அக்டோபர் 2019-ல் வரலாற்று சாதனை படைத்த யூ பி ஐ பரிவர்த்தனைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யூ பி ஐ - Unified Payments Interface (UPI) என்று அழைக்கப்படும் இந்த சேவையை, மத்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட என் பி சி ஐ என்கிற நிறுவனம் தான் கடந்த 2016-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த யூ பி ஐ கொண்டு வந்ததில் இருந்து இந்தியாவில், ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்வது அளவுக்கு அதிகமாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது. அதற்கு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பும் ஒரு அழுத்தமான காரணம் தான்.

இப்போது இந்த யூ பி ஐ பணப் பரிவர்த்தனை வழியாக, கடந்த அக்டோபர் 2019-ல், 1.14 பில்லியன் பணப் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறதாம். அதாவது 114 கோடி பணப் பரிவர்த்தனைகள். இதையே அக்டோபர் 2018 உடன் ஒப்பிட்டால் பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை சுமார் 138 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.

அக்டோபர் 2019-ல் வரலாற்று சாதனை படைத்த யூ பி ஐ பரிவர்த்தனைகள்..!

சரி எவ்வளவு பணம் கை மாறி இருக்கிறது..? அக்டோபர் 2019-ல் 114 கோடி பணப் பரிவர்த்தனைகள் வழியாக, சுமார் 1.91 லட்சம் கோடி ரூபாய் பணம் கை மாறி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019-ல் 1.46 லட்சம் கோடி ரூபாய் கை மாறிய தொகை உடன், இந்த அக்டோபர் 2019-ல் கை மாறிய தொகையை கணக்கிட்டால் சுமார் 30 சதவிகிதம் அதிகம்.

சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கைகளின் படி, கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், யூ பி ஐ வழியாக நடக்கும் பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை, டெபிட் கார்டுகள் வழியாக நடக்கும் பணப் பரிவர்த்தனைகளை விட 1.2 மடங்கு அதிகம் என நமக்கே அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது , யூ பி ஐ அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று ஆண்டுகளில் 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள், இந்த யூ பி ஐ சேவையை பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். அடுத்த மூன்று வருடங்களுக்குள் இந்த எண்ணிக்கை சுமார் 5 மடங்கு அதிகரித்து 500 மில்லியன் பயன்பாட்டாளர்கள் இந்த யூ பி ஐ சேவையைப் பயன்படுத்துவார்கள் எனச் சொல்கிறார் என் பி சி ஐ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி திலீப் அஸ்பே (Dilip Adbe).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In October 2019 UPI transactions hits high of 1.14 billion

Transactions via UPI reached a fresh milestone, hitting a new high of 114 crore in October. 1.91 lakh crore worth of money transferred through these 114 crore transactions.
Story first published: Saturday, November 2, 2019, 12:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X