கொரோனா தொற்றுக் காரணமாகக் கடந்த இரண்டு வருடமாக இந்தியாவின் முன்னணி கல்லூரிகள் மாணவர்களைக் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வு செய்ய முடியாமல் ஆப்லைன் முறையில் தேர்வு செய்து வந்தது நிறுவனங்கள்.
இதனால் பெரிய சம்பளத்தில் வேலைவாய்ப்பை அதிகமானோரால் பெற முடியாத நிலை உருவானது.
வெறும் 29 ரூபாய் முதலீட்டில் 4 லட்சம் வருமானம்.. எல்ஐசியின் சூப்பர் திட்டம்..!

ஊழியர்கள் தட்டுப்பாட்டு
இதேபோல் இந்திய ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் மத்தியில் தற்போது அதிகப்படியான ஊழியர்கள் தட்டுப்பாட்டுப் பிரச்சனையை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த அண்டு நாட்டின் முன்னணி கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ மிகவும் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐஐஐடி கல்லூரி
கடந்த சில மாதத்தில் பல முன்னணி நிறுவனங்கள் ஐஐடி, எம்ஐடி, ஐஐஎம் கல்லூரி மாணவர்களை அதிகப்படியான சம்பளத்தில் பணியில் அமர்த்தி வரும் நிலையில், தற்போது இப்பட்டியலில் ஐஐஐடி கல்லூரியும் சேர்ந்துள்ளது. IIT தெரியும், அது என்னடா IIIT..?

தகவல் தொழில்நுட்ப பிரிவு
பொதுவாக ஐஐடி கல்லூரியில் அனைத்து இன்ஜினியரிங் பிரிவுகளும் இருக்கும், ஆனால் ஐஐஐடி கல்லூரி என்பது தகவல் தொழில்நுட்ப பிரிவுக்காக மட்டுமே இயங்கி வரும் முக்கியமான கல்லூரியாகும். சமீப காலமாகவே இந்த ஐஐஐடி கல்லூரி மாணவர்களுக்கும் பெரிய அளவிலான டிமாண்ட் உருவாகி வருகிறது.

1.2 கோடி ரூபாய் சம்பளம்
இதை உறுதி செய்யும் வகையில் ஐஐஐடி லக்னோ கல்லூரியில் பிடெக் இறுதியாண்டு படிக்கும் மாணவர் அபிஜித் திவேதி-க்கு 1.2 கோடி ரூபாய் சம்பளத்தில் அமேசான் நிறுவனம் தனது அயர்லாந்து நாட்டின் டப்லின் அலுவலகத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் பணியைக் கொடுத்துள்ளது.

ஐஐஐடி லக்னோ
இதன் மூலம் ஐஐஐடி லக்னோ கல்லூரியின் அனைத்துக் கேம்பஸ் இண்டர்வியூ சாதனைகளையும் அபிஜித் திவேதி தனது 1.2 கோடி ரூபாய் வேலைவாய்ப்பு மூலம் முறியடித்துள்ளார். 2 வருடத்திற்குப் பின்பு ஐஐஐடி லக்னோ கல்லூரியில் 100 சதவீத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, இதேபோல் இக்கல்லூரியில் வேலைவாய்ப்புப் பெற்றவர்களில் சராசரி சம்பளம் 26 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற கல்லூரிகள்
ஐஐடி போன்ற முன்னணி கல்லூரிகளில் மட்டும் அல்லாமல் தற்போது ஊழியர்கள் தட்டுப்பாடு இருக்கும் காரணத்தால் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அதிகப்படியான வேலைவாய்ப்பு, சிறப்பான சம்பளம் அளிக்கப்படுகிறது. எனவே மாணவர்கள் சந்தையில் டிமாண்ட் அதிகமாக இருக்கும் திறன்களை வளர்த்துக்கொண்டால் கட்டாயம் அதிகப்படியான சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.