பிரதமர் மோடிக்கு ஐஎம் எஃப்பின் பொருளாதார நிபுணர் அட்வைஸ்.. கொரோனா நெருக்கடி என்ன செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நடப்பு ஆண்டும் மற்றும் அடுத்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 1 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

உலகளவில் பரவி வரும் கொரோனாவின் தாக்கம், நாட்டில் பலத்த சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதை, இந்த உலகளாவிய நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

 பிரதமர் மோடிக்கு ஐஎம் எஃப்பின் பொருளாதார நிபுணர் அட்வைஸ்.. கொரோனா நெருக்கடி என்ன செய்யலாம்..!

மேலும் 2020ம் நிதியாண்டிற்கான வளர்ச்சி திட்டதினை பார்த்தால், 2021வுடன் சேர்க்கும் போது, இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி 1 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என்று கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் கடந்த 2020ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 4.5 சதவீதம் குறையலாம். இதே சர்வதேச அளவிலான உற்பத்தி 4.9 சதவீதமாக சுருங்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியிருந்தது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் கணிக்கப்பட்ட 3 சதவீத சுருக்கத்தை விட, கூர்மையான வீழ்ச்சி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் நம்ப முடியாத ஆழமான சரிவு உள்ளது. எனினும் இந்த சுகாதார நெருக்கடியின் மத்தியிலும் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆக உலகப் பொருளாதாரத்தோடு, இந்திய பொருளாதாரமும் மீண்டு வரும் என்றும் நம்பப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு இது குறித்து ஆலோசனை கூற நினைத்தால் என்ன கூறுவீர்கள் என்ற NDTV இண்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தியாவில் மேலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். அதோடு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி அல்லது போதிய ஆதரவு கொடுக்க வேண்டும். மூன்றாவது இது சீர்திருத்தங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் சீனாவில் வணிகங்கள் மீண்டும் தொடங்கிய நிலையில், அங்கு புதிய தொற்றுகள் என்பது மிக குறைவாகவே உள்ளது. ஆக இது 2020ம் ஆண்டில் நேர்மறையான வளர்ச்சியினை பதிவு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் சீனாவும் சாதகமான வளர்ச்சியினைக் கொண்டுள்ளது. இது வளர்ச்சி காணும் பொருளாதாரங்களில் மிக விரைவான வெற்றியைக் கண்டுள்ளது. மேலும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் சுருங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது 1930களில் உள்ளதைப் போல பெரும் மந்த நிலையை தற்போது கண்டு வருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் கருதுகிறது.

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மிக மோசமான வளர்ச்சியினைக் கண்டோம். ஆனால் தற்போது சற்று வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது. எனினும் கொரோனாவின் பாதிப்பு குறைந்தபாடாக இல்லை. ஆக எதிர்கால நிலை என்பது மிக மோசமாக உள்ளது. எனவே மீட்பு விரைவாக தொடங்கலாம் என்றும் கீதா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IMF chief economist advice for our Prime Minister Narendra modi on coronavirus crisis

IMF’s chief economist gita gopinath said India will grow at slightly over 1 percent 2020 and 2021.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X