கூடுதல் வட்டியுடன் பிக்சட் டெபாசிட்.. இன்றே கடைசி என ஐசிஐசிஐ அறிவிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 0.50 சதவிகிதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பது தெரிந்ததே.

 

இதன் காரணமாக வங்கிகளில் வீட்டுக் கடன், பர்சனல் கடன் உள்ளிட்ட கடன்கள் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம் என்பதும், மாதத்தவணை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு கொண்டாட்டம் என்பதும் டெபாசிட்தாரர்களுக்கு கூடுதல் வட்டி கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1276 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ் டாப்பு..! 1276 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ் டாப்பு..!

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

ரெப்போ வட்டி விகிதம் ஒவ்வொரு முறையும் உயரும் போதும் பிக்சட் டெபாசிட் வட்டி வீதத்தை அனைத்து வங்கிகளும் உயர்த்தி வருகின்றன என்பதும் இதனால் பிக்சட் டெபாசிட் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

நடப்பு நிதி ஆண்டில் மே முதல் செப்டம்பர் வரையிலான 5 மாதத்தில் ரிசர்வ் வங்கி மொத்தம் 1.40 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை வைத்து உள்ளதை அடுத்து பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் சுமார் 1 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு மேலும் வட்டி விகிதம் உயர்ந்து உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி
 

ஐசிஐசிஐ வங்கி

அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு ஐசிஐசிஐ வங்கி கூடுதல் வட்டி கிடைக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. 'கோல்டன் இயர் பிக்சட் டெபாசிட்' என்ற இந்தத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தருவதாக ஐசிஐசிசி அறிவித்துள்ளதால் இந்த திட்டத்தில் பிக்சட் டிபாசிட் செய்ய மூத்த குடிமக்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

இந்த திட்டத்தின்படி இந்திய குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்களுக்கு மற்றவர்களைவிட 0.50 சதவீதம் அதிக வட்டியும், சிறப்பு சலுகையாக 0.10 சதவிகிதம் வட்டியும் வழங்கி வந்தது. எனவே மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் பிக்சட் டெபாசிட் 5 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்தால் 6.60% வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் வட்டி

கூடுதல் வட்டி

தீபாவளியை முன்னிட்டு இந்த கூடுதல் வட்டி சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்வதற்கு இன்றுடன் அதாவது அக்டோபர் 7ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைகிறது. இன்றுக்குள் ஐந்து ஆண்டு காலத்திற்கு மேல் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு 6.60 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

அபராதமும் உண்டு

அபராதமும் உண்டு

ஆனால் அதே நேரத்தில் இந்த திட்டத்தில் பிக்சட் டெபாசிட் செய்தவர்கள் முன்கூட்டியே திரும்பப் பெற்றால் 1.10 சதவீதம் அபராதம் உண்டு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICICI Bank special golden years fixed deposit for senior citizens ends today

ICICI bank offers a deposit scheme for senior citizens called ICICI Bank Golden Years. This is a special fixed deposit scheme in which the bank gives an additional rate of interest and the standard benefit of 0.50 percent
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X