மத்திய அரசுக்கு கீதா கோபிநாத் எச்சரிக்கை.. வருவாயை பெருக்க வழியைக் கண்டுபிடியுங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மிக மோசமான மந்த நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுவரையில் அம்முயற்சிகள் கைகொடுத்ததாக தெரியவில்லை. எனினும் அரசின் முயற்சியோடு, பொதுமக்களின் செலவினங்களும் இந்த வளர்ச்சியில் கைகொடுக்கலாம் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

எனினும் அதிகரித்து வரும் செலவினங்களை சமாளிக்க மத்திய அரசு, வருவாயை பெருக்க புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் பொது செலவினங்களை சமன்படுத்த வேண்டிய புதிய வருவாய்களைப் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்கள். மேலும் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை மிகவும் இந்தியாவுக்கு முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார். நிதி பற்றாக்குறையை இலக்காக வைத்திருப்பது இலக்காக வைத்திருப்பது முக்கியம் அல்ல, மாறாக அதில் வருவாயை திரட்டுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் செலவினங்களை பகுத்தறிவு செய்தல் ஆகியவை அடங்கும் என்றும் கீதா தெரிவித்துள்ளார்.

ஜிடிபி வீழ்ச்சி

ஜிடிபி வீழ்ச்சி

பிரதமர் மோடி தலைமையிலான அரசு சமீபத்திய மாதங்களில் மந்த நிலையை எதிர்கொள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதே சமயம் ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதங்களைப் குறைப்பதன் மூலம் பண ஊக்கத்தை வழங்கியது. அதிலும் நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து 5 முறை வட்டி குறைப்பு செய்தது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் குறித்தான ஜிடிபி விகிதம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

தொழில்துறை உற்பத்தியும் வீழ்ச்சி

தொழில்துறை உற்பத்தியும் வீழ்ச்சி

இதே போல இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள், தொழில்துறை மிகப் பலவீனமாக இருப்பதையே காட்டியது. இந்த நிலையில் கடந்த அக்டோபரில் தொழில்துறை உற்பத்தி 3.8 சதவிகிதமாக குறைந்தது. குறிப்பாக கார்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் நுகர்வானது 18 சதவிகிதம் சுருங்கியதாகவும் கூறப்படுகிறது. இது இன்று நேற்றல்ல தொடர்ந்து ஐந்தும மாத சரிவாகவும் கருதப்படுகிறது.

சில்லறை பணவீக்கம் அதிகரிக்கும்

சில்லறை பணவீக்கம் அதிகரிக்கும்

இதே போல் கடந்த நவம்பர் மாதத்திலும் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து உணவு பணவீக்கமும் அதிகரித்துள்ளது. ஆக இவை எல்லாவற்றையும் சரிசெய்ய, அரசு விரைந்து புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

வரி குறைப்பு மட்டும் போதாது

வரி குறைப்பு மட்டும் போதாது

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு அரசின் வரி குறைப்பு நடவடிக்கையானது இருந்தால் மட்டும் போதாது. வருவாயை பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் இப்படி கூறியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியதே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IMF Gita gopinath said Modi government needs to find new way to rising revenue

Prime Minister Narendra modi’s administration trying to reverse heavy economic slowdown and public spending also lift to support growth, Said IMF chief economist GIta Gopinath.
Story first published: Friday, December 20, 2019, 17:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X