம் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் சந்தீப் பட்டேல் ஒரு நிறுவனத்தின் தலைவராக மட்டுமே இருப்பார், மற்றொரு நிறுவனத்திற்குப் புதிதாக ஒருவரைத் தலைவராக நியமிக்கப்படுவார் என அரவிந்த் தெரிவித்தார்.

நன்மை
ஐபிஎம் நிறுவனத்தில் தற்போது வர்த்தகம் தனியாகப் பிரிக்கப்படும் நிலையில், தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி நிதியைச் சரியான முறையில் பயன்படுத்திப் புதிய திறன்களையும், அதிகளவிலான வர்த்தகத்தையும் பெற்ற முடியும். இது இரண்டு நிறுவனங்களுக்கும் பல்வேறு நன்மையைக் கொடுக்கும், அனைத்திற்கும் மேலாகத் தனிப்பட்ட நிறுவனங்களை மகவும் கவனமுடன் நிர்வாகம் செய்யும் முடியும் இதனால் ஐபிஎம் மீண்டும் லாபகரமான வர்த்தகமாக மாறும்.