Infosys நாரயணமூர்த்தி என்ன இப்படி சொல்லிட்டார்.. இந்தியாவை விட சிங்கப்பூர் சூப்பராம்.. ஏன் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாரயண மூர்த்தி, சில தினங்களுக்கு முன்பு தான், நிறுவனத்தின் செயல்பாட்டில் நிறுவனர்கள், புரோமோட்டர்கள் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்காமல் இருந்தது, தான் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறி பரபரப்பினை ஏற்படுத்தி இருந்தார்.

இவ்வாறு செய்திருந்தால் தலைமை பொறுப்புகளில் பொறுப்பான ஒருவரை அமர்த்தியிருக்கலாம் என்றும் கூறியிருந்தார். இந்த சூழல் மறைவதற்குள் தற்போது மற்றொரு பரபரப்பான கருத்தினை தெரிவித்துள்ளார்.

நான் தான் கடைசி ஜோக்கர்.. இன்போசிஸ் நந்தன் நிலேகனி..! நான் தான் கடைசி ஜோக்கர்.. இன்போசிஸ் நந்தன் நிலேகனி..!

இந்தியா Vs சிங்கப்பூர்

இந்தியா Vs சிங்கப்பூர்

ஜிஎம்ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வெள்ளி விழாவில் கலந்து கொண்ட நாரயண மூர்த்தி, இந்தியாவில் ஊழல், அசுத்தமான சாலைகள் மற்றும் மாசுபாடு உள்ளது. ஆனால் சிங்கப்பூரில் அப்படி இல்லை. தூய்மையான சாலைகள். மாசுபாடு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தலைவராக நினைத்துக் கொள்ளுங்கள்

தலைவராக நினைத்துக் கொள்ளுங்கள்

மாணவர்களிடையே விழாவில் உரையாற்றிய நாரயண மூர்த்தி, ஒரு குறைபாட்டை மாற்றத்திற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும். நீங்கள் உங்களை தலைவராக கற்பனை செய்து கொள்ளுங்கள். வேறு யாராவது அந்த இடத்தை பிடிக்க நீங்கள் காத்திருக்காதீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே யதார்த்தம் என்றும் கூறியுள்ளார்.

யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்
 

யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் யதார்த்தமானது என்னவெனில் ஊழல், அசுத்தமான சாலைகள், மாசு என பல பிரச்சனைகள் உண்டு. பல நேரங்களில் அதிகாரம் என்பது இல்லை. ஆனால் சிங்கப்பூரில் சுத்தமான சாலைகள் மற்றும் அதிகாரம் என்பது அதிகம். ஆக ஒரு யதார்த்தத்தினை உருவாக்குவது என்பது உங்களின் பொறுப்பு என்றும் நாரயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள்

வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள்

இளைஞர்கள் சமுதாயத்தில் மாற்றத்தினை கொண்டு வரும் மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய நலனை காட்டிலும், சமூதாயத்தின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.

ஜிஎம்ஆர் ராவினை உதாரணமாக காட்டி, மாணவர்கள் அவரை உத்வேகமாக எடுத்து கொள்ள வேண்டும். அவரைபோல தொழிலபதிராக மாறி பலருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குங்கள். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே வறுமையை ஒழிக்கும் வழி. இது வறுமையில் உள்ள மக்களுக்கு உதவுவதற்கும் இது தான் வழி. மொத்தத்தில் ஜிஎம்ஆர் குழுமத்தின் தலைவர் ஜி எம் ராவ், இன்றைய கால இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம். உந்துதல் எனவும் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

இன்போசிஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் அதன் 40 ஆண்டு விழாவினை கொண்டாடியது. அதில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண முர்த்தி தனது பயணத்தினை நினைவுகூர்ந்தார். அதில் ஒருவர் திறனுடன் இருந்தால் அந்த நபரின் தேசியம், பாரம்பரியம், யாருடைய குழந்தை என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படக் கூடாது என்றும் கூறியிருந்தார்.

எப்போது எட்டும்?

எப்போது எட்டும்?

உண்மையில் மற்ற அண்டை நாடுகளை காட்டிலும் பல வகையிலும் பலம் வாய்ந்த நாடாகவே பார்க்கப்பட்டாலும், இந்தியாவில் சுற்றுசூழல் மாசு மற்றும் ரோடு வசதிகள் என்பதையும், ஊழல் என்பதையும் அரசு குறைக்க வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளது. ஆக இதனை குறைத்தால் நிச்சயம் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பெரியளவில் வளர்ச்சி காணலாம். எனினும் இந்தியா அப்படி ஒரு நிலையை எப்போது எட்டும்? என்பது தான் பெரும் கேள்வியே. எனினும் நம்மை சுற்றிலும் நாமே சுத்தமாக வைத்துக் கொண்டாலே அதுவும் நம் பங்களிப்பாகவே இருக்கும்...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

india means corruption, dirty roads and pollution: infosys Narayana Murthy

India means corruption, dirty roads and pollution. But Infosys Narayana Murthy has revealed that Singapore has clean roads and no pollution.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X