சர்வதேச பொருளாதார வளர்ச்சியை குறைத்த ஐஎம்எப்.. ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகப் பொருளாதாரத்தின் நிலைமை கடந்த மாதம் கணிக்கப்பட்டதை விட மோசமானதாக உள்ளது எனச் சர்வதேச நாணய நிதியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்காக ஐஎம்எப் மேற்கோள் காட்டிய காரணங்கள் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் உலக நாடுகளின் purchasing manager கணக்கெடுப்புத் தரவுகள் தொடர்ந்து சரிந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்காவின் பணவீக்கம் குறைந்தது மூலம் உருவான சாதகமான வாய்ப்புகள் அனைத்தும் தற்போது ஐஎம்எப் அறிவிப்பு மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

சீனா பொருளாதாரத்தின் நிலைமையைப் பாத்தீங்களா.. அட பாவமே..!சீனா பொருளாதாரத்தின் நிலைமையைப் பாத்தீங்களா.. அட பாவமே..!

முக்கியப் பிரச்சனைகள்

முக்கியப் பிரச்சனைகள்

தொடர்ந்து உயர்வான அளவிலும், பரந்த அடிப்படையிலான பணவீக்கம், சீனாவின் பொருளாதார மற்றும் உற்பத்தியின் வளர்ச்சி மந்தநிலை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட விநியோக பிரச்சனைகள், அதன் மூலம் உலக நாடுகளின் உருவான உணவுப் பாதுகாப்பின்மை உருவானது.

கொள்முதல் மேலாளர் கணக்கெடுப்பு

கொள்முதல் மேலாளர் கணக்கெடுப்பு

இதன் மூலம் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது பணவியல் கொள்கையின் தளர்வுகளைத் தொடர்ந்து குறைத்தது மூலம் purchasing manager கணக்கெடுப்புத் தரவுகள் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதாக ஐஎம்எப் காரணம் காட்டியுள்ளது.

ஐஎம்எப்
 

ஐஎம்எப்

உலக நாடுகளின் வளர்ச்சிக்கு அதிகளவிலான கடன் உதவிகளைச் செய்து வரும் ஐஎம்எப் அமைப்பு கடந்த மாதம் 2023 ஆம் ஆண்டிற்கான அதன் உலகளாவிய வளர்ச்சி அளவாக 2.9 சதவீதம் எனக் கணித்திருந்த நிலையில் தற்போது 2.7 சதவீதமாகக் குறைத்துள்ளது.

G20 உச்சி மாநாடு

G20 உச்சி மாநாடு

இந்தோனேசியாவில் நவம்பர் 15-16 ஆம் தேதிகளில் நடக்க இருக்கும் G20 உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்க ஐஎம்எப் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் பொருளாதார வளர்ச்சிக்கான உயர் அதிர்வெண் குறியீடுகள் அதாவது high-frequency indicators தரவுகள் மூலம் உலக நாடுகளின் பொருளாதாரம் இருண்டதாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது என்று கூறியது, அதிலும் குறிப்பாக ஐரோப்பாவில் மோசமாக இருப்பதைத் தெரிவித்துள்ளது.

வளர்ச்சி, பணவீக்கம்

வளர்ச்சி, பணவீக்கம்

ஐஎம்எப் அறிக்கையில் சமீபத்திய கொள்முதல் மேலாளர் குறியீடுகள் தரவுகள் படி உற்பத்தி மற்றும் சேவைத் துறை ஜி20 நாடுகளில் மோசமாக இருப்பதைக் காட்டுகிறது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவிலும், பணவீக்கம் பல மாதங்களாக அதிகமாக இருப்பது தெளிவாகக் தெரிகிறது.

ஐரோப்பா

ஐரோப்பா

ஐரோப்பாவில் ஏற்பட்டு உள்ள எனர்ஜி பிரச்சனை இப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதைத் தாண்டி, ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க அளவுகளை மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. இதைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட வட்டி விகித உயர்வு சர்வதேச பொருளாதார வளர்ச்சியை மேலும் மோசமாக்கியுள்ளது.

G20 நாடுகள் பட்டியல்

G20 நாடுகள் பட்டியல்

G20 நாடுகள் பட்டியலில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அடங்கியது.

சர்வதேச பொருளாதாரம்

சர்வதேச பொருளாதாரம்

G20 நாடுகள் என்பது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவிகிதம், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதத்தையும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டு சர்வதேச வளர்ச்சி அளவீட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. அதிலும் குறிப்பாக ஜி20 நாடுகளின் டாப் 5 நாடுகளின் வளர்ச்சி அளவீடு சர்வதேசச் சந்தையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்துகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IMF says Global economy gloomier than before, cuts 2023 growth to 2.7 percent; Cautioned Europe economy crisis

IMF says Global economy gloomier than before, cuts 2023 growth to 2.7 percent; Cautioned Europe economy crisis
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X