Indian Economic survey: 1.24 லட்சம் நிறுவனங்கள்.. இந்தியா 3-வது இடம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு 70,000 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாம். ஆனால், கடந்த 2018-ம் ஆண்டில் 1,24,000 நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டு இருக்கிறதாம். உலக அளவில் புதிதாக நிறுவனங்கள் தொடங்கப்படுவதில், உலக அரங்கில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறதாம்.

கடந்த 2006 - 2014 காலகட்டத்தில் இந்தியாவில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படும் எண்ணிக்கை வளர்ச்சி 3.8 சதவிகிதமாக இருந்ததாம். ஆனால் கடந்த 2014 - 18 ஆண்டு காலங்களில் இந்தியாவில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படும் எண்ணிக்கை வளர்ச்சி 12.2 % அதிகரித்து இருக்கிறதாம்.

Indian Economic survey: 1.24 லட்சம் நிறுவனங்கள்.. இந்தியா 3-வது இடம்..!

இந்தியாவில் உற்பத்தி, விவசாயம், கட்டுமானம் துறை சார்ந்த நிறுவனங்களை விட, சேவை துறை சார்ந்த நிறுவனங்களே அதிகம் தொடங்கப்பட்டு இருக்கிறதாம். இந்தியாவில் டெல்லி, உத்திரப் பிரதேசம், மிசோரம், கேரளா, அந்தமான், ஹரியானா போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் டெரிட்டரிகளில் அதிகம் தொழில்முனைவோர்கள் சார்ந்த நடவடிக்கைகள் நடப்பதாகவும் சொல்கிறது இந்திய பொருளாதார சர்வே.

உற்பத்தி துறை சார்ந்த வேலைகளில் குஜராத், மேகாலயா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கிறதாம். கடந்த 2014-ம் ஆண்டில், உலக அளவில், எளிதில் வியாபாரம் செய்யக் கூடிய நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு 142-வது இடம் இருந்தது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவுக்கு 63-வது இடம் கிடைத்து இருக்கிறது.

விமான நிலையம் மற்றும் துறை முகங்களில் சுங்கச் சாவடிகளில் சரக்குகளை சோதனை செய்து வெளியே அனுப்பும் நேரம் கணிசமாக குறைக்கப்பட்டு இருக்கிறதாம். அதே போல துறைமுகங்களில், ஒரு கப்பல் ஒரு துறை முகத்துக்கு வந்ததில் இருந்து, சரக்குகளை இறக்கி, அந்த கப்பலை துறை முகத்தை விட்டு வெளியே அனுப்பும் Turnaround Time of Ships பாதிக்கு பாதியாக குறைத்து இருக்கிறார்களாம். கடந்த 2011 - 12 நிதி ஆண்டில் இந்த Turnaround Time of Ships 4.68 நாளாக இருந்ததாம். ஆனால் கடந்த 2018 - 19-ம் ஆண்டில் இது Turnaround Time of Ships2.48 நாளாக குறைந்து இருக்கிறதாம்.

இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் என்கிற இலக்கை அடைய வேண்டும் என்றால், வியாபாரத்துக்கு தோதான கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும். அதே நேரத்தில் அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் சேர்ந்து கொண்டு வியாபாரம் செய்யும் க்ரோனி கேப்பிட்டலிசக் கொள்கைகளைக் கொண்டு வந்தால், நாட்டில் செல்வமும், மதிப்பும் நாசமாகிவிடும் எனவும் சொல்கிறது இந்தியப் பொருளாதார சர்வே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In india 1.24 lakh firms started in 2018

In starting more new firms, India is in third place. in 2018 alone in india 1.24 lakh firms started. In ease of doing business india is in 63rd place.
Story first published: Friday, January 31, 2020, 15:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X