இந்தியாவை நம்பியிருக்கும் உலக நாடுகள்..! #Molnupiravir

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஒருபக்கம் வேக்சின் தயாரிப்பு அதிகரிக்கப்பட்டாலும், உலக மக்களுக்கு அனைவருக்கும் கொடுப்பதில் பெரிய அளவிலான தாமதம் ஏற்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் வேக்சின் தட்டுப்பாடு மற்றும் உற்பத்தியில் நடந்த தாமதம் காரணமாகக் கொரோனா தொற்றுக்கான வேக்சின் வந்து கிட்டதட்ட 1.5 வருடம் ஆன நிலையிலும் இந்த மக்களுக்கு முழுமையாகக் கோவிட் வேக்சின் அளிக்க முடியவில்லை.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க தற்போது Molnupiravir என்ற புதிய கோவிட் மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மாத்திரை தான் 3வது கொரோனா அலையைக் கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் Molnupiravir மாத்திரைக்காக உலக நாடுகள் தற்போது இந்தியாவை நம்பியிருக்கிறது. முதல் இரண்டு அலைகளில் கோவிட் வேக்சினுக்காக இந்திய உலக நாடுகளை நம்பியிருந்த வேளையில் தற்போது நிலை தலைகீழாக மாறியுள்ளது.

2021ஆம் ஆண்டில் ஆப்பிள் டிம்குக் சம்பளம் இதுதான்.. சுந்தர் பிச்சை முந்துவாரா..?!2021ஆம் ஆண்டில் ஆப்பிள் டிம்குக் சம்பளம் இதுதான்.. சுந்தர் பிச்சை முந்துவாரா..?!

மோல்னுபிராவிர் மாத்திரை

மோல்னுபிராவிர் மாத்திரை

ஓமிக்ரான் தொற்று பரவல் மூலம் உலகளவில் கொரோனா-வின் மூன்றாவது அலை அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ள நிலையில், மோல்னுபிராவிர் (molnupiravir) போன்ற கோவிட்-19 வைரஸை எதிர்க்கும் ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான உலகளாவிய மையமாக இந்தியா மாறும் என்று ஃபிட் சொல்யூஷன்ஸ் தெரிவித்துள்ளது.

சிப்லா, சன் பார்மா, டாக்டர் ரெட்டி

சிப்லா, சன் பார்மா, டாக்டர் ரெட்டி

 

இந்தியாவில் தற்போது சிப்லா, சன் பார்மா, டாக்டர் ரெட்டி போன்ற முன்னணி பார்மா நிறுவனங்கள் molnupiravir மாத்திரைகளைத் தயாரிப்பதற்கான அவசர கால ஒப்புதல் இந்திய மருத்துத் துறை அளித்துள்ளது.

இந்தியா

இந்தியா

இதனால் அடுத்தச் சில வாரத்தில் கொரோனா தொற்றைத் தடுக்கும் molnupiravir மாத்திரைகள் இந்திய நிறுவனங்கள் தயாரித்து இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது இந்தியா.

மன்சுக் மாண்டவியா

மன்சுக் மாண்டவியா

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா கூறுகையில் இந்தியாவில் molnupiravir மாத்திரைகளைச் சுமார் 13 நிறுவனங்கள் தயாரிக்கிறது. மேலும் நாட்டில் உள்ள மற்ற மருந்து நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என பின்ச் தெரிவித்துள்ளது.

மோல்னுபிராவிர் விலை

மோல்னுபிராவிர் விலை

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெர்க் & கோ மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூட்டிக்ஸ் ஆகிய இரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோவிட்-19 எதிர்ப்பு மாத்திரை மோல்னுபிராவிர்-ன் விலை அமெரிக்காவில் 712 டாலர் ஆகும்.

டாக்டர் ரெட்டி மோல்னுபிராவிர் மாத்திரை

டாக்டர் ரெட்டி மோல்னுபிராவிர் மாத்திரை

இந்தியாவில் 5 நாள் சிகிச்சைக்குத் தேவையான டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் மோல்னுபிராவிர் மாத்திரைகள் வெறும் ரூ. 1400 ரூபாய் ($18.79) தான். இதன் மூலம் டாக்டர் ரெட்டி தயாரிக்கும் ஒரு மாத்திரையின் விலை வெறும் 35 ரூபாய் மட்டுமே.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள்

ஏழை மற்றும் நடுத்தர மக்கள்

கோக்சின் காட்டிலும் மாத்திரை தயாரிப்பு எளிதாகச் செய்யக் கூடியது. இதேவேளையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மோல்னுபிராவிர் மாத்திரை விலை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் வேக்சின் பாதுகாப்பை விரைவாகவும், வேகமாகவும் கொடுக்க முடியும்.

வேக்சின் தடைகள்

வேக்சின் தடைகள்

இதுமட்டும் அல்லாமல் தற்போது வேக்சின் தயாரிப்பு, விநியோகம், போக்குவரத்து, மக்களுக்கு அளிக்கப்படும் விதம், நேரம் செலவுகள் என அனைத்தும் அதிகமாகவும், சிரமம் ஆகவும் இருக்கும் நிலையில், மோல்னுபிராவிர் மாத்திரைகள் மிகவும் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுவது மட்டும் அல்லாமல் தற்போது வேக்சின் சப்ளை செயினில் இருக்கும் பாதிப்புகளை எளிதாகத் தீர்க்க முடியும்.

6 மாதம் முதல் 1 வருடம்

6 மாதம் முதல் 1 வருடம்

தற்போது சந்தை கணிப்பின் படி அடுத்த 6 மாதத்தில் வேக்சின் கிடைக்காத அனைத்து நாடுகளுக்கும் போதுமான மோல்னுபிராவிர் மாத்திரைகளைப் பெறும், இதனால் அடுத்த ஒரு வருடத்தில் கோவிட் இல்லாத வாழ்க்கையை மக்கள் வாழ முடியும் என நம்பப்படுகிறது. நம்பிக்கை அதுதானே எல்லாம்.. நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India can be Global Hub for COVID-19 pill molnupiravir

India can be Global Hub for COVID-19 pill molnupiravir இந்தியாவை நம்பியிருக்கும் உலக நாடுகள்..! #Molnupiravir
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X