இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி பல்வேறு டிஜிட்டல் கல்வி சேவைகளை அளித்து வரும் மைகிளாஸ்போர்டு நிறுவனத்தில் 9.09 சதவீத பங்குகளைச் சுமார் 4.5 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.
செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் ஐசிஐசிஐ வங்கி 9.09 சதவீத பங்குகளைக் கைப்பற்றுவதற்காக மைகிளாஸ்போர்டு கல்வி சேவைகள் நிறுவனத்துடன் ( Myclassboard Educational Solutions Pvt Ltd) ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் மைகிளாஸ்போர்டு நிறுவனத்தின் 100 பங்குகளும், 1,04,890 convertible preference பங்குகளையும் கைப்பற்ற உள்ளது. பங்கு கைமாற்றத்திற்குப் பின் ஐசிஐசிஐ வங்கி இந்நிறுவனத்தின் 9.09 சதவீத பங்குகளுக்கு முழுமையாக உத்தரவாதத்தைப் பெறும்.
இந்தப் பங்கு பரிமாற்றம் பிப்ரவரி 2021க்குள் முடியும் என்றும், 10 சதவீதத்திற்கும் குறைவான பங்குகளைக் கைப்பற்றும் காரணத்தால் செபி அமைப்பின் ஒப்புதல் தேவையில்லை என்றும் ஐசிஐசிஐ விளக்கம் கொடுத்துள்ளது. மைகிளாஸ்போர்டு 2009ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிவனமானகும்.
1 லட்சம் கோடி ரூபாய்.. எலைட் கிளப்-ல் சேர்ந்த பஜாஜ் ஆட்டோ..!
இதேவேளையில் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் காப்பரேஷன் நிறுவனம் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகளில் சுமார் 2 சதவீத பங்குகளை ரீடைல் சந்தையில் விற்பனை செய்துள்ளது. எல்ஐசி சுமார் 13.8 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளது.
இதன் மூலம் எல்ஐசி நிறுவனத்தில் ஐசிஐசிஐ பங்கு இருப்பு அளவு 8.74 சதவீதத்தில் இருந்து 6.74 சதவீதமாகக் குறைந்துள்ளது.