சென்னை: இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்தியாவில் பல முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் சிமெண்ட் உற்பத்தியில் இறங்கியுள்ளதால் இத்துறையில் பெரும் சலசலப்பு உருவாகியுள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சொத்து விற்பனை மூலம் JSW நிறுவனத்திற்குப் புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகியுள்ளது. இது இத்துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அதானி குழுமத்திற்குப் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அதிகப்படியான கடனில் இருக்கும் காரணத்தால் தனது கோர் வர்த்தகத்தில் அல்லாத சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்தது.
477 கோடி ரூபாய்
இதன் அடிப்படையில் இந்தியா சிமெண்ட் Springway Mines Pvt Ltd நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் JSW நிறுவனத்திற்குச் சுமார் 476.87 கோடி ரூபாய் மதிப்பிலான தொகைக்கு விற்பனை செய்துள்ளது.
JSW நிறுவனம்
JSW நிறுவனம் Springway Mines Pvt Ltd பங்குகளைக் கைப்பற்றிய அடுத்த நாளே அதாவது இன்று சுமார் 3200 கோடி ரூபாய் முதலீட்டில் வருடத்திற்கு 5 மில்லியன் டன் அளவிலான சிமெண்ட் உற்பத்தி செய்யும் கிரீன்பீல்டு உற்பத்தி அலையை மத்திய பிரதேசத்திலும், ஸ்பிலிட் கிரைன்டிங் யூனிட்-ஐ உத்தரப் பிரதேசத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
106 மில்லியன் டன் சுண்ணாம்புக்கல் வளம்
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து Springway Mines கைப்பற்றிய நிலையில் சுமார் 106 மில்லியன் டன் அளவிலான சுண்ணாம்புக்கல் வளங்கள் 2065 ஆம் ஆண்டு வரையில் தனது கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தச் சுண்ணாம்புக்கல் சுரங்கம் மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
JSW சிமெண்ட் உற்பத்தி
JSW நிறுவனம் சுண்ணாம்புக்கல் வளங்கள் எடுப்பதற்கும், அதைச் சிமெண்ட் உற்பத்தியில் பயன்படுத்துவதற்கும் பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்றுவிட்டது. இதன் மூலம் விரைவில் சிமெண்ட் உற்பத்தியைத் துவங்க உள்ளது JSW நிறுவனம்.
அதானி குரூப்
கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குரூப் ஏற்கனவே 2 சிமெண்ட் நிறுவனத்தை வாங்கியுள்ள நிலையில் 3வதாக ஒரு சிமெண்ட் நிறுவனத்தை வாங்க ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் சிமெண்ட் பிரிவை மொத்தமாக வாங்குவதற்காக அதானி குரூப் பேச்சுவார்த்தை துவங்கி இறுதிக்கட்டத்தில் உள்ளது.
ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ்
ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனத்தின் சிமெண்ட் பிரிவை கைப்பற்ற சுமார் 5000 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொழிற்சாலை மூலம் ஆண்டுக்கு 2 மில்லியன் டன் சிமெண்ட்-ஐ உற்பத்தி செய்ய முடியும்.
அதானிக்கு நெருக்கடி.. அல்ட்ராடெக் பாவம்..
தற்போது JSW நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியை மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் துவங்குவதால் போட்டி அதிகரிக்க உள்ளது.
ஏற்கனவே ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்திற்கு கடுமையான போட்டி அதானி மூலம் வரும் நிலையில் தற்போது JSW-ம் வந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications