மும்பை: தனியார் துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிறுவனம், அதன் நிகரலாபம் 31.5% வீழ்ச்சி கண்டிள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் அதன் நிகரலாபம் 31.5% வீழ்ச்சி கண்டு, 178.73 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் கடந்த 2020ம் நிதியாண்டில் 21% லாபத்தினை கண்டு, 1.605 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
விஎன்பி என்பது புதிய வர்த்தகத்தினால் ஏற்படும் மதிப்பு ஆகும். இந்த விஎன்பி மதிப்பு 2020ம் நிதியாண்டில். 21.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 17 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருவாயானது குறைந்து நான் காவது காலாண்டில் 18,941.21 கோடி ரூபாயாகவும் சரிந்துள்ளது. இட்ஜ்ஹு முந்தைய ஆண்டில் 5,617.63 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதே பிரீமியம் மூலம் கிடைக்கும் நிகர வருமானம் 10,475 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது ,முந்தைய ஆண்டில் 10,056 கோடி ரூபாயாக இருந்தததாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் கடந்த முழு நிதியாண்டிற்கான பிரீமியம் வருவாய் 7.5% அதிகரித்து 32,879 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான என் எஸ் கண்ணன், கடந்த நிதியாண்டில் விபிஎன் மதிப்பு 21% அதிகத்துள்ளது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விபிஎன்னில் பாதுக்காப்பு வணிகம் 958 கோடி ரூபாயும், இணைக்கப்பட்ட சேமிப்பு 420 கோடி ரூபாயும் பங்களித்துள்ளது. மீதமுள்ள 227 கோடி ரூபாய் விஎன்பி இணைக்கப்படாத வணிகத்திலிருந்து கிடைத்தது.
கடந்த நிதியாண்டில் வருடாந்திர பிரீமியம் சமமான 5.4 சதவீதம் குறைந்து, 7,381 கோடி ரூபாயாக உள்ளது. பாதுகாப்பு வணிக வளர்ச்சி தொடர்ந்து சேமிப்பு வளர்ச்சியினை விட அதிகமாக இருக்கும் என்றும் கண்ணன் விளக்கியுள்ளார். எப்படி இருப்பினும் சந்தை நிலையானதாக இருப்பின், தேவை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.