கிரிப்டோகரன்சி தடை செய்ய வேண்டாம்.. ஐஎம்எஃப் கீதா சொல்வதென்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக இந்தியா வம்சாவாளியைச் சேர்ந்த கீதா கோபி நாத் நியமனம் செய்யப்படவுள்ளார்.

ஐஎம்எஃப்-பின் பொருளாதார நிபுணராக இருந்து வரும் கீதா கோபிநாத், பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமையன்று சந்தித்து பேசினார்.

 4 ஜிஎஸ்டி வரி பலகையை மூன்றாகக் குறைக்கத் திட்டம்.. மக்களுக்குப் பாதிப்பா...?! 4 ஜிஎஸ்டி வரி பலகையை மூன்றாகக் குறைக்கத் திட்டம்.. மக்களுக்குப் பாதிப்பா...?!

சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய துணை நிர்வாக இயக்குனராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிகாலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடையவுள்ளது.இந்த நிலையில் தான் கீதா கோபி நாத்துக்கு பதவி உயர்வி கொடுக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ தடை வேண்டாம்

கிரிப்டோ தடை வேண்டாம்

நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எக்னாமிக் ரிசர்ச் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பேசிய கீதா கோபி நாத், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் கிரிப்டோகரன்சியை தடை செய்வதற்குப் பதிலாக அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் உலகளாவிய கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எல்லை தாண்டி செல்லலாம்

எல்லை தாண்டி செல்லலாம்

எந்தவொரு நாடும் தனிப்பட்ட முறையில் தாங்களாகவே இந்த சிக்கலை தீர்க்க முடியாது என்று கூறியுள்ளார். ஏனெனில் கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைகளை எல்லை தாண்டிச் செல்ல முடியும். அதற்கு அவசர மாக உலகாளாவிய கொள்கை தேவை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அச்சுறுத்தல் அல்ல
 

அச்சுறுத்தல் அல்ல

மேலும் தற்போது கிரிப்டோகரன்சி என்பது உலகளாவிய அச்சுறுத்தல் அல்ல, பெரும்பாலான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்கள் இந்தியாவில் இல்லை. ஆக இந்தியாவில் இங்கு தடை விதிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது என கூறியுள்ளார்.

இப்போதைக்கு தடை இருக்காது

இப்போதைக்கு தடை இருக்காது

தற்போதைக்கு தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கவும், ரிசர்வ் வங்கி சார்பில் அதிகாரபூர்வ டிஜிட்டல் பணம் வெளியிடவும் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் கூறியிருந்தது. ஆனால் ஆனால், இந்த மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வராது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எப்போது மசோதா கொண்டு வந்தாலும், அது நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IMF Gita gopinath on cryptocurrency regulations

IMF Gita gopinath on cryptocurrency regulations/கிரிப்டோகரன்சி தடை செய்ய வேண்டாம்.. ஐஎம்எஃப் கீதா சொல்வதென்ன..!
Story first published: Thursday, December 16, 2021, 20:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X