ஐசிசி எடுத்த திடீர் முடிவு.. முகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட் ஆக மாறியது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்புக் கிரிக்கெட் போட்டிகளுக்கான மீடியா உரிமத்தை இந்தியாவிற்குத் தனியாகவும், இந்தியாவைத் தவிரப் பிற நாடுகளுக்கும் எனத் தனித்தனியாக ஏலம் விட முடிவு செய்துள்ளது என ஐசிசி அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் அதிகப்படியான வருமானத்தைப் பார்க்க முடியும் என எதிர்பார்க்கிறது ஐசிசி. ஸ்போர்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் துறையில் இறங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டு வரும் நிலையில் போட்டி அதிகரிக்கும் வேளையில் ஐசிசி-யின் இந்த முடிவு அதிகப்படியான வருமானத்தை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த ஜோடிகள்.. முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தான் டாப் லிஸ்ட்..! இந்தியாவின் சக்தி வாய்ந்த ஜோடிகள்.. முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தான் டாப் லிஸ்ட்..!

 கிரிக்கெட் ரசிகர்கள்

கிரிக்கெட் ரசிகர்கள்

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் வாயிலாகத் தான் ஒளிபரப்பாளர்கள் அதிகப்படியான வருமானத்தைப் பெறுகின்றனர், இதில் இந்தியாவின் பங்கு தான் மிகப்பெரியது. இந்த வர்த்தக நடைமுறையில் வருமானத்தை அதிகரிப்பது என ஐசிசி புதிய முடிவை எடுத்துள்ளது.

 முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இதேவேளையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒளிபரப்பாளர்கள் ஸ்போர்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில், அடுத்து வரும் ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் போட்டிகளின் மீடியா ரைட்ஸ் பெறுவதில் பெரிய போட்டியிருக்கும்.

 ஸ்டார் இந்தியா மற்றும் சோனி பிக்சர்ஸ்
 

ஸ்டார் இந்தியா மற்றும் சோனி பிக்சர்ஸ்

ஏற்கனவே கிரிக்கெட் போட்டிகளின் மீடியா ரைட்ஸ் ஏலத்தில் ஸ்டார் இந்தியா மற்றும் சோனி பிக்சர்ஸ் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருகை பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஐசிசி 2024 ஏலம்

ஐசிசி 2024 ஏலம்

இந்தப் போட்டியை பயன்படுத்தி அதிக வருமானத்தைப் பெற திட்டமிட்ட ஐசிசி 2024 முதல் நடக்கும் ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஏலத்தில் இந்தியா-வை தானியாகப் பிரித்து ஒரு ஏலமாகவும், மற்ற நாடுகளைச் சேர்த்து தனி ஏலமாகவும் நடத்த முடிவு செய்துள்ளது ஐசிசி.

 ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

ஐசிசி-யின் இந்தப் புதிய முறை ஏலம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தை முடித்த பின்பு நடக்க உள்ளது. இதேபோல் ஐசிசி ஏலத்தில் மீடியா ரைட்ஸ்-ஐ பெற விரும்புவோர் 4 அல்லது 8 வருடத்திற்கான திட்டத்தைத் தேர்வு செய்து விண்ணப்பம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

 அமேசான் மற்றும் பேஸ்புக்

அமேசான் மற்றும் பேஸ்புக்

இந்திய கிரிட்கெட் போட்டிகளுக்கான மீடியா ரைட்ஸ்-ஐ பெறுவதற்காக ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் அல்லாமல் இந்த முறை அமேசான் மற்றும் பேஸ்புக் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களும் இறங்க முடிவு செய்துள்ளது.

 ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

2015-2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மீடியா ரைட்ஸ்-ஐ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சுமார் 2.02 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்த ஏலத்தில் இந்தியாவிற்கான மீடியா ரைட்ஸ் மட்டும் 1.2 முதல் 1.8 பில்லியன் டாலர் வரையில் இருக்கும் எனப் பல தரப்பினரால் கணிக்கப்படுகிறது.

முகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட்

முகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஐபிஎல் போட்டியில் மட்டும் அல்லாமல் UAE T20 போட்டியிலும் புதிதாக ஒரு அணியை பெற உள்ளது. இதேவேளையில் எப்படியாவது ஸ்போர்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டும் என திட்டமிட்டு வரும் ரிலையன்ஸ்-க்கு இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கான ஏலத்தை தனியாக பிரித்த நிலையில் ரிலையன்ஸ் ஏலத்தில் வெற்றிப்பெற வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

50:50 சான்ஸ்

50:50 சான்ஸ்

ஆதாவது இந்திய வர்த்தகம் கிடைக்கவில்லை எனில் பிற நாட்டு வர்த்தகம், பிற நாட்டு வர்த்தகம் கிடைக்கவில்லை எனில் இந்தியா.. ரிலையன்ஸ்-க்கு பிற நாடுகளில் வர்த்தகம் இல்லாத காரணத்தால் இது பின்னடைவாகவும் அமைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அமேசான், பேஸ்புக், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனிக்கு பிற நாடுகள் வர்த்தகம் கிடைத்தாலும் ஜாக்பாட் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICC carve out India's Media rights into separate auction as Mukesh Ambani, amazon, Meta enters sports broadcast

ICC carve out India's Media rights into seperate auction as Mukesh Ambani, amazon, Meta enters sports broadcast ஐசிசி எடுத்த திடீர் முடிவு.. முகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட் ஆக மாறியது..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X