கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கட்டுபாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதற்கிடையிலும் சற்று ஆறுதல் கொடுக்க கூடிய விஷயம் என்னவெனில், தடுப்பூசி நடைமுறைக்கு வந்துள்ளது தான்.

 

ஒரு புறம் ஆறுதல் கொடுத்தாலும், தாக்கம் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசியின் விலையும் இனி வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சீரம் நிறுவனம் இன்று தடுப்பூசி விலையை மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், இதே தனியாருக்கு 600 ரூபாய்க்கும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

மே 1ல் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே பல இடங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், மே, ஜூன் மாதங்களில் இன்னும் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைவு தான்

விலை குறைவு தான்

மருந்து உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகரிப்பதாக கூறியுள்ள நிலையில், அமெரிக்க ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசியின் விலையை ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவுதான் என சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. மேலும் இன்னும் 4 - 5 மாதங்களில் சில்லறை விற்பனையிலும் தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

விலை ஏற்றம் காணலாம்
 

விலை ஏற்றம் காணலாம்

எனினும் தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தடுப்பூசியானது, 1000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படலாம். ஏனெனில் இது தேவை அதிகரிக்கும்போது விலை இன்னும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது. .

போட்டி உருவாகலாம்

போட்டி உருவாகலாம்

குறிப்பாக ஜூன் மாதத்திற்குள் இந்தியாவில் 200 மில்லியன் வரை உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. தற்போது சீரம் மற்றும் பாரத் பயோடெக் மற்றும் ஸ்புட்னிக் உள்ளிட்டவற்றை அனைத்தும் சேர்ந்து 70 மில்லியனாக உள்ளது. இதே நேரத்தில் தேவையும் அதிகரித்து வருவதால், இது ஒரு போட்டித் தன்மையை உருவாக்கலாம். இதனால் விலையும் அதிகரிக்கலாம். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகளவில் தேவை உள்ளதால் விலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India may have 200 million vaccines by june: may cost upto Rs.1000 per dose in private hospitals

Coronavirus impact.. India may have 200 million vaccines by june: may cost upto Rs.1000 per dose in private hospitals
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X