ஐசிஐசிஐ வங்கியின் சி.இ.ஓவுக்கு பதவி நீட்டிப்பு.. எத்தனை ஆண்டுகள் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் லாபகரமாக இயங்கி வரும் வங்கிகளில் ஒன்று ஐசிஐசிஐ வங்கி என்பது தெரிந்ததே.

இந்த வங்கிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் வாடிக்கையாளர்களுக்கு இவ்வங்கி புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி லாபகரமாக இயங்குவதற்கு முக்கிய காரணம் அதன் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சிஇஓ சந்தீப் பக்‌ஷி என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

பேப்ரிக்.காம் சேவையை நிறுத்திய அமேசான்..ஏன் இந்த அதிரடி முடிவு? பேப்ரிக்.காம் சேவையை நிறுத்திய அமேசான்..ஏன் இந்த அதிரடி முடிவு?

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சந்தீப் பக்‌ஷி அவர்களை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஐசிஐசிஐ நிர்வாகம் நியமனம் செய்துள்ளது.

சந்தீப் பக்‌ஷி

சந்தீப் பக்‌ஷி

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி முதல் முறையாக ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சந்தீப் பக்‌ஷி பதவி ஏற்றார். அதற்கு முன்பாக அவர் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தார் என்பது குறிபிடத்தக்கது.

36 ஆண்டுகள்

36 ஆண்டுகள்

அதுமட்டுமன்றி கடந்த 36 ஆண்டுகளாக ஐசிஐசிஐ வங்கி குடும்பத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் ஐசிஐசிஐ லிமிடெட், ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகள் நீட்டிப்பு

3 ஆண்டுகள் நீட்டிப்பு

இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் இயக்குனர் குழு சந்தீப் பக்‌ஷியை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் அறிவிப்பை ஐசிஐசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வங்கியின் ஒழுங்குமுறை தாக்கல் செபியிடம் வழங்கப்பட்டுள்ளது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பதவிக்காலம்

பதவிக்காலம்

இதன்படி சந்தீப் பக்‌ஷி அவர்களின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி வரை உள்ள நிலையில் தற்போது மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி வரை அவர் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICICI Bank re-appoints Sandeep Bakhshi as MD and CEO for 3 years

ICICI Bank is known to be one of the most profitable private banks in India. It is noteworthy that this bank has a large number of customers and the bank is announcing new schemes for the customers.
Story first published: Saturday, October 22, 2022, 21:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X