9 லட்சம் பங்குகளை வாரி வழங்கிய MD.. ஆனந்த கண்ணீரில் 5 ஊழியர்கள்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய காலமாக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், பங்குகள் பரிசாக அறிவிப்பு என பல செய்திகளை படித்திருக்கிறோம். குறிப்பாக சில நிறுவன உரிமையாளர்கள் ஊழியர்களுக்கு வீடு, கார் என பரிசுகளை வாரி வழங்கி வருவதை படித்திருப்போம்.

 

அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தான் தற்போதும் அரங்கேறியுள்ளது. அதென்ன சம்பவம் வாருங்கள் பார்க்கலாம்.

ஐடிஎஃப்சி வங்கியின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வி வைத்தியநாதன், தன்னிடம் உள்ள 9 லட்சம் பங்குகளை தனது 5 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

ஏர் இந்தியாவின் புதிய நிர்வாக குழு தலைவர் நிபுன்..!

வீடு வாங்க பரிசு

வீடு வாங்க பரிசு

இந்த 9 லட்சம் பங்குகளின் மதிப்பு கிட்டதட்ட 4 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. எதற்காக இந்த பங்குகள் பரிசாக கொடுக்கப்பட்டன. யாருக்கு எவ்வளவு பங்குகள்? ஏன் தனக்கு சொந்தமான பங்குகளை வழங்கியுள்ளார் என பல கேள்விகள் எழலாம். 5 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பங்குகள் அவர்களுக்கு வீடு வாங்க வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாருக்கெல்லாம் பங்கு?

யாருக்கெல்லாம் பங்கு?

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பொதுவாக ஒரு நிறுவனம் இதுபோன்ற பங்குகளை பரிசாக வழங்குகிறது எனில், அவர்கள் நிறுவனத்தின் டாப் பெர்பார்மராக இருப்பர். ஆனால் வைத்தியநாதன் பங்குகளை யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார் தெரியுமா? தன்னுடைய பயிற்றுனரான ராமேஷ் ராஜூக்கு 3 லட்சம் பங்குகளை கொடுத்துள்ளார்.

வீட்டு உதவியாளர் & கார் டிரைவர்
 

வீட்டு உதவியாளர் & கார் டிரைவர்

மேலும் தன்னுடைய வீட்டு உதவியாளர் பிரஞ்சால் நர்வேக்கருக்கு 2 லட்சம் பங்குகளும், கார் டிரைவர் அழகர் சாமிக்கு 2 லட்சம் பங்குகளையும், அலுவலக உதவியாளார் தீபக் பத்தாரேவுக்கு 1 லட்சம் பங்குகளையும், வீட்டு வேலை செய்யும் சந்தோஷ் ஜோகாலே1 லட்சம் பங்குகளையும் பரிசாக கொடுத்துள்ளார். இந்த பங்குகளின் இன்றைய மதிப்பு 3.95 கோடி ரூபாயாகும். ஒரு பங்கின் விலை 43.9 ரூபாயாக உள்ளது.

சமூக நல அறக்கட்டளைக்கு பங்கு

சமூக நல அறக்கட்டளைக்கு பங்கு

இவ்வாறு பரிசாக பங்குகளை பெற்றவர்கள் யாரும் வைத்திய நாதனுக்கு உறவினர்கள் அல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ருக்மணி சமூக நல அறக்கட்டளைக்கு ஆதரவாக 2 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு உதவி

ஊழியர்களுக்கு உதவி

இது வைத்திய நாதனின் இந்த நெகிழ்ச்சியான உதவியானடு முதல் முறை அல்ல. ஏற்கனவே இது போன்ற உதவிகளை ஊழியர்களுக்கு செய்துள்ளார் என்பதும் நினைவுகூறத்தக்கது. கடந்த 2021ல் தன்னிடம் இருந்த 2.43 கோடி ரூபாய் மதிப்புள்ள 4.50 லட்சம் பங்குகளை, 3 பேருக்கு வீடு வாங்க பரிசாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

தற்போது என்எஸ்இ-யில் 2.28% சரிவினைக் கண்டு. ஐடிஎஃப்சி பங்கின் விலையானது, 42.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 43.35 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 42.50 ரூபாயாகவும் உள்ளது.

இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் விலையானது 2.28% குறைந்து, 42.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 43.30 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 42.55 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 69.30 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 40.75 ரூபாயாகவும் உள்ளது.

சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்?

சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்?

தற்போதைய நிலவரப்படி, (12.19 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 786.1 புள்ளிகள் குறைந்து, 56,897 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 235.25 புள்ளிகள் குறைந்து, 16,971.40 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இது இன்று காலை அமர்வில் 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிவில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IDFC first bank MD Vaidyanathan offer 9 lakh shares to staff to buy home

IDFC first bank MD Vaidyanathan offer 9 lakh shares to staff to buy home/9 லட்சம் பங்குகளை பரிசாக வாரி வழங்கிய MD.. ஆனந்த கண்ணீரில் 5 ஊழியர்கள்.. ஏன் தெரியுமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X